இசுரேலில் சமயம்

இசுரேலில் சமயம் (Religion in Israel), இசுரேல் நாட்டில் யூத சமயமே பெரும்பான்மையாகப் (73.6%) பயிலப்படுகிறது. யூத சமயத்திற்கு அடுத்து இசுலாம் 18.1%, கிறிஸ்துவம் 1.9%, துருஸ் சமயத்தவர் 1.6% மற்றும் பிற சமயத்தவர் 4.8% உள்ளனர். பிற சமயத்தவர்களில் பகாய் சமயத்தவர்கள் கைஃபாவிலும்; மேற்குக் கரையின் வடக்கில் சமாரியர்கள் வாழ்கின்றனர்.


இசுரேலில் சமயம் (2016)[1]

  யூதம்இலோனி (33.1%)
  யூதம்–மார்சோட்டி (24.3%)
  யூதம்–தாட்டி (8.8%)
  யூதம்–கரேடி (7.3%)
  கிறித்தவம் (1.9%)
  ஏனையோர் (4.8%)

சமயப் பிரிவினர்

தொகு

இசுரேலில் பெரும்பான்மையான சமயமாக யூதம் விளங்குகிறது.[2] 2022ல் 73.6% இஸ்ரேலின் யூத மக்கள் தொகை 73.6% உள்ளது.[3]

யூதம்

தொகு

இசுரேலின் மக்கள் தொகையில் யூதர்கள் 71.1% ஆகும். யூதப் பிரிவுகளில் ஹிலோனி யூதர்கள் 33.1%, மசோர்திம் யூதர்கள் 24.3%, பழமைவாத யூதர்கள் 8.8%, ஹரேதி யூதர்கள் 7.3% ஆக உள்ளனர்.

பழமைவாத யூதர்கள்

தொகு

பழமைவாத யூதர்களில் பல பிரிவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களில் பழமைவாத யூதர்களை ஹரேதி யூதர்கள் (தீவிர பழமைவாதிகள்) எனபர். தீவிர பழமைவாத யூதர்களின் மக்கள் தொகை 1.1 மில்லியன் (14%) ஆகும்.[4]

பழமைவாதமற்ற யூதர்கள்

தொகு

2013 கணக்குப்படி, பழமைவாதமற்ற சீர்திருத்த யூதர்கள்[5][6][7][8][9] இஸ்ரேலின் யூத மக்கள் தொகையில் 7% ஆக உள்ளனர்.

உலகில் சமாரியர்களின் மக்கள் தொகை இஸ்ரேல் நாட்டில் மட்டும் காணப்படுகிறது. இவர்கள் ஆப்ரகாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[10][11] 1 நவம்பர் 2007 அன்று சமாரியர்களின் மக்கள் தொகை 712 பேர் மட்டுமே.[12] சமாரியர்கள் மேற்குக் கரையில் உள்ள ஜெரிசிம் மற்றும் ஹோலோன் குன்றுகளில் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவம்

தொகு

இஸ்ரேலிய கிறிஸ்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் அரேபியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பிரிவினர் ஆவார். அரபுக் கிறித்தவர்கள் இஸ்ரேலில் மிகவும் படித்த குழுவினர் ஆவார். [13]தற்போது அரேபியக் கிறித்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிவதால், கலப்புத் திருமணங்கள் மேற்கொள்கின்றனர்.

கிழக்கின் பழமைவாதம் & கத்தோலிக்கம்

தொகு

இஸ்ரேலின் பெரும்பாலான கிறித்தவர்கள் கத்தோலிக்க கிழக்கு மரபுவழி திருச்சபை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களது புனிதத் தலங்கள் எருசலேம், பெத்லகேம் மற்றும் நாசரேத்து ஆகும்.

சீர்திருத்தத் திருச்சபை

தொகு

இஸ்ரேல் மக்கள் தொகையில் சீர்திருத்தத் திருச்சபை கிறித்தவர்கள் 1% மட்டுமே. [14].[15]

இசுலாம்

தொகு

இஸ்ரேலிய மக்கள் தொகையில் அரபு முஸ்லிம்கள் 18.1% ஆக உள்ளனர். இவர்களது புனித தலம் .எருசலேத்தில் உள்ள கோவில் மலை ஆகும் இஸ்ரேலிய முஸ்லீம் களில் பெரும்பான்மையோர் சுன்னி இஸ்லாமியர்கள் ஆவர். அகமதியா முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ளனர். [16]

துருஸ்

தொகு

இஸ்ரேலில் ஞானக் கொள்கை சமயத்தைப் பின்பற்றும் துருஸ் சமயத்தினர் மிகவும் பழமையானவர்கள்.[17]இவர்கள் ஏக இறைவனை வணங்குபவர்கள். இம்மக்கள் இஸ்ரேலின் வடக்கு மாவட்டம், கைஃபார் மாவட்டம் மற்றும் வடக்கு கோலான் குன்றுகள் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[18]

பகாய் சமயம்

தொகு

இஸ்ரேலில் பகாய் நம்பிக்கையாளர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இவர்களது ஆன்மீக குரு ஏக்கர் நகரத்தில் துருக்கிய உதுமானியப் பேரரசால் 1870களில் சிறை வைக்கப்பட்டார். இவர்களது புனித தலங்கள் ஏக்கர் மற்றும் கைஃபா நகரங்கள் ஆகும். இச்சமயத்தை நிறுவியவர் பகாவுல்லா.

