அங்கெலா மேர்க்கெல்
ஆங்கலா மேர்க்கெல் (Angela Dorothea Merkel, பிறப்பு: சூலை 17, 1954) செருமானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2005 முதல் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். இவர் 2002 முதல் 2005 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும், 200 முதல் 2018 வரை கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகவும் பதவியில் இருந்தார்.[2] இவரே செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார். மேர்க்கல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறைப்படியான தலைவராகவும், உலகின் வலிமைமிக்க பெண்ணாகவும் கருதப்படுகிறார்.[3][4]
ஆங்கலா மேர்க்கல் | |
---|---|
2010 இல் மேர்க்கல் | |
செருமனியின் அரசுத்தலைவர் | |
பதவியில் 22 நவம்பர் 2005 – 8 திசம்பர் 2021 | |
குடியரசுத் தலைவர் |
|
முன்னையவர் | கெர்ஃகாத் சுரோடர் |
பின்னவர் | ஒலாஃப் சோல்த்சு |
கிறித்தவ சனநாயக ஒன்றியத்தின் தலைவர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2000 – 7 திசம்பர் 2018 | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 22 செப்டம்பர் 2002 – 22 நவம்பர் 2005 | |
அதிபர் | கெர்ஃகாத் சுரோடர் |
முன்னையவர் | பீரித்ரிக் மெர்சு |
பின்னவர் | ஊல்ஃப்காங் கெரார்ட் |
ஒன்றியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் | |
பதவியில் 22 செப்டம்பர் 2002 – 21 நவம்பர் 2005 | |
கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சி பொதுச் செயலர் | |
பதவியில் 7 நவம்பர் 1998 – 10 ஏப்ரல் 2000 | |
தலைவர் | ஊல்ப்காங்கு சாபில் |
மெக்கிலன்பர்க்-வோர்பொம்மர்ன் மாநில கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சித் தலைவர் | |
பதவியில் சூன் 1993 – 20 மே 2000 | |
சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு நடுவண் அமைச்சர் | |
பதவியில் 17 நவம்பர் 1994 – 26 அக்டோபர் 1998 | |
அதிபர் | எல்முட் கோல் |
பெண்கள், இளைஞர் விவகார அமைச்சர் | |
பதவியில் 18 சனவரி 1991 – 17 நவம்பர் 1994 | |
அதிபர் | எல்முட் கோல் |
மெக்கிலன்பர்க்-வோர்பொம்மர்ன் மாநிலத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 திசம்பர் 1990 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அங்கெலா டொரத்தேயா கெசுனர் 17 சூலை 1954 ஆம்பர்கு, மேற்கு செருமனி |
அரசியல் கட்சி | சனநாயக விழிப்புணர்வு (1989–1990) கிறித்தவ சனநாயக ஒன்றியம் (கி.செ) (1990) கிறித்தவ சனநாயக ஒன்றிய (1990–இன்று) |
துணைவர்கள் |
|
வாழிடம் | பெர்லின், செருமனி |
முன்னாள் கல்லூரி |
|
கையெழுத்து | |
ஆங்கலா மேர்க்கெல் அன்றைய-மேற்கு செருமனியில் ஆம்பர்கு நகரில் பிறந்து, குழந்தையாக இருக்கும் போதே, கிழக்கு செருமனிக்கு அவரது தந்தை லூதரனிய மதகுருவாக பணியாற்றச் சென்ற போது, குடும்பத்துடன் அங்கு குடியேறினார். கிழக்கு செருமனியில் படித்த ஆங்கலா 1986 இல் குவைய வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, 1989 வரை அறிவியலாளராகப் பணியாற்றினார்.[5] 1989 புரட்சிகளை அடுத்து அவர் தீவிர அரசியலில் இறங்கினார். கிழக்கு செருமனியின் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசில் துணைப் பேச்சாளராகப் பணியாற்றினார். 1990 இல் செருமானிய மீளிணைவை அடுத்து, மெக்கிலன்பர்க்-வோர்பொம்மர்ன் மாநிலத்தில் இருந்து செருமானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய அரசுத்தலைவர் எல்முட் கோலின் தீவிர ஆதரவாளராக, மேர்க்கல் 1991 இல் பெண்கள், இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார், பின்னர் 1994 இல் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சரானார். இவரது கட்சி 1998 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, மேர்க்கெல் கட்சியின் பொதுச் செயலாளரானார், தொடர்ந்து கட்சியின் முதலாவது பெண் தலைவராகவும், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் முதலாவது பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
