ஏர் ஹாங்காங்

ஏர் ஹாங்காங் லிமிடெட் (பொதுவாக ஏர் ஹாங்காங்-AHK); என அழைக்கப்படும் இந்நிறுவனம் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தை முக்கிய தளமாகவும் சேக் லெப் கொக், ஹாங்காங்கை தலைமையிடமாகவும் கொண்டு இயங்கும் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து நிறுவனமாகும். இந்த விமான நிறுவனமானது சீன மக்கள் குடியரசு,ஜப்பான்,மலேசியா, பிலிப்பைன்ஸ்,தைவான், சிங்கப்பூர்,தென் கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற ஒன்பது நாடுகளின் பன்னிரண்டு நிறுத்தங்களில் சரக்கு போக்குவரத்தினை கையாண்டு வருகிறது. இந்நிறுவனம் பெரும்பாலும் ஏர்பஸ் A300-600F என்ற மிகப்பெரிய விமானத்தை தனது சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கேத்தே பசிபிக் நகரத்தின் தெற்கு கோபுர கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைத்துள்ளது.[1]

ஏர் ஹாங்காங்
香港華民航空
IATA ICAO அழைப்புக் குறியீடு
LD AHK AIR HONG KONG
நிறுவல்நவம்பர் 1986
செயற்பாடு துவக்கம்4 பிப்ரவரி 1988
மையங்கள்ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை12
சேரிடங்கள்12
தாய் நிறுவனம்கதே பசிபிக்
தலைமையிடம்ஹாங்காங்
முக்கிய நபர்கள்
  • பாட்ரிக் ஹாலே (தலைவர்)
  • அகஸ்டஸ் டங் (தலைமை நிர்வாக அதிகாரி)
வலைத்தளம்www.airhongkong.com.hk
ஏர் ஹாங்காங்
சீன எழுத்துமுறை 香港華民航空公司
எளிய சீனம் 香港华民航空公司

வரலாறு

தொகு

ஹாங்காங் நகரைச் சார்ந்த மூன்று தொழிலதிபர்களால் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் Boeing 707-320C என்ற சரக்கு விமானம் மூலம் ஹாங்காய் ஏர் தனது சரக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்தது.ஹாங்காங் நகரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்த கதே பசிபிக் என்னும் மிகப் பெரும் விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் ஹாங்காங் நிறுவனத்தின் 75 சதவீதப் பங்குகளை 1994ம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கி கையகப்படுத்தியது. மீதமுள்ள 25 சதவீத பங்குகளையும் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கி தனது உடைமையாக்கி விரிவுபடுத்தியது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் டி ஹெச் எல் வேர்ட்டுவைல்டு எக்ஸ்பிரஸ் என்ற பன்னாட்டு சரக்கு நிறுவனத்திற்கு 40 சதவீத பங்குகளை விற்பனை செய்தும் தன்னகத்தே 60 சதவீத பங்குகளை வைத்தும் கதே பசிபிக் நிறுவனம் கூட்டிணைப்பு வணிகத்தில் ஈடுபட்டது.

2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி முதல் டி ஹெச் எல் நிறுவனத்திடமிருந்த பங்குகளை மறுபடியும் கையகப்படுத்தி கதே பசிபிக் நிறுவனமே முழு உரிமையைக் கொண்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.[2]