இந்து சமயம்

தொகு

2002ல் இஸ்கான் அமைப்பினர் இஸ்ரேலில் கைஃபா மாவட்டம்|கைஃபா மாவட்டத்தில்]] மேற்குக் கரையின் எல்லையில் உள்ள கட்சிர்-ஹரிஷ் நகரத்தில் வாழ்கின்றனர்.[19]

இஸ்ரேலிய சமயத்தவர்களின் பட்டியல்

தொகு

2016 கணக்கெடுபின்படி இஸ்ரேலிய சமயத்வர்கள் எண்ணிக்கை (ஆயிரங்களில்)[20][21][3][22]

ஆண்டு துருஸ் % கிறிஸ்தவம் % இசுலாம் % யூதம் % மொத்தம்
1948 ... ... ... 758.7 ...
1950 15.0 1.09 36.0 2.63 116.1 8.47 1,203.0 87.80 1,370.1
1960 23.3 1.08 49.6 2.31 166.3 7.73 1,911.3 88.88 2,150.4
1970 35.9 1.19 75.5 2.50 328.6 10.87 2,582.0 85.44 3,022.1
1980 50.7 1.29 89.9 2.29 498.3 12.71 3,282.7 83.71 3,921.7
1990 82.6 1.71 114.7 2.38 677.7 14.05 3,946.7 81.85 4,821.7
2000 103.8 1.63 135.1 2.12 970.0 15.23 4,955.4 77.80 6,369.3
2010 127.5 1.66 153.4 1.99 1,320.5 17.16 5,802.4 75.40 7,695.1
2011 129.8 1.66 155.1 1.98 1,354.3 17.28 5,907.5 75.38 7,836.6
2012 131.5 1.65 158.4 1.98 1,387.5 17.38 5,999.6 75.14 7,984.5
2013 133.4 1.64 160.9 1.98 1,420.3 17.46 6,104.5 75.04 8,134.5
2014 135.4 1.63 163.5 1.97 1,453.8 17.52 6,219.2 74.96 8,296.9
2015 137.3 1.62 165.9 1.96 1,488.0 17.58 6,334.5 74.84 8,463.4
2016 139.3 1.61 168.3 1.95 1,524.0 17.66 6,446.1 74.71 8,628.6
2017 141.2 1.60 171.9 1.95 1,561.7 17.75 6,554.5 74.50 8,797.9
2018 143.2 1.60 174.4 1.95 1,598.4 17.82 6,664.4 74.32 8,967.6
2019 145.1 1.59 177.2 1.94 1,635.8 17.90 6,773.2 74.10 9,140.5
2020 146.8 1.58 179.5 1.93 1,671.3 17.99 6,873.9 73.99 9,289.8

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Israel's Religiously Divided Society". Pew Research Center's Religion & Public Life Project. 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
  2. "Population, by Population Group" (PDF). Monthly Bulletin of Statistics. Israel Central Bureau of Statistics. 31 December 2013. Archived from %/publications13/yarhon0413/pdf/b1.pdf the original (PDF) on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014. {{cite web}}: Check |url= value (help)
  3. 3.0 3.1 Israel's Independence Day 2019 (PDF) (Report). Israel Central Bureau of Statistics. 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  4. "Ultra-Orthodox Jewish Community in Israel: Facts and Figures (2022)". Jewish Virtual Library. A Project of AICE. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  5. Tabory, Ephraim (2004) [1990]. "Reform and Conservative Judaism in Israel". In Goldscheider, Calvin; Neusner, Jacob (eds.). Social Foundations of Judaism (Reprint ed.). Eugene, Or: Wipf and Stock Publ. pp. 240–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59244-943-3.
  6. Tabory, Ephraim (2004). "The Israel Reform and Conservative Movements and the Marker for the Liberal Judaism". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 285–314.
  7. Deshen, Shlomo; Liebman, Charles S.; Shokeid, Moshe, eds. (2017) [1995]. "Americans in the Israeli Reform and Conservative Denominations". Israeli Judaism: The Sociology of Religion in Israel. Studies of Israeli Society, 7 (Reprint ed.). London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56000-178-2.
  8. Karesh & Hurvitz 2005, ப. 237.
  9. Beit-Hallahmi 2011, ப. 387.
  10. Pummer 1987.
  11. Mor, Reiterer & Winkler 2010.
  12. "Developed Community", A.B. The Samaritan News Bi-Weekly Magazine, 1 November 2007.
  13. Druckman, Yaron (23 December 2012). "Christians in Israel: Strong in education". Ynetnews. http://www.ynetnews.com/articles/0,7340,L-4323529,00.html. 
  14. Zylstra, Sarah. "Israeli Christians Think and Do Almost the Opposite of American Evangelicals". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
  15. "Christian tourism to Israel". mfa.gov.il. Israel Ministry of Foreign Affairs. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
  16. Ori Stendel (1996). The Arabs in Israel. Sussex Academic Press. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1898723240. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  17. "The Druze population in Israel - a collection of data on the occasion of the Prophet Shuaib holiday" (PDF). CBS - Israel. Israel Central Bureau of Statistics. 17 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  18. Identity Repertoires among Arabs in Israel, Muhammad Amara and Izhak Schnell; Journal of Ethnic and Migration Studies, Vol. 30, 2004
  19. "Waves of Devotion". 30 June 2007.
  20. "Statistical Abstract of Israel 2017". Central Bureau of Statistics.
  21. "Statistical Abstract of Israel 2014 - No. 65 Subject 2 - Table No. 2".
  22. Population - Statistical Abstract of Israel 2021 - No.72 CBS

குறிப்புகள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேலில்_சமயம்&oldid=3849099" இலிருந்து மீள்விக்கப்பட்டது