உயர் ஆல்க்கேன்கள்
உயர் ஆல்க்கேன்கள் (Higher alkanes) என்பவை ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன்களைக் கொண்டிருக்கும் ஆல்க்கேன்களாகும்.. நோனேன் என்ற மிக இலேசான ஆல்க்கேனின் தீப்பற்று நிலை 25 பாகை செல்சியசு ஆகும். எனவே இதை அபாயகரமான எரிதன்மை கொண்ட சேர்மமென வகைப்படுத்தவில்லை.
அதிகமான எண்ணிக்கையில் கார்பனைப் பெற்றுள்ள ஆல்க்கேன்கள் உயர் ஆல்க்கேன்கள் என்ற போக்கிலும் இதனை வரையறுக்கலாம். ஆல்க்கேன்களை உயர் ஆல்க்கேன்களில் இருந்து வேறுபடுத்தி அறியவேண்டுமெனில், சாதாரண இயற்கைச் சூழலில் ஆல்க்கேன்கள் திண்மநிலையில் காணப்படும் என்பதைக் கொண்டு மட்டுமே பிரித்துணர முடியும்.
பயன்கள்
தொகுஒன்பது கார்பன் அணுக்களைக் கொண்டஆல்க்கேன் நோனேன் முதல் பதினாறு கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்க்கேன் எக்சாடெக்கேன் வரையுள்ள ஆல்க்கேன்கள் உயர்பாகுநிலை கொண்ட திரவங்களாகும். இவை பெட்ரோலுடன் சேர்த்து பயன்படுத்துவதற்கு ஏற்புடைய பண்புகளையும் மிகக்குறைவாகவே கொண்டுள்ளன. மாறாக அவை டீசல் மற்றும் விமானப் போக்குவரத்திற்குத் தேவையான எரிபொருளில் பெரும்பங்கு வகிக்குமளவில் உருவாகின்றன. எரிதல் வேகத்தின் அளவீடான சிடேன் எண் மதிப்பைக் கொண்டு டீசல் எரிபொருட்கள் வகைப்படுத்தப்படுகின்றன. எக்சாடெக்கேனின் பழைய பெயர் சிடேன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தாழ்ந்த வெப்பநிலைகளிலும் துருவப் பகுதிகளிலும் இந்த அதிகவெப்பநிலை கொண்ட ஆல்க்கேன்களால் சில பிரச்சினைகள் நிகழ்கின்றன. இங்கெல்லாம் எரிபொருள் மிகவும் கெட்டியாவதால் சரியான பாய்வின்றி பாதிப்பு உண்டாகிறது. வாயு நிரலியல் பகுப்பாய்வின் தூண்டப்பட்ட காய்ச்சி வடித்தல் செயல்முறைக்கு சாதரணநிலை ஆல்க்கேன்களின் கலவைகள் கொதிநிலை தரமறியப் பயன்படுகின்றன.[1]
எக்சா டெக்கேனுக்குப் பிறகு உள்ள ஆல்க்கேன்கள் எரிபொருள் எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய் போன்ற முக்கியமான பொருட்களாக உருவாகின்றன. இரண்டாவது செயல்பாடாக அவை அரிப்பை எதிர்க்கும் முகவராகவும் அச்சமயத்தில் செயல்பட்டன ஏனெனில் அவற்றின் நீரெதிர்ப்பு தன்மை காரணமாக தண்ணீரானது உலோகத்தின் மேற்பரப்பை எட்டுவதில்லை. பல ஆல்க்கேன்கள் மெழுகு தயாரிக்கப் பயன்படும் பாரபின் மெழுகாக பயன்படுகின்றன. தேன்மெழுகோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது. அவை முதன்மையாக எசுத்தர்களைக் கொண்டிருக்கின்றன.
35 கார்பன் அணுக்களுக்கு மேற்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கும் ஆல்க்கேன்கள் நிலக்கீலில் காணப்படுகின்றன. அவை சாலைகள் மேம்பாட்டுக்கு மாதிரியாகப் பயன்படுகின்றன. எனினும் உயர் ஆல்க்கேன்கள் பொதுவாக சிதைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாகப் பயன்படுகின்றன.
பண்புகள்
தொகுஇங்கு கொடுக்கப்பட்டுள்ள பண்புகள் நேரியல் ஆல்க்கேன்களைச் சார்ந்தவையாகும்.
