ஐரோப்பிய எலிப்பாம்பு
ஐரோப்பிய எலிப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
பேரினம்: | ஜமென்னிசு
|
இனம்: | ஜ. சிடுலா
|
இருசொற் பெயரீடு | |
ஜமென்னிசு சிடுலா (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
ஐரோப்பிய எலிப் பாம்பு (European ratsnake) அல்லது சிறுத்தை பாம்பு (ஜமென்னிசு சிடுலா), என்பது ஐரோப்பா, அனத்தோலியா மற்றும் காக்கேசியா ஆகிய நாடுகளில் காணப்படும் அகணிய விசமற்ற கொலுப்ரிட் பாம்பு சிற்றினமாகும்.
புவியியல் வரம்பு
தொகுஐ. சிடுலா அல்பேனியா, போசுனியா எர்செகோவினா, பல்காரியா, குரோவாசியா, கிரேக்கம், இத்தாலி, வடக்கு மக்கெதோனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, துருக்கி, உக்ரைன் மற்றும் சைப்பிரசு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]
விளக்கம்
தொகுசிறுத்தை பாம்பு சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் சிவப்பு அல்லது பழுப்பு நிற குறுக்குவெட்டுப் புள்ளிகள் கொண்ட முதுகுத் தொடர்களைக் கொண்டுள்ளது. இவற்றின் விழிம்பு கருப்பு நிறமுடையது. ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய கரும்புள்ளிகள், முதுகுப் புள்ளிகளுடன் மாறி மாறி வருகின்றன. பிடர் எலும்பு மற்றும் கழுத்தில் Y-வடிவ அடர் குறி, கண்ணிலிருந்து கண்ணுக்கு பிறை வடிவ கருப்புப் பட்டை மற்றும் போஸ்டோகுலர்களிலிருந்து குறுக்காக வாயின் மூலையில் ஒரு கருப்பு பட்டை காணப்படும். வயிறு வெண்மையானது, கருப்பு நிறத்துடன் அல்லது கிட்டத்தட்ட முற்றிலும் பின்புறமாக இருக்கும். முதுகெலும்பு செதில்கள் 25 அல்லது 27 வரிசைகளில் உள்ளன. மேலும் இவை மென்மையாகவும் இருக்கும். முதிர்வடைந்த பாம்புகள் 90 cm (35+1⁄2 அங்) வரை வளரலாம். இதில் வால் நீளம் 16 cm (6+1⁄4 அங்) ஆகும்.[2]
வாழிவிடம்
தொகுமத்திய தரைக்கடல் வகை புதர்கள் நிறைந்த தாவரங்கள், மேய்ச்சல் நிலங்கள், தோட்டங்கள் மற்றும் கிராமப்புற தோட்டங்கள் ஆகியவை ஐரோப்பிய எலிப்பாம்பின் இயற்கையான வாழிடங்களாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Wolfgang Böhme, Petros Lymberakis, Rastko Ajtic, Varol Tok, Ismail H. Ugurtas, Murat Sevinç, Pierre-André Crochet, Claudia Corti, Idriz Haxhiu, Roberto Sindaco, Aziz Avci, Jelka Crnobrnja Isailovic, Yusuf Kumlutaş (2009). "Zamenis situla". IUCN Red List of Threatened Species 2009: e.T61444A12485786. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T61444A12485786.en. https://www.iucnredlist.org/species/61444/12485786. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ 2.0 2.1 Boulenger GA (1894). Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume II., Containing the Conclusion of the Colubridæ Aglyphæ. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xi + 382 pp. + Plates I-XX. (Coluber leopardinus, pp. 41-42).
- ↑ "Zamenis situla (LINNAEUS, 1758)". reptile-database.reptarium.cz. The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 4 December 2023.
மேலும் படிக்க
தொகு- Arnold EN, Burton JA (1978). A Field Guide to the Reptiles and Amphibians of Britain and Europe. London: Collins. 272 pp. + Plates 1-40. ISBN 0-00-219318-3. (Elaphe situla, pp. 197–198 + Plate 36 + Map 110 on p. 266).
- Linnaeus C (1758). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio Decima, Reformata. Stockholm: L. Salvius. 824 pp. (Coluber situla,new species, p. 223). (in Latin).
- Venchi A, Sindaco R (2006). "Annotated checklist of the reptiles of the Mediterranean countries, with keys to species identification. Part 2 — Snakes (Reptilia, Serpentes)". Annali del Museo di Storia Naturale "G. Doria", Genova 98: 259–364.