இரும்புலிகுறிச்சி

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

இரும்புலிக்குறிச்சி (Irumbilikuruchi), தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்.[4] இது கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஆகும்.

இரும்புலிக்குறிச்சி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இரும்புலிகுறிச்சி பெயர் காரணம்

தொகு

சோழ மன்னர்களின் ஆட்சியின் போது போர்படைவீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யத்தேவையான இரும்பு இந்த ஊரிலிருந்தே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக அவ்வூரில் இன்றும் அந்த கிணற்றில் இரும்பும் மண்ணும் கலந்த தடயங்கள் உள்ளன. இதனாலேயே இவ்வூர் இரும்புலிகுறிச்சி என்னும் பெயர்பெற்றது.

நிறுவனங்களும் அரசு அமைப்புகளும்

தொகு

இங்கு ஒரு காவல் நிலையமும், இரண்டு தொடக்கப் பள்ளிகளும் ஒரு மேல்நிலை பள்ளியும் உள்ளன.

கோவில்கள்

தொகு

ஊரை சுற்றி ஏழு கோவில்கள் உள்ளன. இங்கு 112 வருடங்களாக இடைவிடாது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது.[சான்று தேவை]

போக்குவரத்து

தொகு

ஜெயங்கொண்டம், அரியலூர்,பொன்பரப்பி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஆகிய ஊர்களுக்கு இவ்வூர் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

அருகில் உள்ள தொடருந்து நிலையம், செந்துறை தொடருந்து நிலையம் ஆகும்.

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புலிகுறிச்சி&oldid=3544319" இலிருந்து மீள்விக்கப்பட்டது