எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா

(எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கில மொழி: Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (S. W. R. D. Bandaranaike, சனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
4-வது இலங்கை பிரதமர்
பதவியில்
12 ஏப்ரல் 1956 – 26 செப்டம்பர் 1959
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்ஒலிவர் குணத்திலக்க
முன்னையவர்ஜோன் கொத்தலாவலை
பின்னவர்விஜயானந்த தகநாயக்கா
அவைத் தலைவர்
பதவியில்
26 செப்டம்பர் 1947 – 12 சூலை 1951
பிரதமர்டி. எஸ். சேனநாயக்கா
முன்னையவர்டி. எஸ். சேனநாயக்கா
பின்னவர்ஜோன் கொத்தலாவலை
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
9 சூன் 1952 – 18 பெப்ரவரி 1956
பிரதமர்டட்லி சேனாநாயக்க
முன்னையவர்என். எம். பெரேரா
பின்னவர்என். எம். பெரேரா
இலங்கை சுதந்திரக் கட்சி
பதவியில்
2 செப்டம்பர் 1951 – 26 செப்டம்பர் 1959
பின்னவர்சி. பி. டி சில்வா
சுகாதார, மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
26 செப்டம்பர் 1947 – 12 சூலை 1951
பிரதமர்டி. எஸ். சேனநாயக்கா
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்டட்லி சேனாநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
அத்தனகலை
பதவியில்
14 அக்டோபர் 1947[1] – 26 செப்டம்பர் 1959
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்ஜேம்சு ஒபயசேகரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1899-01-08)8 சனவரி 1899
கொழும்பு, இலங்கை
இறப்பு26 செப்டம்பர் 1959(1959-09-26) (அகவை 60)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
(1951-1959)
ஐக்கிய தேசியக் கட்சி
(1946-1951)
துணைவர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பிள்ளைகள்சுனேத்திரா
சந்திரிக்கா
அனுரா
பெற்றோர்
  • சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா (தந்தை)
  • டெய்சி ஒபயசேகரா (தாய்)
வாழிடம்ஒரகொல்லை வளவு
முன்னாள் கல்லூரிகிறைஸ்ட் சேர்ச், ஆக்சுபோர்டு
இணையத்தளம்இணையதளம்

குடும்பம்

தொகு

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், கண்டி இராச்சியத்தில் ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்படுபவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[2] பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என சிங்கள வடிவில் மாற்றியது, பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.[3]. சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[4] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை

தொகு

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை

தொகு

தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை

தொகு

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் எதிர்க்கும் விதமாக பௌத்த பிக்கு ஒருவரால் பண்டாரநாயக்கா சுட்டு படுகொலை செய்யபட்டதை அடுத்து மேலும் அப்போது எதிர்கட்சியில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[5] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sessions of Parliament". parliament.lk. Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  2. SWRD was born today
  3. "The doomed King". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
  4. "Sirimavo Bandaranaike: First woman premier". BBC News.
  5. "Bandaranaike - Chelvanayagam Agreement 1957". Tamil Nation.
  6. "ஜே. ஆர். பாதயாத்திரை". Sangam.org.


இலங்கையின் பிரதமர்கள்  
டி. எஸ். சேனநாயக்காடட்லி சேனநாயக்காஜோன் கொத்தலாவலைஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காடபிள்யூ தகநாயக்காசிறிமாவோ பண்டாரநாயக்காஜே. ஆர். ஜெயவர்த்தானாரணசிங்க பிரேமதாசாடி. பி. விஜயதுங்காரணில் விக்கிரமசிங்கசந்திரிகா பண்டாரநாயக்காஇரத்னசிறி விக்கிரமநாயக்காமகிந்த ராஜபக்ச