வரலாறு

தொகு
 
கதே பசிபிக் நகர வளாகத்தில் அமைந்துள்ள ஏர் ஹாங்காங் நிறுவன தலைமை அலுவலகம்
 
ஏர் ஹாங்காங் நிறுவனத்தின் பழைய சின்னம்

லண்டன் நகரைச் சார்ந்த ரோஜர் வால்மன், ஹாங்காங் நகரின் தாமஸ் சங் மற்றும் ஒரு தொழிலதிபர் என மூவரால் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏர் ஹாங்காங் ஆரம்பிக்கப்பட்டது. Boeing 707-320C என்ற ஒற்றை சரக்கு விமானம் கொண்டு இந்தியாவின் அப்போதைய பம்பாய் (தற்போது மும்பை), பிரிட்டன் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு ஆகிய விமான நிலையங்களுக்கு இடையே 1988ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் முதல் சரக்கு போக்குவரத்தினை ஆரம்பித்தது. 1989ம் ஆண்டு அக்டோபர் 18 முதல் இந்நிறுவனத்தின் சரக்கு போக்குவரத்து சேவைகள் நிலையாக முறைப்படுத்தப்பட்டது.1990ம் ஆண்டுகளில் மற்றுமொரு Boeing 707-320C சரக்கு விமானத்தை தனது பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.மேலும் ஆக்லாந்து, புருஸில்ஸ், மெல்போர்ன்,நகோய்,ஒசாகா,பெர்த்,பூசான்,சிங்கப்பூர்,சிட்னி,வியன்னா சூரிச் விமான பாதையை பயன்படுத்தும் உரிமை பெற்று மான்செஸ்டர் வரை சரக்கு போக்குவரத்தினை விரிவுபடுத்தியது.[3][4] ஜப்பான் நாட்டின் நகோய் விமான நிலையத்தில் சரக்கு பரிவர்த்தனை செய்யவும் ஹணோய் மற்றும் ஹோ சி மின் நகர விமான வழித்தடங்களை பயன்படுத்தவும் 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உரிமை பெற்றது.[5] 1992ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏர் ஹாங்காங் நிறுவனம் கைர்ன்ஸ், டார்வின், [டாக்கா]], துபாய்,காத்மண்டு,கோலாலம்பூர் மற்றும் டவுண்ஸ்வில்லே போன்ற நிலையங்களின் வான்வழித்தடங்களில் பயணிக்கும் உரிமை பெற்று தனது சரக்கு போக்குவரத்து சேவையை மேலும் விரிவாக்கியது. 1993 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்கனவே அதனிடம் உள்ள இரு Boeing 747-100SF சரக்கு விமானங்களோடு மேலும் Boeing 707-320C என்ற சரக்கு விமானத்தை இணைத்து, புருஷில்ஸ், துபாய் சிங்கப்பூர் ஹோ சி மின் நகரம் போன்ற விமான நிலையங்களிலும் சரக்கு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு சரக்கு போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தியது.[6]

சரக்கு போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வழங்கிவந்தாலும் மூன்று போயிங் நிறுவன சரக்கு விமானங்களை பராமரிக்கவும் வாடகை செலுத்தவுமே நிதி நிலைமை இருந்த காரணத்தால் ஜெனரல் எலக்ரிக் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான போலரிஸ் விமான ஒப்பந்த நிறுவனத்துடன் 1993ம் ஆண்டு பல்வேறு விமான நிலையங்களுக்கு தனது மூன்று Boeing 747-100SF ரக சரக்கு விமானங்களை பயன்படுத்திய வகையில் செலுத்த வேண்டிய வாடகை தொகைக்காக 49 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இந்நிறுவனம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. ஆனால் கதே பசிபிக் என்ற சர்வதேச சரக்கு போக்குவரத்து நிறுவனம் 200 மில்லியன் ஹாங்காங் டாலர் செலுத்தி ஏர் ஹாங்காங் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை கையகப்படுத்தியதன் மூலம் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.[7][8] குறைந்த சரக்கு பயன்பாடு மற்றும் அதிக நிதிக்குறைபாடு போன்ற காரணத்தினால் அதன் சரக்கு விமானங்களான Boeing 707-320C மற்றும் Boeing 747-100SF ஆகியவற்றின் ஒப்பந்தங்களை முறையே 1994ம் ஆண்டு நவம்பர் மற்றும் 1995ம் ஆண்டு ஜனவரி மாதங்களில் முடித்தது.[9] 2000ம் ஆண்டுகளில் ஏர் ஹாங்காங் நிறுவனத்தில் மூன்று Boeing 747-200F ரக சரக்கு விமானங்களைக் கொண்டு புருஷல்ஸ் துபாய், மான்ஸ்செஸ்டர் மற்றும் ஒசாகா போன்ற விமான நிவையங்களுக்கு சரக்கு போக்குவரத்து சேவையினை வழங்கி வந்தது.[10]

