இரத்தோர் வம்சம்
இரத்தோர் வம்சம் (Rathore dynasty) என்பது இராசத்தான், குசராத்து மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை வரலாற்று ரீதியாக ஆண்ட குலத்தைச் சேர்ந்த இந்திய இராஜபுத்திர வம்சமாகும். [a]
உபகுலங்கள்
தொகுஜோதா, வாதேல், ஜெய்தாவத், கும்பாவத், சம்பாவத், மெரட்டியா, உதாவத், கரம்சோத் போன்றவை இரத்தோர் இராஜபுத்திர கிளைகள் அல்லது துணைக் குலங்களாகும்.[2]
தோற்றம்
தொகுவரலாற்றாசிரியர்களில் ஒரு பகுதியினர் இவர்களை இராட்டிரகூடர்களின் வம்சாவளி என வாதிடுகின்றனர்.[3][4] பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராட்டிரகூடர்களின் கிளைகள் மேற்கு இராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தன. பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை மார்வார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரத்தோர்களைப் பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[3]
பிரித்தானிய இந்தியவியலாளர் வின்சென்ட் ஸ்மித், இரத்தோர் மற்றும் புந்தேலர்கள் ககதவால வம்சத்தின் கிளை என்று கருதுகிறார்.[5]
வரலாறு.
தொகுஆரம்பகால வரலாறு
தொகுககதவால வம்சத்தின் செயச்சந்திரன் இரத்தோரின் கடைசி மன்னனின் பேரன் சிகோ செட்ரமோட் இரத்தோர் வம்சத்தின் முதல் மன்னன்.[1] செட்ரமோட் ஒரு துறவியாக மாற கன்னோசியின் சிம்மாசனத்தை கைவிட்டார். ஒரு குசராத்தி ஆட்சியாளரின் மகளை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.[b][1][3] மூத்தவரான அஸ்தான், சிகோவின் மரணத்திற்குப் பிறகு பதானில் வளர்க்கப்பட்டார். அவர் கன்ஹா மெர் என்ற மன்னரை தோற்கடித்து உள்ளூர் பிராமணர்களை வென்ற பிறகு பாலியில் முதல் இரத்தோர் அரசை நிறுவினார்.[1] செட்ரமோட் குரித் சுல்தானகத்திலிருந்து மார்வாருக்கு தப்பி ஓடி முதல் ரத்தோர் அரசியலை நிறுவினார் என பிற சமகால ஆதாரங்கள் கூறுகின்றன.[4][3] பிதூர் கல்வெட்டு கிபி 1273 என சிகோ இறந்த தேதியை குறிப்பிடுகிறது. மேலும் அவரை செட் குன்வாரின் மகன் என்று அழைக்கிறது.[c]
அஸ்தான் மற்றும் அவரது வாரிசுகளின் ஆட்சியின் கீழ் இரத்தோரின் ஆட்சிப் பகுதி கணிசமாக அதிகரித்தது.[1] இந்த பகுதிகளில் பல புதிய இரத்தோர் கிளைகள் பிரிந்ததாகத் தெரிகிறது.[d][e]
ஆட்சி
தொகுஅஸ்தானின் ஒன்பதாவது வம்சாவளியான சுந்தா, பிரதிகார இனத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவரை மணந்தார். திருமணத்தின் மூலம் அவருக்கு மண்டோர் பிரதேசம் கிடைத்தது. இதற்கு பதிலாக துக்ளக் பேரரசுக்கு எதிராக மண்டோரைப் பாதுகாப்பதாக சுந்தா உறுதியளித்தார்.[6] இதனால் மாண்டோர் 1400 ஆம் ஆண்டில் இரத்தோர் குலத்தின் புதிய தலைநகரமாக மாறியது.[1] இது ஒரு குறிப்பிடத்தக்க சமூக-அரசியல் மாற்றமாக இருந்தது. கால்நடைகள் போன்றவற்றுடன் இருந்து வந்த நாடோடி வாழ்க்கை முறை படிப்படியாக நிலப்பிரபுத்துவமாக மாற வழி வகுத்தது.[1]இவரது மகன் இரன்மால் 1438 இல் படுகொலை செய்யப்பட்டார். மார்வார் சிசோதியர்களின் பகுதியுடன் இணைக்கப்பட்டது. மற்ற பகுதிகள் தில்லி சுல்தானகத்தால் கைப்பற்றப்பட்டன.[f][1][g]
