உலக சமசுகிருத மாநாடு
உலக சமசுகிருத மாநாடு (World Sanskrit Conference) என்பது உலக அளவில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பன்னாட்டு சமசுகிருத மொழிக்கான மாநாடு ஆகும். இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. 1972ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பன்னாட்டு சமசுகிருத மாநாடு முதல் உலக சமசுகிருத மாநாடாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தியாவில் நான்கு முறை (1972, 1981, 1997, 2012) இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது.[1]
வரலாறு
தொகுபன்னாட்டு சமசுகிருத ஆய்வுகள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, முக்கிய இந்தியப் பல்கலைக் கழகங்களின் பல சமசுகிருத அறிஞர்கள், பன்னாட்டுக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் சம்மேளனம்" சமசுகிருதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களைப் பற்றிய முழு விவாதத்திற்கு போதுமான வாய்ப்பை அனுமதிக்கவில்லை" என்று உணர்ந்தனர். இந்த அறிஞர்கள் இந்திய அரசாங்கத்தை அணுகி, இது தொடர்பாக மார்ச் 1972-ல் புது தில்லியில் முதல் பன்னாட்டுச் சமசுகிருத மாநாட்டைக் கூட்ட ஏற்பாடு செய்தனர். இதற்கு அடுத்த ஆண்டு (1973-ல்), கீழ்த்திசை மொழிப்புலமையாளர்களின் 29வது பன்னாட்டுக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த சமசுகிருத அறிஞர்கள் ஒன்றிணைந்து பன்னாட்டு சமசுகிருத ஆய்வுகள் சங்கத்தினை தோற்றுவித்தனர். சமசுகிருத மாநாடுகளை உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடத்துவதே இவர்களின் முக்கிய நோக்கமாகவும் பொறுப்பாகவும் இருந்தது. 1972ஆம் ஆண்டு புது தில்லி மாநாடு "முதல் உலக சமசுகிருத மாநாடு" என்று பின்னேற்புடன் அங்கீகரிக்கப்பட்டது.[2]
2015-ல் தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த பதினாறாவது மாநாட்டுக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து வரலாறு காணாத ஆதரவு கிடைத்தது.[3] "மென்மையான சக்தியின் காட்சி" என்று சிலர் அழைத்ததில், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 250 சமசுகிருத அறிஞர்களைக் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியது. சுஷ்மா சுவராஜ் சமசுகிருதத்தில் தொடக்க உரையை வழங்கினார்.[3] சமசுகிருதக் கல்வியை ஆதரித்த தாய்லாந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் மற்றும் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் பாளி மற்றும் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இளவரசி சிரிந்தோர்னின் நினைவாக இந்த மாநாடு நடத்தப்பட்டது.[4] 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் போது சில சர்ச்சைகள் எழுந்தன. இம்மாநாட்டினை ராஜீவ் மல்கோத்ரா துவக்கி வைத்தார்.