2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீதமுள்ள 25 சதவீத பங்குகளையும் தன்வசப்படுத்தி கதே பசிபிக் நிறுவனம் , ஏர் ஹாங்காங் நிறுவனத்தை முழுமையாக தன் நிர்வாகத்தின் கீழ் கொன்டு வந்தது. துபாய் மான்செஸ்டர் மற்றும் புருசில்ஸ் போன்ற விமானநிலையங்களில் வழங்கி வந்த சரக்கு போக்குவரத்து சேவை நிர்வாக மாற்றம் மற்றும் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு ஆசிய சந்தையை மட்டுமே முழுமையாக மையப்படுத்தி, அதே ஆண்டு ஜூலை முதல் இயங்கியது. 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 30 சதவீத பங்குகளை விற்பனை செய்து பணம் திரட்டி இடைநிலை சரக்கு விமானங்களை வாங்க திட்டமிட்டு, டி ஹெச் எல் எல் வேர்ல்ட்வைட் எக்ஸ்பிரஸ் (DHL Worldwide Express -DHL) என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. அதன்மூலம் ஆசிய பசுபிக் பசுபிக் பகுதி சரக்கு போக்குவரத்தை தன்வசப்படுத்த திட்டமிடப்பட்டு 2004 ஆம் ஆண்டிற்குள் ஐந்து சரக்கு விமானங்களை வாங்க சுமார் 300 மில்லியன் டாலரும், 2010 ஆம் ஆண்டிற்குள் மூன்று விமானங்கள் வாங்க சுமார் 100 மில்லியன் டாலரும் ஒதுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 2003ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மேலும் 10 சதவீத பங்குகளை அதே நிறுவனத்திற்கு விற்று பணம் திரட்டியது.[8][11]

ஏர்பஸ் நிறுவனத்தின் Airbus A300-600F வகை சரக்கு விமானத்தின் புதிய தயாரிப்பான Airbus A300-600F General Freighter, என்ற சரக்கு விமானத்தின் முதல் வாடிக்கையாளர் ஏர் ஹாங்காங் ஆகும். இந்தவகை விமானத்தில் எந்த வடிவத்தில் அமைந்துள்ள சரக்குகளை இருந்தாலும் எத்தகைய சரக்கு பெட்டகங்களையும் கையாளக்கூடிய வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் விமானத்தின் கீழ் தட்டில் அமைக்கப்பட்டுள்ள பக்கவாட்டு கதவின் வழியாக எத்தகைய சரக்குகளையும் உள்ளே ஏற்றவும் இறக்கவும் வசதி உள்ளது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் ஏர்பஸ் Airbus A300-600F General Freighter வகை சரக்கு விமானத்தை வாங்கிய இந்நிறுவனம், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடைசி மற்றும் எட்டாவது விமானத்தை பெற்றுக்கொண்டது. இந்த சரக்கு விமானங்கள் General Electric (GE) CF6-80C2 என்ற இழுவை இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி முதல் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனம் இந்த எட்டு சரக்கு விமானங்களின் பராமரிப்பை 14 ஆண்டுகள் செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளது. .[12][13][14]

நவம்பர் 2007 ஆம் ஆண்டு ஏர் ஹாங்காங் நிறுவனம் சிறந்த பராமரிப்பு, விமான பயன்பாடு, மற்றும் சராசரி தாமத நேரக் குறைப்பு போன்ற காரணங்களுக்காக விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து சிறந்த செயல்பாடு நிறுவனம் என விருது பெற்றது.[15]

2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி முதல் டி ஹெச் எல் நிறுவனத்திடமிருந்த பங்குகளை மறுபடியும் கையகப்படுத்தி கதே பசிபிக் நிறுவனமே முழு உரிமையை தன்வசப்படுத்தி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.[2]

செல்லுமிடங்கள்

தொகு
 
An Air Hong Kong aircraft landed in Narita International Airport.

ஏர் ஹாங்காங் கீழ்காணும் விமான நிலையங்களில் தனது சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. as of 7 மே 2010:[16][17]

நாடு நகரம் விமானநிலையம் குறிப்புகள் மேற்கோள்கள்
சீனா பீஜிங் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
ஷாங்காய் சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஹாங்காங் ஹாங்காங் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் விமான முனையம்
ஜப்பான் நாகோய ஷுபு சென்ட்ரயர் சர்வதேச விமான நிலையம்
ஒசாகா கன்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
டோக்கியோ நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
மலேசியா பினாங் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
பிலிப்பைன்ஸ் ஸிபு மாக்டன் - ஸிபு சர்வதேச விமான நிலையம்
மணிலா நிநோ அக்யூநோ சர்வதேச விமான நிலையம்
சிங்கப்பூர் சிங்கப்பூர் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
தென் கொரியா சியோல் சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்|
தைவான் தைபே தையோன் சர்வதேச விமான நிலையம்
தாய்லாந்து பாங்காக் சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
வியட்நாம் ஹோ சி மின் நகரம் சுவர்ணபூமி வானூர்தி நிலையம்

சரக்கு விமனங்கள்

தொகு
 
Air Hong Kong Airbus A300-600F General Freighter (B-LDH)
 
Air Hong Kong Boeing 747-400F.