1453 ஆம் ஆண்டில், சக இராஜபுத்திரர்களுடன் சேர்ந்து ராவ் ஜோதா மார்வாரை மீண்டும் கைப்பற்றி, தனது பிரதேசங்களை விரிவுபடுத்தினார். தில்லி சுல்தானகத்திலிருந்து பல பிரதேசங்களை இணைப்பதில் ராவ் ஜோதா வெற்றி பெற்றார், இதன் காரணமாக மார்வாரின் இரத்தோர்கள் இராச்சியம் இவரது ஆட்சியின் போது இராஜபுதனத்தில் மிகவும் சக்திவாய்ந்த இராச்சியமாக மாறியது.[7] அவரது மகன்களில், ராவ் பிகா 1465 இல் பிகானேரில் ஒரு புதிய மாநிலத்தை ஏற்படுத்தினார். அவரும் அவரது வாரிசுகளும் அங்கிருந்து பிராந்தியங்களை விரிவுபடுத்தி, இதே போன்ற வழிகளைப் பின்பற்றினர்.[1] இந்த பிகானேர் கிளை இரத்தோர் பாரம்பரியத்தின் புதிய தலைமையாக மாறியது. மார்வாரில் இருந்து ககதவால கால சின்னங்கள் மற்றும் பரம்பரை சொத்துக்களையும் கொண்டு வந்தது.[1] ஜோதாவின் மற்றொரு மகனான ராவ் வர்சிங் 1462 ஆம் ஆண்டில் மெர்தோவில் ஒரு புதிய மாநிலத்தில் உருவாக்கி, மெர்தோவ் கிளையை நிறுவினார்.[1][8]
ராவ் மால்தேவின் ஆட்சி (1532-1562) குல ஆட்சியிலிருந்து முடியாட்சிக்கு மாற வழிவகுத்தது. மால்தேவ் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றினார்.[1] பிகானேரிலும் தாக்குதல்நடத்தப்பட்டது. [1] பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டன. மேலும், கோட்டைகள் உறுதி செய்யப்பட்டன.[1] பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரத்தோர்கள் முழு இராஜஸ்தானிலும் உறுதியான பிடியைக் கொண்டிருந்தனர்.[1]
இந்த நேரத்தில் உள்ளூர் இசுலாமிய இராச்சியங்களுடன் பல திருமண மற்றும் இராணுவ கூட்டணிகளும் ஏற்படுத்திக் கொண்டனர். மேலும், இந்து-முஸ்லிம் உறவுகளும் இணக்கமாகவே இருந்தன.[h]
முகலாயர் காலம்
தொகுஅக்பர் முகலாயப் பேரரசராக பதவியேற்ற சமயத்தில் மால்தேவ் இறந்ததால் நிலைமை மோசமடைந்தது. அவரது மகன் ராவ் சந்திரசேன் ரத்தோர் முகலாயப் பேரரசின் இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிராக கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தனது இராச்சியத்தை பாதுகாத்தார்.[1] ஜோதாவத் ரத்தோர்கள் தங்கள் பிராந்தியத்தின் பெரும்பகுதியை விரைவாக இழந்தனர்.[1] பிகாவத் ரத்தோர்கள் முகலாயர்களுடன் நட்புறவு கொண்டு, அவர்களின் படைகளை வழிநடத்தி, ஜோத்பூர் கோட்டையை கட்டுப்படுத்த அனுமதிக்கப்படும் அளவிற்கு இணக்கமாக இருந்தனர்.[1] 1583 ஆம் ஆண்டில், உதய் சிங் இறுதியாக முகலாய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதற்கு பதிலாக, ஜோத்பூரில் ஒரு பர்கானாவின் ஒரு பகுதி வழங்கப்பட்டது.[1]
முகலாய ஆட்சியின் போது ரத்தோர் குலத்தின் பல வாரிசுகளால் தங்கள் சொந்த இராச்சியங்களை நிறுவ முடிந்தது. ஜோத்பூர் ஆளும் குடும்பத்தின் இளைய கிளையைச் சேர்ந்த 23 வயதான இரத்தன் சிங் ரத்தோர், தில்லியில் மதம் பிடித்த யானைக்கு எதிராக போராடியதன் மூலம் எப்படி பதவி உயர்வு பெற முடிந்தது என்பதை அமெரிக்க வரலாற்றாளர் பார்பரா ராமூசாக் குறிப்பிடுகிறார். இவரது வீரத்தால் ஈர்க்கப்பட்ட ஷாஜகான், ரத்தன் சிங்கை தனது ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார். ரத்தன் சிங் பதவியில் உயர முடிந்தது. மகி-மராதிப் என்ற பட்டத்துடன் ஒரு சில சாகிர்களையும் பெற்றார். அங்கு அவர் இரத்லாமில் தனது சொந்த இராச்சியத்தை நிறுவினார். இரத்தன் சிங்கால் தொடங்கப்பட்ட வம்சம் மேலும் பிரிந்து சைலானா மற்றும் சீதாமாவ் இராச்சியங்களை உருவாக்கியது.[9]
ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது பெரிய கிளர்ச்சிகள் வெடித்தன. இதன் விளைவாக முகலாயர்களுக்கும் இரத்தோர்களுக்கும் இடையே 30 ஆண்டுகள் போர் நடந்தது. முதலாம் பகதூர் சா ஆட்சி வரை கிளர்ச்சி தொடர்ந்தது. இந்தப் போரின் போது ஜோத்பூரின் இரத்தோர் வம்சத்தைப் பாதுகாப்பதில் துர்காதாஸ் இரத்தோர் முக்கிய பங்கு வகித்தார்.[10][11]
பிரிட்டிஷ் காலம்
தொகுஜோத்பூரின் ரத்தோர் ஆட்சியாளர் மான் சிங், ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தங்களை உருவாக்க மறுத்தார். இருப்பினும், 1805-1806 இல் அவர் இராணுவ ஆலோசனைகளுக்காக ஆங்கிலேயர்களை அணுகி, மராத்தியர்கள் மற்றும் பிண்டாரிகளின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தனது மாநிலத்தை பாதுகாக்க ஆங்கிலேயர்களுக்கு பணம் கொடுத்தார். 1816 வாக்கில் ஆங்கிலேயர்கள் இந்த ஒப்பந்தத்தை மாற்றி, ஜோத்பூரில் அனைத்து வெளி சக்திகளையும் வெளியேற்றினர். அவர்கள் மாநில விஷயங்களிலும் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கினர். 1818 வாக்கில் இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு 1832 ஆம் ஆண்டில் இராஜபுதன நிறுவனம் உருவாக்கப்பட்டது.[1] இந்த நேரத்தில் மான் சிங் ஒருபோதும் ஆங்கிலேயர்களுடன் நல்லுறவுடன் இருக்கவில்லை. 1829 ஆம் ஆண்டில் மான் சிங் இரண்டாம் முதோஜி போன்ஸ்லேவுக்கு அடைக்கலம் கொடுத்து ஆங்கிலேயர்களை பகைத்துக் கொண்டார். முதோஜி மான் 1840 இல் தான் இறக்கும் வரை ஜோத்பூரில் தனது எஞ்சிய வாழ்க்கையை வாழ்ந்தார்.[12] இறுதியில் ஆதாரங்களுடன் மான்சிங் பிடிபட்டார். 1839 செப்டம்பரில் ஆங்கிலேயர்கள் ஒரு படையை அனுப்பி ஜோத்பூரைக் கைப்பற்றினர். மான் சிங் தனது சிம்மாசனத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்து போரைத் தவிர்ப்பதற்காக ஒரு துறவி ஆனார். நாடுகடத்தப்பட்ட ஜோத்பூரின் மகாராஜா உடல்நிலை சரியில்லாததால் 1843 செப்டம்பர் 5 அன்று இறந்தார்.[13] 1857 சிப்பாய்க் கிளர்ச்சி ஜோத்பூர் மாநிலத்தில் உள்ள இரத்தோர் குலத்தைச் சேர்ந்த பல இராஜபுத்திர தலைவர்களிடையே கிளர்ச்சியைத் தூண்டியது. ஆவுவைச் சேர்ந்த குஷால் சிங் அவர்களில் முக்கியமானவர். ஆங்கிலேயர்களின் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, பிரிகேடியர் ஹோம்ஸ் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தால் கிளர்ச்சி அடக்கப்பட்டது.[14]
தற்போதைய நிலை
தொகு20ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்ற சாதிகளின் குடும்பப் பெயர்களை ஏற்றுக்கொண்டு தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்த முயன்றனர். 1931 ஆம் ஆண்டில் இராஜ்புத்திர குலப் பெயரான "இரத்தோர்" என்பது தெலி சமூகத்தால் ஒரு குடும்பப் பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் சாதி மேம்பாட்டிற்காக தங்களை வைசிய இரத்தோர் என்று அழைக்கத் தொடங்கினர்.[15] பிரிட்டிஷ் ஆட்சியின் அதே காலகட்டத்தில், லம்பாடிகள் தங்களை சௌகான் மற்றும் இரத்தோர் இராஜபுத்திரர்களாக வடிவமைக்கத் தொடங்கினர்.[16]
