இரும்பு(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

இரும்பு(III) அயோடைடு (Iron(III) iodide) என்பது FeI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெப்ப இயக்கவியல் ரீதியாக இரும்பு(III) அயோடைடு நிலைப்புத்தன்மை அற்ற சேர்மம் என்பதால் தயாரிப்பது கடினமாகும். ஆயினும்கூட இரும்பு(III) அயோடைடை காற்று மற்றும் நீர் இல்லாத சூழ்நிலையில் சிறிய அளவில் தயாரிக்கிறார்கள்.[1]

இரும்பு(III) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) அயோடைடு
வேறு பெயர்கள்
பெரிக் அயோடைடு
இனங்காட்டிகள்
15600-49-4 Y
ChemSpider 76688
InChI
 • InChI=1S/Fe.3HI/h;3*1H/q+3;;;/p-3
  Key: HEJPGFRXUXOTGM-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85017
SMILES
 • [Fe+3].[I-].[I-].[I-]
பண்புகள்
FeI3
வாய்ப்பாட்டு எடை 436.56 கி/மோல்
தோற்றம் கருப்பு நிற திண்மம்
வேதிச் சிதைவு அடையும்
கரைதிறன் இருகுளோரோமெத்தேனில் சிறிதளவு கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரும்பு(III) புளோரைடு, FeCl3, FeBr3
ஏனைய நேர் மின்அயனிகள் ScI3, TiI3, VI3, MoI3, WI3, RhI3, BiI3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

இரும்பு(III) மற்றும் அயோடைடு ஆகியவை ஒடுக்க ஏற்ற வினைக்கு உட்படுகின்றன.[1] இதில் Fe3+ அயனி Fe2+ அயனியாகவும் I I2 ஆகவும் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகின்றன. இந்த வினையை தவிர்த்து விட்டு இரும்பு(III) அயோடைடை ஓர் ஒளி வேதியியல் வினை மூலம் தயாரிக்க முடியும். இரும்பு பெண்டகார்பனைல் ஆர்கான் முன்னிலையில் எக்சேனில் அதிகப்படியான அயோடினுடன் வினைபுரிந்து, கார்பன் மோனாக்சைடை வெளியிடுகிறது. சிக்கலான ஈரயோடோடெட்ராகார்பனைல் இரும்பு(II), Fe(CO)4I2 அணைவுச் சேர்மம் வெளிர் சிவப்பு கரைசலாக உருவாகிறது.[1][2]

Fe(CO)5 + I2 → Fe(CO)4I2 + CO

இந்த அணைவுச் சேர்மம் மேலும் அயோடின் மற்றும் ஒளியின் முன்னிலையில் −20 °செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனேற்ற ஒளிச்சேர்க்கைக்கு உட்படுகிறது. மேலும் கார்பன் மோனாக்சைடு உருவாகும்போது FeI3 இன் கருப்புப் படலம் ஒரு படிவாகப் படிகிறது.[1][2]

Fe(CO)4I2 + ½I2 + → FeI3 + 4CO

வினைகள் தொகு

இரும்பு(III) அயோடைடு ஒளி-தூண்டப்பட்ட சிதைவுக்கு ஆட்பட்டு இரும்பு(II) அயோடைடு மற்றும் அயோடின் ஆகியனவாக மாற வாய்ப்புள்ளது.[2][3][4]

FeI3 + → FeI2 + ½I2


டெட்ரா ஐதரோபியூரான், அசிட்டோநைட்ரைல், பிரிடின் மற்றும் நீர் போன்ற வழங்கும் கரைப்பான்கள் இந்த வினையை ஊக்குவிக்கின்றன: இரும்பு(III) அயோடைடு அதிக அளவில் நீருறிஞ்சும் ஒரு சேர்மமாகும். இது இருகுளோரோமெத்தேனில் சிறிதளவு கரையும். இது அயோடைடுடன் வினைபுரிந்து டெட்ரா அயோடோபெரேட்டு அயனியைக் கொடுக்கிறது.[2]

FeI3 + I → FeI4

இரும்பு(III) அயோடைடு, சில அல்கைல் குளோரைடுகளுடன் ஈந்தணைவிப் பரிமாற்றம் அல்லது அணுத்திரளிடை மாற்ற வினை மூலம் இரும்பு(III) குளோரைடு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆல்கைல் அயோடைடுகளை உருவாக்குகிறது.[2]

FeI3 + 3 RCl ⇌ FeCl3 + 3 RI

FeI3 இன் கூட்டுவிளைபொருள்கள் நன்கு அறியப்பட்டவையாகும். தயோயூரியாவின் முன்னிலையில் FeI2 மற்றும் I2 சேர்மங்களிலிருந்து ஆரஞ்சு நிற அணைவுச் சேர்மத்தை தயாரிக்கலாம்.[5][6] இரும்புத் தூள் அயோடின் கொண்ட ஈந்தணைவிகளுடன் வினைபுரிந்து பெரிக் அயோடைடு கூட்டுசேர் பொருட்களையும் தருகிறது.[7]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1083-1084. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Yoon, K. B.; Kochi, J. K. (1990). "Ferric iodide as a nonexistent compound". Inorg. Chem. 29 (4): 869–874. doi:10.1021/ic00329a058. 
 3. Šima, Jozef; Brezová, Vlasta (2002). "Photochemistry of iodo iron(III) complexes". Coord. Chem. Rev. 229 (1–2): 27–35. doi:10.1016/S0010-8545(02)00018-8. 
 4. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ). Prentice Hall. பக். 716. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0131755536. 
 5. Pohl, Siegfried; Bierbach, Ulrich; Saak, Wolfgang (1989). "FeI3SC(NMe2)2, a Neutral Thiourea Complex of Iron(III) Iodide". Angew. Chem. Int. Ed. 28 (6): 776–777. doi:10.1002/anie.198907761. 
 6. Pohl, S.; Opitz, U.; Saak, W.; Haase, D. (1993). "Komplexe von FeI2 und FeI3 mit Tetramethylharnstoff". Z. Anorg. Allg. Chem. 619 (3): 608–612. doi:10.1002/zaac.19936190329. 
 7. Barnes, Nicholas A.; Godfrey, Stephen M.; Ho, Nicholas; McAuliffe, Charles A.; Pritchard, Robin G. (2013). "Facile synthesis of a rare example of an iron(III) iodide complex, [FeI3(AsMe3)2], from the reaction of Me3AsI2 with unactivated iron powder". Polyhedron 55: 67–72. doi:10.1016/j.poly.2013.02.066. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(III)_அயோடைடு&oldid=3775480" இருந்து மீள்விக்கப்பட்டது