ஏன் ஹாங்காங் நிறுவனம் கீழ்க்கண்ட சரக்கு விமானங்களை பயன்படுத்தி வருகிறது (as of October 2019):[18]

Air Hong Kong fleet
விமானம் சேவையில் உள்ளவை Orders குறிப்புகள்
Airbus A300-600F 8 Operated for DHL Aviation
Airbus A300-600RF 1 Operated for DHL Aviation
ஏர்பசு ஏ330 2 Operated by ASL Airlines Ireland
மொத்தம் 11 0

The airline was the launch customer for the Airbus A300-600F General Freighter, which was the new variant of the Airbus A300-600F.[19]

Former Fleet

தொகு
Aircraft Total Introduced Retired Notes
Boeing 707-320C மறை நிலை மறை நிலை மறை நிலை
Boeing 727-200F மறை நிலை மறை நிலை மறை நிலை
Boeing 747-100SF 4 1991 1996
Boeing 747-200F 1 1994 1996
Boeing 747-200SF 3 1997 2004
Boeing 747-400BCF 4 2011 2018

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory: World Airlines." Flight International. 16–22 March 2004. 65. "AIR HONG KONG [LD1 (AHK) 4F South Tower; Cathay Pacific City, 8 Scenic Road, Hong Kong International Airport, Lantau, Hong Kong (SAR), China"
  2. 2.0 2.1 "Cathay takes full control of freighter Air Hong Kong" (in en). South China Morning Post. http://www.scmp.com/business/companies/article/2101763/cathay-takes-full-control-freighter-air-hong-kong. 
  3. "News Scan". Flight International (Reed Business Information): p. 7. 26 March 1988. http://www.flightglobal.com/pdfarchive/view/1988/1988%20-%200695.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  4. "World Airline Directory 1990". Flight International (Reed Business Information): p. 56. 14–20 March 1990. http://www.flightglobal.com/pdfarchive/view/1990/1990%20-%200708.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  5. "World Airline Directory 1991". Flight International (Reed Business Information): p. 54. 27 March – 2 April 1991. http://www.flightglobal.com/pdfarchive/view/1991/1991%20-%200736.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  6. "World Airline Directory 1993". Flight International. Reed Business Information. 24–30 March 1993. p. 58. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  7. "Cathay plans Air Hong Kong take-over". Flight International (Reed Business Information): p. 6. 30 March – 5 April 1994. http://www.flightglobal.com/pdfarchive/view/1994/1994%20-%200852.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  8. 8.0 8.1 "Air Hong Kong". Air Hong Kong. Archived from the original on 9 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Weak demand forces Air Hong Kong to cut fleet". Flight International (Reed Business Information). 11–17 January 1995. http://www.flightglobal.com/pdfarchive/view/1995/1995%20-%200060.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  10. "World Airline Directory 2000". Flight International (Reed Business Information): p. 60. 4–10 April 2000. http://www.flightglobal.com/pdfarchive/view/2000/2000%20-%201064.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  11. Fullbrook, David (15–21 October 2002). "Cathay and DHL seal cargo tie-up". Flight International (Reed Business Information): p. 11. http://www.flightglobal.com/pdfarchive/view/2002/2002%20-%203031.html. பார்த்த நாள்: 29 July 2009. 
  12. Air Hong Kong(13 September 2004). "Air Hong Kong takes delivery of its first A300-600GF aircraft". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 29 July 2009. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  13. Air Hong Kong(28 June 2006). "Final A300-600GF delivered to Air Hong Kong". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 29 July 2009. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  14. General Electric(25 January 2005). "AHK Air Hong Kong Signs 14-Year MCPHSM Agreement". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 29 July 2009. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  15. Air Hong Kong(15 November 2007). "Air Hong Kong awarded for operational excellence". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 29 July 2009. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  16. "Air Hong Kong offers services via the Hong Kong hub to major cities in Asia". Air Hong Kong. Archived from the original on 22 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Air Hong Kong flight schedule". Air Hong Kong. Archived from the original on 22 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "Global Airline Guide 2019 (Part One)". Airliner World (October 2019): 15. 
  19. "Air Hong Kong – the only all cargo airline of Hong Kong". Air Hong Kong. Archived from the original on 13 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_ஹாங்காங்&oldid=3928307" இலிருந்து மீள்விக்கப்பட்டது