எய்டென் மார்க்ரம்

தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்கார்

எய்டென் மார்க்ரம் (Aiden Markram, பிறப்பு 4 அக்டோபர் 1994) என்பவர் தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது.[2][3][4][5] 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆண்டின் 5 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[6][7]

எய்டென் மார்க்ரம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எய்டென் மார்க்ரம்
பிறப்பு4 அக்டோபர் 1994 (1994-10-04) (அகவை 29)
செஞ்சூரியன், கோவ்டெங், தென்னாப்பிரிக்கா
உயரம்6 அடி 1[1] அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை எதிர் விலகு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 332)28 செப்டம்பர் 2017 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வு26 டிசம்பர் 2019 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 122)22 அக்டோபர் 2017 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப6 ஜூலை 2019 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்4
இ20ப அறிமுகம் (தொப்பி 81)22 மார்ச் 2019 எ. இலங்கை
கடைசி இ20ப24 மார்ச் 2019 எ. இலங்கை
இ20ப சட்டை எண்4
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 20 26 66 65
ஓட்டங்கள் 1,424 643 4,479 2,658
மட்டையாட்ட சராசரி 38.48 27.95 41.47 44.30
100கள்/50கள் 4/6 0/2 11/22 8/7
அதியுயர் ஓட்டம் 152 67* 182 183
வீசிய பந்துகள் 164 120 598 715
வீழ்த்தல்கள் 0 3 3 23
பந்துவீச்சு சராசரி 44.00 98.66 27.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/18 1/1 4/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 58/– 32/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 டிசம்பர் 2019

பன்னாட்டுப் போட்டிகள் தொகு

வங்காளதேசத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதல் தேர்வு நூறை நூலிழையில் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ஓட்டங்கள் எடுத்தார்.[8]

அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார்.[9] இவர் 22 அக்டோபர் 2017 அன்று வங்களாதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், அதில் 66 ஓட்டங்கள் எடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.[10]

டிசம்பர் 2017இல், இவர் தனது இரண்டாவது தேர்வு நூறை எடுத்தார். இதன்மூலம் தனது முதல் மூன்று தேர்வுப் போட்டிகளில் இருமுறை நூறு எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]

ஒநாப தலைவர் தொகு

பிப்ரவரி 2018இல், தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவர் பாஃப் டு பிளெசீ விரல் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் (ஒநாப) மற்றும் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார்.[12] Markram was named as South Africa's captain for the remaining ODI fixtures in du Plessis' absence.[13] டு பிளெசீ இல்லாத நிலையில் மீதமுள்ள ஒநாப போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம் பெயரிடப்பட்டார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள், 123 நாட்களாக இருந்தது. இதன்மூலம் அவர் கிரேம் ஸ்மித்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய அணித்தலைவரானார்.[14]

ஆகஸ்ட் 2018இல், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் இவர் இடம்பெற்றார், எனினும் அந்தப் போட்டியில் இவர் விளையாடவில்லை.[15] மார்ச் 2019இல், இவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இ20ப அணியில் இடம் பெற்றார்.[16] அத்தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.[17]

ஏப்ரல் 2019இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம் பெற்றார்.[18][19]

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Aiden Markram leading South Africa U-19". ESPNcricinfo. 5 March 2014. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html. 
  3. Balachandran, Kanishkaa (28 February 2014). "Composed Markram leading by example". ESPNcricinfo. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html. பார்த்த நாள்: 6 March 2014. 
  4. Selvaraj, Jonathan (2 March 2014). "Failure a stepping stone for Markram". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/failure-a-stepping-stone-for-markram/. பார்த்த நாள்: 6 March 2014. 
  5. "Best-player Markram ‘not at his best’". SuperSport. 2 March 2014. http://www.supersport.com/cricket/under19-world-cup/news/140302/Bestplayer_Markram_not_at_his_best. பார்த்த நாள்: 6 March 2014. 
  6. "Markram, Ngidi named among SA Cricket Annual's Top Five". Cricket South Africa. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Markram, Ngidi among SA Cricket Annual's Cricketers of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  8. http://www.espncricinfo.com/story/_/id/20936014/markram-quickly-puts-miss-him
  9. "Amla rested for final ODI; Markram called up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
  10. "3rd ODI, Bangladesh tour of South Africa at East London, Oct 22 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
  11. "Markram's record-breaking start". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
  12. "Finger injury rules Du Plessis out of India ODI and T20 Series". Cricket South Africa இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203005831/http://cricket.co.za/news/23251/Finger-injury-rules-Du-Plessis-out-of-India-ODI-and-T20-Series. பார்த்த நாள்: 2 February 2018. 
  13. "Aiden Markram to fill in as South Africa captain". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1135446.html. பார்த்த நாள்: 3 February 2018. 
  14. "Records | One-Day Internationals | Individual records (captains, players, umpires) | Youngest captains | ESPNcricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283415.html. 
  15. "Chance for South Africa to finish Sri Lanka tour on a high". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
  16. "Markram, Nortje, Qeshile called up for T20Is against Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  17. "2nd T20I (N), Sri Lanka tour of South Africa at Centurion, Mar 22 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  18. "Hashim Amla in World Cup squad; Reeza Hendricks, Chris Morris miss out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  19. "Amla edges out Hendricks to make South Africa's World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்டென்_மார்க்ரம்&oldid=3928197" இலிருந்து மீள்விக்கப்பட்டது