2005 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, கெர்காத் சுரோடருக்குப் பிறகு செருமனியின் அரசுத்தலைவராக மேர்க்கெல் நியமிக்கப்பட்டார், இதன் மூலம் இவர் கிறித்துவ சனநாயக ஒன்றியம், பவேரிய கிறித்தவ சமூக ஒன்றியம், சமூக சனநாயகக் கட்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கூட்டணியை வழிநடத்தினார். மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவரும், செருமானிய மீளிணைவுக்குப் பிறகு கிழக்கு செருமனியில் இருந்து உருவான முதல் அரசுத்தலைவரும் ஆவார். 2009 கூட்டாட்சித் தேர்தலில், கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று, திறந்த சனநாயகக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது..[6] 2013 தேர்தலில், மெர்க்கலின் கட்சி 41.5% வாக்குகளுடன் பெரும் வெற்றியைப் பெற்று, சமூக சனநாயகக் கட்சியுடன் இரண்டாவது பெரும் கூட்டணியை உருவாக்கியது.[7] 2017 தேர்தலில், மேர்க்கலின் கிறித்துவ சனநாயக ஒன்றியம் நான்காவது முறையாக மிகப்பெரிய கட்சியாக வெற்றியீட்டியது. 2018 மார்ச் 14 அன்று அவர் நான்காவது முறையாக அரசுத்தலைவரானார்.[8][9]
வெளியுறவுக் கொள்கையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவற்றின் பின்னணியில் பன்னாட்டு ஒத்துழைப்பையும், அத்திலாந்திக்குப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் மேர்க்கெல் வலியுறுத்தினார். 2007 இல், மேர்க்கெல் ஐரோப்பியப் பேரவையின் தலைவராக பணியாற்றிய போது, லிசுபன் ஒப்பந்தம், பெர்லின் பிரகடனம் ஆகிய பேச்சுவார்த்தைகளிலும், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் ஐரோப்பியக் கடன் நெருக்கடியை நிர்வகிப்பதில் மேர்க்கெல் முக்கிய பங்கு வகித்தார். பெரும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதற்காக உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் பொது முதலீடுகளில் கவனம் செலுத்தி 2008 இல் ஒரு ஊக்கத் தொகையை வழங்குவதில் வெற்றி கண்டார். உள்நாட்டுக் கொள்கையில், மேர்க்கல் எதிர்கால எரிசக்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். செருமனியில் பைங்குடில் வளிம உமிழ்வைக் குறைக்கவும், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகரிக்கவும் செயலாற்றினார். படைக்குக் கட்டாய ஆள் சேர்த்தலை நிறுத்தினார். சுகாதார சீர்திருத்தம் மற்றும் 2010களின் புலம்பெயர்வோர் நெருக்கடி, 2020 கோவிட்-19 தொற்று ஆகியவை இவரது அரசுக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தன.[10] 2011 முதல் 2012 வரையும், பின்னர் 2014 முதல் ஜி7 நாடுகளின் மூத்த தலைவராகப் பணியாற்றினார். 2014 இல் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசுத்தலைவரானார். அக்டோபர் 2018 இல், கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சி மாநாட்டில் அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், 2021 இல் ஐந்தாவது முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Angela Merkel: Her bio in brief". The Christian Science Monitor. 20 September 2013. https://www.csmonitor.com/World/Europe/2013/0920/Angela-Merkel-her-bio-in-brief.
- ↑ Government continues as acting government பரணிடப்பட்டது 2017-11-15 at the வந்தவழி இயந்திரம், bundeskanzlerin.de, 24 October 2017
- ↑ AFP. "Merkel: From austerity queen to 'leader of free world'". www.timesofisrael.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
- ↑ "The World's Most Powerful Women 2018". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 18 September 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
- ↑ Miller, Saskia (20 April 2020). "The Secret to Germany's COVID-19 Success: Angela Merkel Is a Scientist". The Atlantic.
- ↑ "Germany's Merkel begins new term". BBC. 28 October 2009 இம் மூலத்தில் இருந்து 31 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091031061627/http://news.bbc.co.uk/2/hi/europe/8329490.stm.
- ↑ "German Chancellor Angela Merkel makes a hat-trick win in 2013 Elections". Archived from the original on 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
- ↑ Oltermann, Philip; Connolly, Kate (14 March 2018). "Angela Merkel faces multiple challenges in her fourth term". The Guardian.
- ↑ "ஜெர்மனி : 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்கல்; முதல்முறையாக வலதுசாரி கட்சி வெற்றி". பிபிசி. 25 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Angela Merkel faces outright rebellion within her own party over refugee crisis". The Telegraph. https://www.telegraph.co.uk/news/worldnews/europe/germany/angela-merkel/11984378/Angela-Merkel-faces-outright-rebellion-within-her-own-party-over-refugee-crisis.html.
- ↑ "Angela Merkel to step down in 2021" (in en-GB). BBC News. 29 October 2018. https://www.bbc.com/news/world-europe-46020745.