இந்தியாவின் வருவாய் வட்டங்கள்


இந்தியாவின் வருவாய் வட்டங்கள் அல்லது இந்தியாவின் தாலுகாக்கள் (Tehsils of India) என்பது இந்திய நிர்வாக அலகான மாவட்டங்களின் துணை வருவாய் மாவட்டங்கள் ஆகும். வருவாய் வட்டங்கள் பல இந்திய மாநிலங்களில் தாலுகா என்றும், மண்டல் என்றும் சமூக வளர்ச்சி வட்டாரம் (Community Development Block) என்றும் உட்கோட்டம் என்றும், வட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்திய நிர்வாக அலகுகள்

மாநிலவாரியாக இந்தியாவின் தாலுகாக்கள் தொகு

இந்திய மாநிலங்களில், தாலுகா எனப்படும் துணை மாவட்டங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.[1]

மாநிலம் துணை மாவட்டத்தின் பெயர் துணை மாவட்டங்களின்
எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம் மண்டல் 661
அருணாசலப் பிரதேசம் வட்டம் 149
அசாம் தாலுகா 155
பிகார் சமூக வளர்ச்சி வட்டாரம் 533
சத்தீஸ்கர் தாலுகா 97
கோவா தாலுகா 12
குஜராத் தாலுகா 248[2]
அரியானா தாலுகா 67
இமாசலப் பிரதேசம் தாலுகா 109
ஜம்மு காஷ்மீர் தாலுகா 59
ஜார்கண்ட் சமூக வளர்ச்சி வட்டாரம் 210
கர்நாடகம் தாலுகா 175
கேரளா தாலுகா 63
மத்தியப் பிரதேசம் தாலுகா 353
மகாராட்டிரம் தாலுகா 353
மணிப்பூர் உட்கோட்டம் 38
மேகாலயா சமூக வளர்ச்சி வட்டாரம் 39
மிசோரம் கிராம வளர்ச்சி வட்டாரம் 22
நாகாலாந்து வட்டம் 93
ஒடிசா காவல் நிலையம் 485
பஞ்சாப் தாலூகா 72
இராஜஸ்தான் தாலுகா 268
சிக்கிம் உட்கோட்டம் 9
தமிழ்நாடு வருவாய் வட்டம் 311
தெலங்கானா தாலுகா 446
திரிபுரா சமூக வளர்ச்சி வட்டாரம் 38
உத்தரப் பிரதேசம் தாலுகா 316
உத்தரகாண்ட் தாலுகா 49
மேற்கு வங்காளம் சமூக வளர்ச்சி வட்டாரம் 341
ஒன்றியப் பகுதிகள் துணை மாவட்டத்தின் பெயர் துணை மாவட்டங்களின்
எண்ணிக்கை
அந்தமான் நிக்கோபார் தீவுகள் தாலுகா 7
சண்டிகர் தாலுகா 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தாலுகா 1
தாமன், தியு தாலுகா 2
தில்லி தாலுகா 27
இலட்சத்தீவுகள் உட்கோட்டம் 4
புதுச்சேரி நகரப் பஞ்சாயத்து 10

மொத்தம்: அனைத்திந்தியா அளவில் = 5564

மேற்கோள்கள் தொகு

  1. "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs". Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi. 2010–2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
  2. "State Govt Announces 23 New Talukas". DNA (subscription required). 10 September 2013. Archived from the original on 6 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)