நோனேன் முதல் எக்சா டெக்கேன் வரை
தொகுநேரியல் ஆல்க்கேன்கள் பொதுவாக பொதுவாக சாதாரண சூழலில் திரவநிலையில் காணப்படுகின்றன.[2]
வாய்ப்பாடு | C9H20 | C10H22 | C11H24 | C12H26 | C13H28 | C14H30 | C15H32 | C16H34 |
சிஏஎசு எண் | [111-84-2] | [124-18-5] | [1120-21-4] | [112-40-3] | [629-50-5] | [629-59-4] | [629-62-9] | [544-76-3] |
வாய்ப்பாட்டு எடை (கி/மோல்) |
128.26 | 142.29 | 156.31 | 170.34 | 184.37 | 198.39 | 212.42 | 226.45 |
உருகுநிலை (°C) |
−53.5 | −29.7 | −25.6 | −9.6 | −5.4 | 5.9 | 9.9 | 18.2 |
கொதிநிலை (°C) |
150.8 | 174.1 | 195.9 | 216.3 | 235.4 | 253.5 | 270.6 | 286.8 |
அடர்த்தி (கி/மோல்l 20 °C இல்) |
0.71763 | 0.73005 | 0.74024 | 0.74869 | 0.75622 | 0.76275 | 0.76830 | 0.77344 |
பாகுத்தன்மை (cP 20 °Cஇல்) |
0.7139 | 0.9256 | 1.185 | 1.503 | 1.880 | 2.335 | 2.863 | 3.474 |
தீப்பற்று நிலை (°C) |
31 | 46 | 60 | 71 | 79 | 99 | 132 | 135 |
தானாகத் தீப்பற்றும் வெப்பநிலை (°C) |
205 | 210 | 205 | 235 | 201 | |||
வெடிபொருள் வரம்புகள் |
0.9–2.9% | 0.8–2.6% | 0.45–6.5% |
எப்டாடெக்கேன் முதல் டெட்ராகோசேன் வரை
தொகுஇக்குழுவில் தொடங்கி ஆல்க்கேன்கள் பொதுவாக சாதாரண சூழலில் திண்ம நிலையில் காணப்படுகின்றன.
|
|
|
|
|
|
|
| |
---|---|---|---|---|---|---|---|---|
வாய்ப்பாடு | C17H36 | C18H38 | C19H40 | C20H42 | C21H44 | C22H46 | C23H48 | C24H50 |
சிஏஎசு எண் | [629-78-7] | [593-45-3] | [629-92-5] | [112-95-8] | [629-94-7] | [629-97-0] | [638-67-5] | [646-31-1] |
வாய்ப்பாடு எடை (கி/மோல்) | 240.47 | 254.50 | 268.53 | 282.55 | 296.58 | 310.61 | 324.63 | 338.66 |
உருகுநிலை (°செ) | 21 | 28–30 | 32–34 | 36.7 | 40.5 | 42 | 48–50 | 52 |
கொதிநிலை (°செ) | 302 | 317 | 330 | 342.7 | 356.5 | 224 2 kPa இல் | 380 | 391.3 |
அடர்த்தி (கி/மி.லி) | 0.777 | 0.777 | 0.786 | 0.7886 | 0.792 | 0.778 | 0.797 | 0.797 |
தீப்பற்று நிலை (°செ) | 148 | 166 | 168 | 176 |
பெண்டாகோசேன் முதல் டிரையகோண்டேன் வரை
தொகு |
|
|
|
|
| |
---|---|---|---|---|---|---|
வாய்ப்பாடு | C25H52 | C26H54 | C27H56 | C28H58 | C29H60 | C30H62 |
சிஏஎசு எண் | [629-99-2] | [630-01-3] | [593-49-7] | [630-02-4] | [630-03-5] | [638-68-6] |
வாய்ப்பாட்டு எடை (கி/மோல்) | 352.69 | 366.71 | 380.74 | 394.77 | 408.80 | 422.82 |
உருகுநிலை (°செ) | 54 | 56.4 | 59.5 | 64.5 | 63.7 | 65.8 |
கொதிநிலை (°செ) | 401 | 412.2 | 422 | 431.6 | 440.8 | 449.7 |
அடர்த்தி (கி/மிலி) | 0.801 | 0.778 | 0.780 | 0.807 | 0.808 | 0.810 |
என்டிரையாகோண்டேன் முதல் எக்சாடிரையாகோண்டேன் வரை
தொகு என்டிரையா கோண்டேன் |
டோடிரையா கோண்டேன் |
டிரைடிரையா கோண்டேன் |
டெட்ராடிரையா கோண்டேன் |
பெண்டாடிரையா கோண்டேன் |
எக்சாடிரையா கோண்டேன் | |
---|---|---|---|---|---|---|
வாய்ப்பாடு | C31H64 | C32H66 | C33H68 | C34H70 | C35H72 | C36H74 |
சிஏஎசு எண் | [630-04-6] | [544-85-4] | [630-05-7] | [14167-59-0] | [630-07-9] | [630-06-8] |
வாய்ப்பாட்டு எடை (கி/மோல்) | 436.85 | 450.88 | 464.90 | 478.93 | 492.96 | 506.98 |
உருகுநிலை (°செ) | 67.9 | 69 | 70–72 | 72.6 | 75 | 74–76 |
கொதிநிலை (°செ) | 458 | 467 | 474 | 285.4 at 0.4 kPa | 490 | 265 at 130 Pa |
அடர்த்தி (கி/மிலி) | 0.781 at 68 C[3] | 0.812 | 0.811 | 0.812 | 0.813 | 0.814 |
மேற்கோள்கள்
தொகு- ↑ ASTM D5399-09, Standard Test Method for Boiling Point Distribution of Hydrocarbon Solvents by Gas Chromatography
- ↑ Karl Griesbaum, Arno Behr, Dieter Biedenkapp, Heinz-Werner Voges, Dorothea Garbe, Christian Paetz, Gerd Collin, Dieter Mayer Hartmut Höke "Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_227 10.1002/14356007.a13_227
- ↑ Weast, Robert C., ed. (1982). CRC Handbook of Chemistry and Physics (63rd ed.). Boca Raton, Fl: CRC Press. p. C-561.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- International Chemical Safety Card 1245 (nonane)
- NIOSH Pocket Guide to Chemical Hazards (nonane)
- International Chemical Safety Card 0428 (decane)