உடன்பிறப்பு
உடன் பிறப்பு (ⓘ) (Sibling) என்பது இரத்த சொந்தங்களுள் ஒன்றாகும். உடன் பிறப்புகள் ஒரே பெற்றோரை கொண்டிருப்பார்கள். அது தாயாகவோ, தந்தையாகவோ அல்லது இருவருமாகவோ இருக்கக்கூடும். பொதுவாக உடன் பிறப்பு ஆணாக இருப்பின் சகோதரன் என்றும், பெண்ணாக இருப்பின் சகோதரி என்றும் அழைக்கப்படுகின்றனர். உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் உடன் பிறப்புகள் ஒன்றாகவே வளர்கின்றனர். எனவே உடன் பிறப்புகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர். இந்த உணர்ச்சி பிணைப்பானது ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் வேறுபட்டு இருக்கும். பெற்றோர் தங்களை நடத்தும் விதம், பிறப்பு முறைமை, குடும்பம் தவிர்த்த மற்றவருடனான தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தனி நபர் குணம் போன்றவை இந்த மாறுபட்ட உணர்ச்சி பிணைப்புக்கு காரணமாக அமைகிறது.[1] பல்வேறு காரணங்களால் தனித்தனியாக வளர்கின்ற உடன் பிறப்புகளும் இருக்கின்றனர்.
வகைப்பாடு
தொகுமுழு உடன்பிறப்பு.
தொகுமுழு உடன்பிறப்புகள் ஒரே தாயையும் தந்தையையும் கொண்டிருப்பர்கள். இவர்களுடைய "தாயனை" ஆனது, தாயும் தந்தையும் இரத்த சொந்தமல்லாத பட்சத்தில் 50 சதவிகிதம் ஒரே மாதிரியாக இருக்கும்[2]. பெற்றோர் இரத்த சொந்தம் என்றால் 50 சதவிகிதம் என்பது சிறிது அதிகரிக்கக்கூடும்.
இரட்டையர்.
தொகுஇரட்டையர் என்போர் ஒரே கருத்தரிப்பில் பிறந்த இரு குழந்தைகள் ஆவர். இரட்டையர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். முற்றொத்த இரட்டையர் மற்றும் இருகரு இரட்டையர்.
முற்றொத்த இரட்டையரின் தாயனை நூறு சதவிகிதம் பொருந்தும்[2]. பொதுவாக இரட்டையர்கள் அதிக பிணைப்போடு இருப்பார்கள். ஆராய்ச்சி ஒன்றின் படி, தங்களின் 3 வயது வரை "இரட்டையர் மொழி" என்று அவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் ஒரு மொழியில் உரையாடுவது, இரட்டையர்களின் சிறப்பம்சம்.[3]
இருகருஇரட்டையர்கள் பிறப்பால் மட்டுமே இரட்டையர்கள், அவர்களுக்கும் இரட்டையர் அல்லாத முழு உடன்பிறப்பிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.[தெளிவுபடுத்துக]
பாதி உடன்பிறப்பு
தொகுபாதி உடன்பிறப்பு அல்லது அரை உடன்பிறப்பு என்போர் ஒரு பெற்றோரை மட்டும் ஒன்றாகக் கொண்டிருப்பர்கள். இது தாயாகவோ அல்லது தந்தையாகவோ இருக்கலாம். இவர்கள் 25% ஒரே மாதிரி தாயனை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.[4]
உடன்பிறவா சகோதரர்கள்
தொகுஉடன்பிறவா சகோதரர்களை இரண்டாக பிரிக்கலாம். இரத்தபந்த உடன்பிறவா சகோதரர் மற்றும் இரத்த பந்தம் அல்லாத உடன்பிறவா சகோதரர்கள்.
இரத்தபந்த உடன்பிறவா சகோதரர்கள் யாரெனில்:
- சித்தி/சித்தப்பாவின் பிள்ளைகள்
- பெரியப்பா/பெரியம்மாவின் பிள்ளைகள்
இரத்த பந்தம் அல்லாத உடன்பிறவா சகோதரர்கள் அமைவதற்கான காரணங்கள்:
- தாய் அல்லது தந்தை மறுமணம் செய்பவருக்கு ஏற்கனவே இருக்கும் குழந்தை.
- தத்தெடுக்கப்பட்ட சகோதரர்.
- இரத்தத்தினால் சத்தியம் செய்து கொடுத்த இரத்த சகோதரர்கள்.[சான்று தேவை]
- கணவன்/மனைவியின் அத்தை/மாமாவின் பிள்ளைகள்.
உடன்பிறப்பு உறவுமுறை
தொகுவயது முறைமை / பாலினம் | ஆண் | பெண் |
---|---|---|
மூத்தவர் | அண்ணண் | அக்காள் |
இளையவர் | தம்பி | தங்கை |
கீழ் வருவன அனைத்தும் உறவுமுறை பெயராயினும் மதிப்பு மற்றும் மரியாதையின் நிமித்தம் உடன்பிறவாதவரையும், உறவுமுறையல்லாதவரையும் இவ்வாறு அழைக்கலாம்.
அண்ணன்
தொகுதன்னை விட வயதில் மூத்த ஆண் சகோதரரை அண்ணன் என்று அழைப்பார்கள். அண்ணன் என்பதை தமையன் என்றும் கூறலாம். அண்ணன் என்பதே மருவி 'அண்ணா', 'அண்ணெ' என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு வழக்கில் வழங்கப்படுகிறது.
எடுத்துகாட்டு:
- இந்து மதத்தில், விநாயகர் முருகனுக்கு அண்ணன்;
- திருவிவிலியத்தில் காயின், ஆபேலுக்கு அண்ணன்;
அக்காள்
தொகுதன்னை விட வயதில் மூத்த பெண் சகோதரியை அக்காள் என்று அழைப்பார்கள். அக்காள் என்பதை தமக்கை என்றும் கூறலாம். அக்காள் என்பதே மருவி 'அக்கா', 'என்று வழங்கப்படுகிறது.[சான்று தேவை]
எடுத்துகாட்டு:
- சோழ நாட்டு அரசன், முதலாம் ராஜராஜனுக்கு, குந்தவை பிராட்டியார் அக்காள்;
தம்பி
தொகுதன்னை விட வயதில் இளைய ஆண் சகோதரரைத் தம்பி என்று அழைப்பார்கள். தம்பி என்பதை அனுஜன் என்றும், அம்பி என்றும் கூறலாம்.[சான்று தேவை]
எடுத்துகாட்டு:
- இராமயணத்தில் லட்சுமனன், இராமனின் தம்பி.
- இசைஞானி இளையராஜாவின் தம்பி, கங்கை அமரன்.
தங்கை
தொகுதன்னை விட வயதில் இளைய பெண் சகோதரியைத் தங்கை என்று அழைப்பார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mersky Leder, Jane (Jan–Feb 1993). "Adult Sibling Rivalry". Psychology Today. பார்க்கப்பட்ட நாள் November 28, 2006.
- ↑ 2.0 2.1 Dr. Shafer, Aaron. "Understanding genetics". The Tech. Stanford University. பார்க்கப்பட்ட நாள் 13 December 2013.
- ↑ Hayashi, C; Mikami, H; Nishihara, R; Maeda, C; Hayakawa, K (2014). "The relationship between twin language, twins' close ties, and social competence". Twin Research and Human Genetics 17 (1): 27–37. doi:10.1017/thg.2013.83.