இரன்னி
இரன்னி (Ranni) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். மேலும் இது கேரளாவின் 16 வது பெரிய வட்டமாகவும் உள்ளது. இது பம்பை ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளது. இது செங்கன்னூர் தொடருந்து நிலையத்திலிருந்து 27 கி. மீ தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை எண் 183 லும் அமைந்துள்ளது.
இரன்னி Ranni | |
---|---|
ஆள்கூறுகள்: 9°22′0″N 76°46′0″E / 9.36667°N 76.76667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பத்தனம்திட்டா |
அரசு | |
• வகை | Taluk |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,004 km2 (388 sq mi) |
ஏற்றம் | 331 m (1,086 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,98,194 |
• அடர்த்தி | 200/km2 (510/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 689672 |
தொலைபேசி குறியீடு | 04735 |
வாகனப் பதிவு | கே எல்-62 |
அருகிலுள்ள நகரம் | செங்கன்னூர் |
பாலின விகிதம் | 47:50 ♂/♀ |
கல்வியறிவு | 95% |
மக்களவைத் தொகுதி | பத்தனம்திட்டா |
சொற்பிறப்பியல்
தொகுஇரன்னி என்ற பெயர் மலையாளத்தில் ‘இராணி’ என்று பொருள்படும் ஒரு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்த நகரம் “கிழக்கு மலை நிலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுஇரன்னியின் வரலாற்றை 5000 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை மற்றும் நிலைக்கலைச் சுற்றியுள்ள ஆதி திராவிடர்களின் ஆரம்பகால குடியேற்றங்களில் காணலாம். கேரளாவிற்கும் பாண்டிய இராச்சியத்திற்கும் இடையில் நிலக்கல் வழியாக ஒரு பழங்கால வணிகப் பாதை இருந்தது அறிய வருகிறது.[2] [3]
இரன்னியின் முன்னாள் ஆட்சியாளர்கள் “இரன்னி கர்த்தர்கள்” என்றும், தெக்கும்கூர் இராச்சியத்தின் வழிவந்த குடும்பத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். 18ஆம் நூற்றாண்டில், மார்த்தாண்ட வர்மர் தெக்கும்கூர் இராச்சியத்தை இணைத்து தனது இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார்.
இந்தியா ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்பு மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இரன்னி இருந்தது. 1982இல் பத்தனம்திட்டா மாவட்டம் உருவாகும் வரை, இரன்னி கொல்லம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[4]
புவியியல்
தொகுஇரன்னி தென்மேற்கு இந்தியாவில் 9°23′N 76°49′E / 9.38°N 76.81°E.இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 131 மீ (433 அடி) உயரத்தில் உள்ளது.[5] பம்பை ஆறு நகரின் வழியாக பாய்கிறது. 2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரம் மொத்தம் 1,004.61 சதுர கிலோமீட்டர்கள் (387.88 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.[6] மொத்த பரப்பளவில், 708 சதுர கிலோமீட்டர்கள் (273.36 ச.மை) அல்லது 70% காடுகளாக உள்ளன..[7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://censusindia.gov.in › 3...PDF Pathanamthitta - DISTRICT CENSUS HANDBOOK
- ↑ "About Sabarimala". Archived from the original on 2011-10-26.
- ↑ "St.Thomas Ecumenical Church Nilackal- Pilgrimage India". Indiantemplesportal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "History". பத்தனம்திட்டா மாவட்டம். Archived from the original on 2009-07-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "Maps, Weather, Videos, and Airports for Rani, India". Fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "Basic Details of Panchayats/Municipalities/Corporations as on 01.07.2000" (PDF). Panchayat Level Statistics, Pathanamthitta 2001. கேரள அரசு. Archived from the original (PDF) on 2009-01-07.
- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.