வான்கூவரில் நடந்த 2018ஆம் ஆண்டு மாநாட்டில் "எங்கள் சமசுகிருதத்தின் கதை" என்ற தலைப்பில் அமர்வு ஒன்று இடம்பெற்றது, இதில் இரண்டு பெண் சமசுகிருதவாதிகள் வாதிட்டனர். மூன்றாவது பெண் சமசுகிருதவாதி நடுவராக இருந்தார். இந்த அமர்வு கட்டுக்கடங்காத பார்வையாளர்களிடமிருந்து பாலியல் மற்றும் சாதிவெறி கருத்துக்களால் பாதிக்கப்பட்டது.[5][6] இண்டாலஜி (INDOLOGY லிஸ்ட்செர்விற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், முன்னணி மாநாட்டு அமைப்பாளர் முனைவர் ஆதிஷ் சதாயே, "பார்வையாளர்களில் சிலரின் குண்டர்த்தனமான நடத்தைக்கு" பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.[7]
தேதிகள் மற்றும் இடங்கள்
தொகுமுதல் உலக சமசுகிருத மாநாடு 26-31 மார்ச் 1972-ல்[8] இந்தியாவின் புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இதன் தலைவராக முனைவர் அரங்கநாதன் இருந்தார்.[9] இதன் பிறகு, நடைபெற்ற மாநாடுகள் பின்வருமாறு:
- துரின், இத்தாலி, சூன் 1975[10]
- பாரிஸ், பிரான்ஸ், 20-25 சூன் 1977[11]
- வெய்மர், செருமன் மக்களாட்சிக் குடியரசு, 23-30 மே 1979.[12]
- வாரணாசி, 1981, இந்தியா.[13]
- பிலடெல்பியா, அமெரிக்கா, 1984.[14]
- லைடன், நெதர்லாந்து, 1987[15]
- வியன்னா, ஆஸ்திரியா; 27 ஆகத்து-2 செப்டம்பர் 1990.[16]
- மெல்பேர்ண், ஆத்திரேலியா, சனவரி 1994.[17]
- பெங்களூரு, இந்தியா, சனவரி 1997.[18]
- துரின், இத்தாலி, ஏப்ரல் 2000.[19]
- எல்சிங்கி, பின்லாந்து, சூலை 2003.[20]
- எடின்பரோ, ஐக்கிய இராச்சியம், சூலை 2006.[21]
- கியோத்தோ, சப்பான், 1 முதல் 6 செப்டம்பர் 2009.[22]
- புது தில்லி, இந்தியா 5 முதல் 10 சனவரி 2012 வரை.[23]
- பேங்காக், தாய்லாந்து 28 சூன் முதல் 2 சூலை 2015.[4][24]
- வான்கூவர், கனடா, சூலை 9 முதல் சூலை 13, 2018.[25][26]
எதிர்கால நிகழ்வு
தொகுபதினெட்டாவது மாநாடு[25] 2023-ல் ஆத்திரேலியாவின் கான்பராவில் நடைபெற உள்ளது.
நடவடிக்கைகள்
தொகுஉலக சமசுகிருத மாநாட்டில் மாநாட்டு கருத்தரங்க மலர்கள் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளன:[27]
- தில்லி (1972) மாநாட்டு மலர் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டது (தொகுதிகள் I-III.1, கல்வி மற்றும் சமூகநல அமைச்சகம், புது டெல்லி, 1975-80; 2-IV, மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம், தில்லி, 1981 வெளியீடு)
- வீமர் (1979) சமசுகிருதம் மற்றும் உலக கலாச்சாரம் (அகாதமி-வெர்லாக், பெர்லின், 1986) என்ற தலைப்பில் ஒரு தொகுதியில் மாநாடு, 1985-ல் மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம், புது தில்லி, வாரணாசி மாநாட்டின் மலர்.
- லைடன் (1987) மாநாட்டின் நடவடிக்கைகள் பல தொகுதிகளில் (பிரில், லைடன், 1990–92) என ஒரு பன்னாட்டு சமசுகிருத கல்விச் சங்க செய்தி மடல்; ஹெல்சின்கி (2003) மற்றும் எடின்பர்க் (2006) மாநாடுகளின் நடவடிக்கைகள் மோதிலால் பனர்சிதாசு, புது தில்லி
- டுரின் (1975), பாரிஸ் (1977), பிலடெல்பியா (1984), வியன்னா (1990), மெல்போர்ன் (1994), பெங்களூர் (1997), டுரின் (2000), கியோட்டோ (2009) ஆகிய இடங்களில் நடைபெற்ற உலக சமசுகிருத மாநாடுகளின் வெளியீடுகள் இந்தோலாஜிகா டாரினென்சியாவில் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. இது பன்னாட்டு சமசுகிருத கல்வி சங்க வெளியீடாகும். இந்த இதழ்களைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.[1] .
மேலும் பார்க்கவும்
தொகு- சமஸ்கிருத படிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sanskritassociation - Conferences".
