இரும்புலியூர் சந்திப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரும்புலியூர் சந்திப்பு (Irumbuliyur Junction) இந்தியாவின் சென்னை நகரத்தில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்று. இது சென்னை புறவழிச்சாலை என்.எச் 45 சந்திக்கும் இடத்தில் சென்னையில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் அமைந்துள்ளது.
உள்ளூர் பொதுமக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1987க்கும் 1993க்கும் இடையில் இப்பகுதியில் அன்பரசு செவிலியர் பள்ளி, மற்றும் தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி இரும்புலியூரில் செயல்படத் துவங்கியது. நெடுஞ்சாலை மற்றும் இரயில் பாதை இந்நகரத்தைத் கிழக்குத் தாம்பரம் மற்றும் மேற்குத் தாம்பரம் எனப் பிரிக்கிறது. இப்பகுதியில் உள்ளோர் சென்னை புறநகர் ரயில்வே பயன்பாட்டிற்குத் தாம்பரம் தொடருந்து நிலையத்தினைப் பயன்படுத்துகின்றனர். மேற்கு தாம்பரம் வழியாகப் பிரதான சாலை லட்சுமி நகர், கிருஷ்ணா நகர், பாரதி நகர், பழைய பெருங்களத்தூர், மதான புரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளை மாவட்டத்துடன் இணைக்கிறது. இது வண்டலூர் - ஓரகடம் சாலையில் முடிகிறது. வண்டலூர்-நெமிலிச்சேரி வெளி வளையச் சாலையின் துவங்கப்பட்டதிலிருந்து மேற்கு தாம்பரம் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக உள்ளது.
மேற்குத் தாம்பரத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் ஹெரிடேஜ், ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மற்றும் நீலகிரி ஆகியவை முக்கியமானவை. வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை அடங்கும்.
3-அடுக்கு பரிமாற்றம்
தொகுசென்னை புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45க்கு இடையிலான போக்குவரத்தை எளிதாக்க மூன்று அடுக்கு பரிமாற்ற மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- தாம்பரம்-மதுரவாயல் வரை "-1" நிலை.
- செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் மதுரவாயல்; தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை; மதுரவாயல் இருந்து தாம்பரம் வரை "0" நிலை.
- மதுரவாயல் - செங்கல்பட்டு "+1" நிலை.
சுற்றுலா இடங்கள்
தொகு- வண்டலூர் உயிரியல் பூங்கா 4 கி.மீ.
- கிஷ்கிந்தா 8 கி.மீ.
- கோவளம் கடற்கரை 25 கி.மீ.
- குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்கா 19 கி.மீ.
- குழந்தைகள் பூங்கா 24 கி.மீ.
- நங்கநல்லூர் ஆஞ்சநேய கோயில் 15 கி.மீ.
- மெரினா கடற்கரை 32 கி.மீ.