உபேந்திரநாத் பிரம்மச்சாரி

இந்திய மருத்துவர்

ராவ் பகதூர் சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி (Upendranath Brahmachari) (19 திசம்பர் 1873 - 6 பிப்ரவரி 1946) ஓர் இந்திய விஞ்ஞானியும் தனது காலத்தின் முன்னணி மருத்துவப் பயிற்சியாளருமாவார்.[1] இவர் 1922 இல் புரோட்டோசோன் ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படும் நோயான கருங் காய்ச்சலுக்கு, யூரியா - ஸ்டிபமைனை (கார்போஸ்டிபாமைடு) ஒருங்கிணைத்தார். மேலும், இது ஒரு சிறந்த சிகிச்சையாக இருப்பதை தீர்மானித்தார்.

ராவ் பகதூர் சர்
உபேந்திரநாத் பிரம்மச்சாரி
উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி
பிறப்பு(1873-12-19)19 திசம்பர் 1873
சர்தங்கா கிராமம், புர்பஸ்தாலி மாவட்டம், பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 பெப்ரவரி 1946(1946-02-06) (அகவை 72)
துறைமருத்துவம், மருத்துவர்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்சர் ஜெரால்டு பம்போர்டு
விருதுகள்
துணைவர்நானி பாலாதேவி
பிள்ளைகள்பனீந்திரநாத் பிரம்மச்சாரி
நிர்மல் குமார் பிரம்மச்சாரி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

உபேந்திரநாத் பிரம்மச்சாரி 1873 திசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவின் மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்ட புர்பஸ்தாலிக்கு அருகிலுள்ள சர்தங்கா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நில்மனி பிரம்மச்சாரி கிழக்கு இந்திய இரயில்வேயில் மருத்துவராக இருந்தார். இவரது தாயாரின் பெயர் சௌரவ் சுந்தரி தேவி. இவர், ஜமல்பூரின் கிழக்கு ரயில்வே சிறுவர் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1893ஆம் ஆண்டில், ஹூக்லி மொஹ்சின் கல்லூரியில் கணிதம், வேதியியல் ஆகியவற்றில் கௌரவங்களுடன் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பிறகு மருத்துவம் படிக்கச் சென்றார். கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1894இல் முதுகலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1900ஆம் ஆண்டு நடந்த மருத்துவத் தேர்வில், மருத்துவம், அறுவை சிகிச்சை ஆகிய இரண்டிலும் முதலிடம் பிடித்தார். அதற்காக இவர் குடீவ், மேக்லியோட் விருதுகளைப் பெற்றார். இவர் 1902 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் முதுகலை பட்டத்தைப் பெற்றார். மேலும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து "ஹீமோலிசிஸில் ஆய்வுகள்" பற்றிய ஆய்வுக் கட்டுரைக்காக 1904 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[2] 1898 இல், நானி பாலா தேவி என்பவரை மணந்தார்.

வாழ்க்கையும் தொழிலும் தொகு

1922 ஆம் ஆண்டில், பிரம்மச்சாரி லெஷ்மேனியாசிஸின் புதிய, கொடிய வடிவத்தையும் கண்டுபிடித்தார். காய்ச்சல் அல்லது பிற புகார்கள் இல்லாமல் நோயாளிகளின் முகத்தில் திடீர் வெடிப்புகள் தோன்றியதை கண்டறிந்த இவர் அதை "தெர்மல் லெஷ்மானாய்டு" என்று அழைத்தார். கடுங்காய்ச்சலின் ஓரளவு குணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளில், நோயின் வரலாறு இல்லாதவர்களுடன் இது ஒரு நோயாக இவர் குறிப்பிடார்.[3] இது பின்னர் "காலா-அசார் டெர்மல் லெஷ்மேனியாசிஸ்" (பி.கே.டி.எல்) என்று அழைக்கப்படுகிறது.

விருதுகளும் கௌரவங்களும் தொகு

 
கொல்கத்தாவின் மிண்டோ பூங்காவிற்கு அருகில் உள்ள லௌடன் தெருவிற்கு, டாக்டர் உ. நா. பிரம்மச்சாரி தெரு என மறுபெயரிடப்பட்டது.

இவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. ஆளுநர் லிட்டன் பிரபுவால் (1924), கைசர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம், வழங்கப்பட்டது.[4] 1934 ஆம் ஆண்டில், இவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் வீரத்திருத்தகை வழங்கப்பட்டது (1934).[5]

பிரம்மச்சாரி, 1929, 1942 ஆண்டுகளில் இரண்டு முறை உடலியல் மற்றும் மருத்துவம் பிரிவில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[6][7] இந்தூரில் (1936) நடந்த இந்திய அறிவியல் காங்கிரசின் 23வது அமர்வின் தலைவராக இருந்தார். கொல்த்தாவின் இந்திய வேதியியல் சங்கத்தின் தலைவராவும் இருந்தார் (1936). இலண்டன், அரச கழகத்தின் மருத்துவம், இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் சக கூட்டாளர், இரண்டு ஆண்டுகள் (1928-29) வங்காள ஆசிய சங்கத்தின் தலைவர் ஆகியவற்றுடன் கௌரவிக்கப்பட்டார்.[8] இவர் இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Rajinder; Roy, Syamal (1 March 2019). "U N Brahmachari: Scientific Achievements and Nomination for the Nobel Prize and the Fellowship of the Royal Society of London". Indian Journal of History of Science 54 (1). doi:10.16943/ijhs/2019/v54i1/49596. 
  2. "Vigyan Prasar website – Upendra Nath Brahamachari". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  3. Brahmachari, U. N. (April 1922). "A New Form of Cutaneous Leishmaniasis—Dermal Leishmanoid". The Indian Medical Gazette 57 (4): 125–127. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5863. பப்மெட்:29008368. 
  4. London Gazette, 3 June 1924
  5. London Gazette, 1 June 1934
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. "Deceased Fellow". INSA. 2016. Archived from the original on மே 15, 2021. பார்க்கப்பட்ட நாள் May 13, 2016.

குறிப்புகள் தொகு

  1. Biographical Memoirs of Fellows of the Indian National Science Academy Vol. 4., Indian National Science Academy, New Delhi, 1976.
  2. Dictionary of Medical Biography Vol. 1 A-B, Edited by W. F. Bynum and Helen Bynum, Greenwood Press, 2006

வெளி இணைப்புகள் தொகு