ஐ ஒலிவரி (I soundtrack album) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய திகில் திரைப்படத்தின் ஒலி வரி ஆகும். இதனை எழுதி இயக்கியவர் ஷங்கர் (திரைப்பட இயக்குநர்). ஏ. ஆர். ரகுமான் இத்திரைப்படத்தின் பாடலுக்கான இசைகளையும், பின்னணி இசைப் பணிகளையும் மேற்கொண்டார்.[1] இசைக்கலப்பு உட்பட இதில் ஏழு ஒலிவரிகள் உள்ளன .

ஐ திரைப்படத்தின் ஒலிவரி
ஒலி வரி
ஏ. ஆர். ரஹ்மான்
நீளம்33:56
மொழி
இசைத்தட்டு நிறுவனம்
  • சோனி மியூசிக்
  • டி-சீரிஸ் (Hindi)
ஏ. ஆர். ரஹ்மான் காலவரிசை
காவியத் தலைவன் ஐ திரைப்படத்தின் ஒலிவரி லிங்கா

2012 இல் தொடங்கப்பட்ட பாடல் ஒலிப்பதிவானது 2014 இல் முடிவடைந்தது. பாங்கரா (இசை), கூடலக இசை போன்ற பல இசை வகைகளில் இத்திரைப்படத்தின் ஒலிவரி வெளிவந்தது. ஒலிவரியானது செப்டம்பர் 9, 2014 இல் வெளியானது.[2]

ஒலிவரி வெளியீட்டின் போது ஆர்னோல்டு சுவார்செனேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதன்இந்தி பதிப்பானது மும்பை பி வி ஆர் திரையரங்கில் டிசம்பர் 29, 2014 இல் நடைபெற்றது. இதற்கு அடுத்த நாள் தெலுங்குப் பதிப்பு வெளியானது.

இந்தத் திரைப்பட ஒலித்தட்டிற்கு நேர்மையான விமர்சனங்களே கிடைத்தன. 2014 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான ஒலித்தட்டுகளில் முதல் இருபது இடங்களுக்குள் வந்ததாக ஐரூன்சு கடைதெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருதுகளில் ஏ. ஆர். ரகுமானும் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் எனும் பாடலிற்காக மதன் கார்க்கி சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பெற்றனர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதுக்கு சிரேயா கோசல் பெயர் அதே பாடலுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டது. கபிலன் என்னோடு நீ இருந்தால் எனும் பாடலுக்காக சிறந்த கவிஞருக்காக பரிந்துரை செய்யப்பட்டது. சித் ஸ்ரீராம் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பெற்றார்.[3]

வளராக்கம்

தொகு

இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ. ஆர் .ரஹ்மான் ஒப்பந்தம் ஆனார்.[4] 2012, சூலை ஆரம்பத்தில் விஜய் பிரகாஷ் பரேஷனய்யா எனும் பாடலைப் பாடினார்.இது தமிழில் வந்த மெர்சலாயிட்டேன் எனும் பாடலின் தெலுங்குப் பதிப்பு ஆகும்.[5] சனவரி 2013 இல் ஐலா, ஐலா எனும் பாடல் பதிவு செய்யப்பட்டது. தான் இதுவரை வேலை செய்ததிலேயே இந்தப் பாடல் தான் தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக மதன் கார்க்கி கூறியுள்ளார். இந்தப்பாடலில் படத்தின் கருவான விளம்பரங்களை (சுமார் 6-7) இடம்பெறச்செய்திருப்பர். இந்தப் பாடலைப் பற்றி மதன்கார்க்கி கூறுகையில் இந்தப்பாடல் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது . காரணம், இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளுமே இரு பொருள் படக் கூடிய வகையில் அமைந்திருக்கும் அதாவது நீங்கள் கேட்கும் போது ஒரு பொருளிலும் திரையில் பார்க்கையில் மற்றொரு பொருளிலும் வரும் எனக் கூறினார்.[6] 5.30நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்பாடலில் பாங்கரா, ஆப்பரா, பரப்பிசை போன்ற பல இசை வடிவங்கள் இடம்பெற்றிருக்கும்[7]. சங்கர் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் என்னோடு நீ இருந்தால் நீ பாடலானது பெப்ரவரி 14, 2013 இல் சுனிதா சாரதியை வைத்து மட்டுமே ஒலிப்பதிவு செயதனர்.[8] பின் சித் ஸ்ரீராமை அதே பாடலுக்குப் பாடச் செய்தார். ஏனெனில் கடல் திரைப்படத்தில் இவர் பாடிய அடியே பாடல் அவருக்கான அங்கீகாரத்தை தரவில்லை என ரஹ்மான் கருதி அவருக்கு இரண்டாம் வாய்ப்பாக இதனை சித் ஸ்ரீராமுக்கு வழங்கினார். மெர்சலாயிட்டேன் பாடலை அனிருத் ரவிச்சந்திரன், நீத்தி மோகன் ஆகியோர் பாடினர்[9]. சூலை4, 2014 இல் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கான பாடல் பதிவுகள் முடிந்தன.[10][11] மதன் கார்க்கி தன்னுடைய பாடலில் உபயோகப்படுத்திய லேடியோ என்ற வார்த்தக்கான பொருளை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கினார்.[12]