குறிப்புகள்
தொகு- ↑ Alternative spellings include Rathor.[1]
- ↑ For context of production (and circulation), see section on history.
- ↑ An inscription in பித்தூர் commemorates the death of one Siho in 1273 CE, noting him to be the son of Set Kanwar; there is no mention of any Gahadavala descent.[3] Rao Jaitsi ro Chhand, a Charan poetry composed about a century earlier in 1535 had started with Salkha as the first of Rathores.[1]
- ↑ Ziegler doubts that these rulers (till Raso/Chunda) were extrapolated from popular memory and incorporated into Rathore genealogy; very little exists in the form of historical evidence.[3] David Henige also points out that Nainsi accommodates 10 kings within a span of 74 years, which is quite improbable unless plagued with telescoping.[1]
- ↑ All of these branches — Sindhal, Uhar, Petar, Mulu etc. — reigned over different areas of Marwar.
- ↑ The earlier periods are referred to in Rajput histories as period of "Vikhau". Contemporary anxieties of caste-pollution and unstable hierarchy are projected back onto these spans.
- ↑ Ziegler notes that the chronicles become reasonably reliable since mid-fifteenth century and is supported by epigraphical evidence. There is a strong probability that Nainsi copied off some parts from much older sources without attribution. However, Nainsi did add anachronistic elements to his narratives.
- ↑ At the same time, desecration of temples, and forced conversions have been noted. Some fled Marwar to avoid Muslim subjugation.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 Kothiyal, Tanuja (2016). "Mobility, Polity, Territory". Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian Desert. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139946186. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
- ↑ Kothiyal, Tanuja (2016). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian Desert. Cambridge University Press. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-10708-031-7.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Ziegler, Norman P. (1976). "The Seventeenth Century Chronicles of Mārvāṛa: A Study in the Evolution and Use of Oral Traditions in Western India". History in Africa 3: 127–153. doi:10.2307/3171564. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-5413. https://www.jstor.org/stable/3171564. பார்த்த நாள்: 30 June 2021.
