இந்திய துணைக் கண்டத்தில் பெண்களின் வரலாறு
இந்திய துணைக் கண்டத்தில் பெண்களின் வரலாறு (History of women in the Indian subcontinent) இந்தியத் துணைக்கண்டத்தில் பெண்களின் வரலாற்றைப் படிப்பது என்பது ஒரு பெரிய அறிவார்ந்த மற்றும் பிரபலமான துறையாகும். இதில் பல அறிவார்ந்த புத்தகங்களும், கட்டுரைகளும், அருங்காட்சியக கண்காட்சிகளும், பள்ளிகளும் பல்கலைக்கழகங்களில் படிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
பண்டைய, ஆரம்பகால, இடைக்காலங்கள்
தொகுவேதகாலத்தில் பெண்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆண்களுடன் உயர் தகுநிலையை அனுபவித்தனர். பழங்கால இந்திய இலக்கணவியலாளர்களான பதஞ்சலி, காத்யாயனர் உள்ளிட்டோரின் படைப்புகள், வேதகாலத்தின் ஆரம்பத்தில் பெண்கள் கல்வி கற்றவர்கள் என்று கூறுகின்றன.[1] [2] [3] இருக்கு வேத வசனங்கள் பெண்கள் முதிர்ந்த வயதில் திருமணம் செய்துகொண்டு, சுயம்வரம் அல்லது களவு மணம் என்றழைக்கப்படும் உறவில் தங்கள் சொந்த கணவர்களைத் தேர்ந்தெடுத்தனர் என்று கூறுகின்றன.[4] இருக்கு வேதமும், உபநிடதங்களும் பல பெண் முனிவர்களையும், தீர்க்கதரிசிகளையும் குறிப்பாக கார்கி வசக்னவி பற்றியும் மைத்ரேயி (சுமார் 8 ஆம் நூற்றாண்டு ) பற்றியும் குறிப்பிடுகின்றன.[5]
ஆரம்பத்தில், பெண்கள் சடங்குகளைப் பற்றியும், வேதங்களையும் படிக்க அனுமதிக்கப்பட்டனர். தர்மசாத்திரங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
மகாபாரதத்தில் திரௌபதி ஐந்து ஆண்களை திருமணம் செய்த கதை ஒரு உதாரணம். வேதகாலத்தில் பலதார மணம் பலகணவர் மணத்துடன் பொருந்தியது என்ற உண்மையை இது சுட்டிக்காட்டியது. சுயம்வரம் நடைபெறும் சபையில் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நடைமுறையில், பெண்ணின் தந்தை அனைத்து தகுதியான ஆண்களையும் அழைப்பார். பெண்ணானவர் ஒருவரை தேர்ந்தெடுத்து, அரசவை பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரை திருமணம் செய்து கொள்வார்.
மேலும், புராணங்களில், ஒவ்வொரு கடவுளும் தங்கள் மனைவிகளுடனேயே காட்டப்பட்டனர் ( பிரம்மா சரசுவதியுடன், விஷ்ணு லட்சுமியுடன், சிவன் பார்வதியுடன் ). ஆண் கடவுள்களும், பெண் தெய்வங்களின் சிலைகளும் இரு பாலினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பெண் தெய்வங்களுக்காக தனித்தனிக் கோவில்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோவிலுக்குள்ளும், ஆண் தெய்வங்களைப் போன்று மிகுந்த அக்கறையுடனும் பக்தியுடனும் வழிபடப்பட்டனர். வழிபாட்டின் முன்னுரிமையின் அடிப்படையில் இன்றுவரை நீடிக்கும் குறிப்பிட்ட நடைமுறைகளும் உள்ளன.
குப்தர் காலத்தில் பெண்கள் நிர்வாகப் பணியில் பங்கேற்பது அரிதாகவே இருந்துள்ளது. குப்தப் பேரரசின் நிறுவனர் முதலாம் சந்திரகுப்தர், தனது இராணி குமார தேவியுடன் இணைந்து ஆட்சி செய்தார்.[6] குப்தப் பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரின் மகளும், வாகாடாப் பேரரசின் இரண்டாம் உருத்ரசேனனின் மனைவியுமான பிரபாவதி என்பவர் குப்த இராச்சியத்தில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.[7] காஷ்மீர், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திராவில் இருந்த இராணிகள் உள்நாட்டிற்கு அப்பாலும் தங்களின் செயல்பாட்டை நீட்டித்த நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. இணை கல்விக்காக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. குப்தர் காலத்தில் எழுதப்பட்ட அமரகோசம் எனும் சமசுகிருத மொழி அகராதியில் பெண் பாலினத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்களின் பெயர்கள் உள்ளன.
கிமு 2 ஆம் நூற்றாண்டில், இராணி நயனிகா (அல்லது நாகனிகா) தக்காண பிராந்தியத்தின் (தெற்கு-மத்திய இந்தியா) சாதவாகனப் பேரரசின் ஆட்சியாளராகவும் இராணுவத் தளபதியாகவும் இருந்துள்ளார். தெற்காசியாவின் இலங்கைஅனுராதபுரத்தின் இராணியாக அனுலா என்ற மற்றொரு ஆரம்பகால பெண் ஆட்சியாளராக இருந்துள்ளார்( கிமு முதலாம் நூற்றாண்டு).
இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் பெண்கள் மாநில மற்றும் அரசாங்கத் தலைவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இந்திய துணைக் கண்டத்தில் புகழ் பெற்ற சில பெண்களின் புகைப்படங்கள்
தொகு-
காக்கத்தியப் இராச்சியத்தின் இராணி உருத்திரமாதேவியின் சிலை
-
ராணி துர்காவதி, பொ.ச. 1550 முதல் 1564 வரை கோண்ட்வானாவின் இராணியாக இருந்தார். முகலாய பேரரசர் அக்பரின் படைகளை எதிர்த்தார்.
-
உல்லாலில் உள்ள போர்வீராங்கனை-இராணி அபக்கா சௌதாவின் சிலை.
-
தாராபாய், மராட்டியப் பேரரசின் ஆட்சியாளர்.
-
வேலு நாச்சியார், இந்தியாவில் பிரித்தானிய குடியேற்றத்தை எதிர்த்துப் போராடிய ஆரம்பகால இந்திய ராணிகளில் ஒருவர்.
-
இராணி இலட்சுமிபாய், 1857இல் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.
-
சேக் அசீனா, வங்காளதேசத்தின் 10 வது பிரதமர்
-
ரமாபாய் சமூக சீர்திருத்தவாதியும், இந்தியாவில் பெண்களின் கல்விக்காகவும், விடுதலையில் முன்னோடியாக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Varttika by Katyayana, 125, 2477
- ↑ Comments to Ashtadhyayi 3.3.21 and 4.1.14 by பதஞ்சலி
- ↑ Gouri Srivastava. Women's Higher Education in the 19th Century. Concept Publishing Company.
- ↑ Majumdar, R.C. The history and culture of the Indian people, volume I, the Vedic age. Bharatiya Vidya Bhavan.
- ↑ H. C. Raychaudhuri (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.67–68.
- ↑ Altekar 1957 p.186
- ↑ Altekar 1957 p.187
- ↑ McNeill, Leila (24 August 2017). "This 19th Century "Lady Doctor" Helped Usher Indian Women into Medicine". Smithsonian. https://www.smithsonianmag.com/science-nature/19th-century-lady-doctor-ushered-indian-women-medicine-180964613/.