பாடல்கள்

தொகு

தமிழ்

தொகு
ஐ ஒலிவரிகள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "மெர்சலாயிட்டேன்"  கபிலன்அனிருத் ரவிசந்திரன், நீத்தி மோகன் 05:04
2. "என்னோடு நீ இருந்தால்"  கபிலன்சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி 05:52
3. "லேடியோ"  மதன் கார்க்கிநிகிதா காந்தி 04:42
4. "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்"  மதன் கார்க்கிஹரிசரன், சிரேயா கோசல் 05:08
5. "ஐலா, ஐலா"  மதன் கார்க்கிஆதித்யா ராவ் , நடாலி டி, லுசியோ 05:34
6. "என்னோடு நீஇருந்தால் (மறுஆக்கம்)"  கபிலன்சின்மயி, சித் ஸ்ரீராம் 04:12
7. "மெர்சலாயிட்டேன் (இசைக்கலப்பு)"  கபிலன்அனிருத், நீத்தி மோகன் 03:20
மொத்த நீளம்:
33:56

இந்தி

தொகு
ஐ ஒலிவரிகள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "இசாக் தாரி"  இர்ஷாத் கமில்நகாஷ் அஜீஸ் , நீத்தி மோகன் 05:01
2. "தும் டோடோ நா (ஆண் பதிப்பு)"  இர்ஷாத் கமில்அஷ் கிங், சுனிதா சௌஹான் 05:49
3. "லேடியோ"  இர்ஷாத் கமில்நிகிதா காந்தி 04:38
4. "தூ சாலே"  இர்ஷாத் கமில்அரிஜித் சிங், சிரேயா கோசல் 05:08
5. "ஐலா"  இர்ஷாத் கமில்ஷிராஸ் உப்பல் , நடாலி டி, லுசியோ 05:32
6. "தும் டோடோ நா (பெண் பதிப்பு)"  இர்ஷாத் கமில்ஆஷ் கிங், பெலா ஷெண்டே 04:12
7. "இசாக் தாரி (ரீமிக்ஸ்)"  இர்ஷாத் கமில்நகாஷ் அஜீஸ் , நீத்தி மோகன் 03:24

சான்றுகள்

தொகு
  1. "ஐ திரைப்படப் பாடலகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது". சி என் என். 15 சூலை 2012. Archived from the original on 13 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |= ignored (help)
  2. "ஹாலிவுட் பிரபலம் அர்னால்டு ஐ இசை வெளியீட்டு விழாவில் பங்குபெற்றார்". தி இந்து. 6 செப்டம்பர் 2014. Archived from the original on 11 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  3. "63 ஆவது தமிழ் பிலிம் ஃபேர் விருது வென்றவர்கல்". பிலிம்பேர்.காம். பார்க்கப்பட்ட நாள் 2016-06-19.
  4. Ramanujam, Srinivasa (2 ஜூலை 2014). "Anirudh sings for Shankar's 'Ai'". தி இந்து. Archived from the original on 14 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "Director Shankar to start 'I' with Vikram". 'IBNLive'. 22 சூன் 2012 இம் மூலத்தில் இருந்து 2012-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120626055820/http://ibnlive.in.com/news/director-shankar-to-start-i-with-vikram/267401-71-180.html. பார்த்த நாள்: 15 ஜூலை 2012. 
  6. "I Tamil Movie Songs lyrics". tamilsonglyrics. Archived from the original on 2015-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
  7. Srivathi, Apoorva (7 அக்டோபர் 2014). "Aditya goes ‘Aila…’". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/article6475411.ece. பார்த்த நாள்: 7 அக்டோபர் 2014. 
  8. "AR Rahman records one for Shankar's I". The Times of India. 14 பிப்ரவரி 2013 இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6SYLk65Ol?url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/AR-Rahman-records-one-for-Shankars-I/articleshow/18496215.cms?referral=PM. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2013. 
  9. Sundar, Priyanka (8 ஆகத்து 2014). "Language no barrier for Neeti Mohan". Deccan Chronicle. Archived from the original on 13 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "AR Rahman delivers 'Ai' tunes". The Times of India. 4 ஜூலை 2014 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140705045701/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/AR-Rahman-delivers-Ai-tunes/articleshow/37758903.cms. பார்த்த நாள்: 8 ஜூலை 2014. 
  11. "AR Rahman wraps up scoring tunes for Shankar's 'Manoharudu'". The Times of India. 4 ஜூலை 2014. Archived from the original on 13 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  12. "Shankar's 'I' popularizes Tamil!". Behindwoods. 18 செப்டம்பர் 2014. Archived from the original on 18 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_(ஒலி_வரி)&oldid=4055552" இலிருந்து மீள்விக்கப்பட்டது