- ↑ 4.0 4.1 Bose, Melia Belli (2015-01-01). 3 A Deceptive Message of Resistance: Nostalgia and the Early Jodha Rathores' Renaissant Devals (in ஆங்கிலம்). Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-30056-9. Archived from the original on 3 November 2020. பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
- ↑ Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1198-0.
- ↑ Belli, Melia (2005). Royal Umbrellas of Stone: Memory, Politics, and Public Identity in Rajput funerary arts. Brill. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004300569. Archived from the original on 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
- ↑ Kothiyal, Tanuja (2016). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian. Cambridgr University Press. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107080317. Archived from the original on 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
- ↑ Saran, Richard D.; Ziegler, Norman P. (2001). "Succession Lists of the Major Rajpūt Ruling Families of Middle Period Rājasthān". The Mertiyo Rathors of Merto, Rajasthan: Select Translations Bearing on the History of a Rajput Family, 1462–1660. Vol. 1. University of Michigan Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3998/mpub.19305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89148-085-3. JSTOR 10.3998/mpub.19305.13.
- ↑ Ramusack, Barbara N. (18 April 2023). The Indian Princes and their States. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139449083. Archived from the original on 8 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ Hooja, Rima (2006). A History of Rajasthan. Rupa. pp. 595–610. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129115010.
- ↑ Sarkar, Jadunath (1994). A History of Jaipur. Orient Longman. pp. 148–149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125003335. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ Hooja, Rima. A History of Rajasthan. Rupa Publication. p. 833.
- ↑ Dhananajaya Singh (1994). The House of Marwar. Lotus Collection, Roli Books. p. 117-119.
Ascetics from all over India who flocked to Maan Singh drawn by tales of his generosity. It is save to assume, and the worried British certainly did, that many of these fakirs were spies and messengers. Most interesting of this traffic in subterfuge are letters to and from Maharaja Ranjit Singh, the lion of Punjab. The Sikh had a healthy respect for the Rathore as his letters reveal....Part of a bigger larger anti-British cabal....King of Afghanistan and the Russians....Jodhpur's master-spy Dhumdas, however was arrested in 1838...Ranjit Singh died in 1839. In September of the same year....the company's force marched on and occupied Jodhpur....Maan Singh left Mehrangarh, donned the garb of a mendicant and renounced material life. Weak and ill, he died on 5 September 1843
- ↑ Hooja, Rima (2006). A History of Rajasthan (in ஆங்கிலம்). Rupa & Company. pp. 836–837. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-291-0890-6. Archived from the original on 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
- ↑ Patil, Shankaragouda Hanamantagouda (2002). Community Dominance and Political Modernisation: The Lingayats. Mittal Publications. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170998670. Archived from the original on 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
- ↑ Rath, Saroj Kumar (2018). "Satyagraha and Social Justice in India". In Masaeli, Mahmoud; Prabhakar, Monica (eds.). India as a Model for Global Development. Cambridge Scholars Publishing. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781527518568. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
மேலும் வாசிக்க
தொகு- Gopinath Sharma (1970). Rajasthan Studies. Agra, India: Lakshmi Narain Agarwal. p. 201. இணையக் கணினி நூலக மைய எண் 137196.
- Jadunath Sarkar (1994). A History of Jaipur: C. 1503-1938 (in ஆங்கிலம்). Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-0333-5.
- Niyogi, Roma (1959). The History of the Gāhaḍavāla Dynasty. Oriental. இணையக் கணினி நூலக மைய எண் 5386449.
- Richard Eaton (2019). India in the Persianate Age: 1000-1765. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-196655-7.
- Eugenia Vanina (2012). Medieval Indian Mindscapes: Space, Time, Society, Man. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-19-1.