- ↑ "INTERNATIONAL ASSOCIATION OF SANSKRIT STUDIES (IASS)". New Delhi: IASS. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ 3.0 3.1 "Government to send 250 Sanskrit scholars to participate in World Sanskrit Conference in Thailand". http://articles.economictimes.indiatimes.com/2015-06-24/news/63783144_1_indian-embassy-scholars-world-sanskrit-conference. பார்த்த நாள்: 29 July 2015.
- ↑ 4.0 4.1 "World Sanskrit Conference held in honor of Princess Maha Chakri". Battaya Mail. 30 June 2015. http://www.pattayamail.com/news/world-sanskrit-conference-held-in-honor-of-princess-maha-chakri-48510. பார்த்த நாள்: 29 July 2015.
- ↑ Vajpeyi, Ananya (2018-08-14). "How to move a mountain" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-opinion/how-to-move-a-mountain/article24683993.ece.
- ↑ "World Sanskrit Conference shows that Sanskritic scholarship in India remains afraid of gender and caste - Firstpost". www.firstpost.com. 22 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.
- ↑ "The INDOLOGY Archives". list.indology.info. Archived from the original on 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.
- ↑ India. Ministry of Education and Social Welfare (1980). International Sanskrit Conference. The Ministry. p. iii. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ T.K. Venkatasubramanian (2010). Music as History in TamilNadu. Primus Books. p. 138. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Alex Wayman (1984). Buddhist Insight: Essays. Motilal Banarsidass. p. 417. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0675-7. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Satya Vrat Varma. Nāyakanāyikāguṇālaṅkāra. Eastern Book Linkers. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85133-53-9. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Wolfgang Morgenroth (1986). Sanskrit and world culture: proceedings of the Fourth World Sanskrit Conference of the International Association of Sanskrit Studies, Weimar, May 23-30, 1979. Akademie-Verlag. p. 3. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Utpala. Shaiva Devotional Songs of Kashmir: A Translation and Study of Utpaladeva's Shivastotravali. SUNY Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88706-492-0. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Teun Goudriaan (1992). Ritual and Speculation in Early Tantrism: Studies in Honour of André Padoux. SUNY Press. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-0898-8. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ C. C. Barfoot (2001). Aldous Huxley Between East and West. Rodopi. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-420-1347-6. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ "World Sanskrit Conference". p. 6.
- ↑ Werner Menski (1998). South Asians and the Dowry Problem. Trentham Books. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85856-141-7. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Shankaragouda Hanamantagouda Patil (2002). Community Dominance and Political Modernisation: The Lingayats. Mittal Publications. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-867-9. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Dawer BACK, John. "Shivamurthy Swami". London: SOAS, University of London. Archived from the original on 23 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dominik Wujastyk. Mathematics And Medicine In Sanskrit. Motilal Banarsidass Publishers. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3246-6. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Simon Brodbeck. Gender and Narrative in the Mahābhārata. Routledge. p. 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-41540-8. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Rajendra Singh. Annual Review of South Asian Languages and Linguistics: 2009. Walter de Gruyter. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-022559-4. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ "15th World Sanskrit Conference 5th to 10th January, 2012" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
- ↑ Conference Academic Program from Sanskrit Studies Centre, Bangkok: 16th World Sanskrit Conference June 28 to July 2, 2015, Bangkok (Academic Program) பரணிடப்பட்டது 2023-02-05 at the வந்தவழி இயந்திரம் (accessed 29 July 2015
- ↑ 25.0 25.1 "The 17th World Sanskrit Conference". University of British Columbia.
- ↑ Vajpeyi. "How to move a mountain". https://www.thehindu.com/opinion/op-ed/how-to-move-a-mountain/article24682600.ece. பார்த்த நாள்: 2021-11-25.
- ↑ Brockington, John (2012). "Newsletter of the International Association of Sanskrit Studies" (PDF). New Delhi: IASS. p. 8. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
மேலும் படிக்க
தொகு- "Sinological Conferences: ICANAS". Warring States Project - University of Massachusetts, Amherst. Archived from the original on 29 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.
- Islam and the West. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.