ஒரு கல்லூரியின் கதை

நந்தா பெரியசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு கல்லூரியின் கதை 2005 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4]. இப்படம் தெலுங்கில் காலேஜ் டேஸ் என்று மொழிமாற்றப்பட்டு 2008 இல் வெளியானது.

ஒரு கல்லூரியின் கதை
இயக்கம்நந்தா பெரியசாமி
தயாரிப்புசக்தி சங்கவி
மோகனா சங்கவி
கதைநந்தா பெரியசாமி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
சோனியா அகர்வால்
சந்தானம்
சாருஹாசன்
மௌலி
பெரியார்தாசன்
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
கலையகம்சோழா கிரியேஷன்ஸ்
வெளியீடு2 செப்டம்பர் 2005 (2005-09-02)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

கல்லூரி நண்பர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திக்க விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் நண்பன் சத்யா (ஆர்யா) கோமா நிலையில் இருப்பதாக அவன் தந்தை வந்து தெரிவிக்கிறார். மனநிலை சோதனையில் சத்யா தன் கல்லூரி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்வதாக அவனைப் பரிசோதிக்கும் மருத்துவர் (சாருஹாசன்) தெரிவிக்கிறார். கல்லூரியில் தன்னுடன் படித்த ஜோதியை (சோனியா அகர்வால்) சத்யா காதலித்துள்ளான். ஆனால் படிப்பை முடிக்கும்வரை அவன் தன் காதலை ஜோதியிடம் தெரிவிக்கவில்லை. இது அவன் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளதாக கூறும் மருத்துவர், மீண்டும் அவனுடைய கல்லூரி காலத்திற்கு சென்றால் மட்டுமே அவன் நினைவுகளை மீட்கமுடியும் என்று கூறுகிறார்.

சத்யாவைக் குணப்படுத்த விரும்பும் நண்பர்கள் அதற்காக ஒரு வழியைத் திட்டமிடுகின்றனர். அவனுடைய காதலி ஜோதியைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் ஜோதிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியை அறிகின்றனர். தாங்கள் படித்த கல்லூரிக்குத் திரும்பும் அவர்கள், தங்களுடன் படித்த அனைத்து நண்பர்களையும் வரச்செய்து, அவர்கள் படித்த 2000 ஆவது ஆண்டு கல்லூரி இருந்தது போன்ற பழைய வடிவத்திற்கு மாற்றுகின்றனர். இப்போது சத்யாவைக் கல்லூரிக்கு அழைத்து வருகின்றனர். கல்லூரிக்கு வரும் சத்யாவுக்கு பழைய நினைவுகள் மீள்கிறது. அவன் கல்லூரியில் படித்த காலங்களும், அவன் ஜோதியை விரும்பியதும் நினைவில் வருகிறது.

ஒருநாள் இப்போது இருக்கும் சூழல் போலியானது என்று சத்யாவிற்குத் தெரியவருகிறது. கல்லூரியில் கடைசி நாளன்று நடந்தவை அவனுக்கு ஞாபகம் வருகிறது. சத்யா தன் காதலை ஜோதியிடம் தெரிவிக்க கோயில் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போது அவன் தலையில் எதிர்பாராவிதமாக அடிபடுகிறது. கண் விழிக்கும் சத்யா நிகழ்காலத்திற்குத் திரும்புகிறான். சத்யா குணமடைந்ததும் நண்பர்கள் அனைவரும் பிரிந்துசெல்ல முடிவு செய்கின்றனர். பிரிவதற்கு முன் ஜோதியிடம் காதலை சொல்லும் சத்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறாள் ஜோதி.

நடிகர்கள்

தொகு

படத்தின் பாடலாசிரியர் யுவன் சங்கர் ராஜா. பாடலாசிரியர் நா. முத்துக்குமார்[5][6].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 காதல் என்பது சின்மயி, ஹரிஸ் ராகவேந்திரா 5:25
2 கண்கள் கலங்கிட கார்த்திக் 4:54
3 கண்கள் கண்டது கே.கே, சுஜாதா மோகன் 4:50
4 பங்குபோடு கே.கே, ரஞ்சித் 4:04
5 உனக்கென்று ஒருத்தி உன்னிமேனன் 1:07
6 தலப்பா கட்டுடா ஸ்ரீராம் 3:03
7 கண்கள் கண்டது கங்கா, ரஞ்சித் 4:48
8 கீதா மேல தேவன், ரஞ்சித், சவுந்தர்ராஜன் 3:55
9 காதல் என்பது ரஞ்சித் 4:17

விமர்சனம்

தொகு

விகடன்: இப்படத்தில் இடம்பெற்ற 'கண்கள் கலங்கிட' என்ற பாடல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாக்களில் இடம்பெறும் பாடலாகும்[7].

தமிழோவியம்.காம் : இயக்குனர் நந்தா பெரியசாமி வித்தியாசமான கதையை யோசித்த அளவிற்கு பாத்திரப்படைப்புகளைப் பற்றியும் யோசித்திருந்தால் இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும்[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஒரு கல்லூரியின் கதை". Archived from the original on 2014-01-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "திரைப்படம்".
  3. "திரைப்படம்".
  4. "திரைப்படம்".
  5. "பாடல்கள்". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  6. "பாடல் வரிகள்".
  7. "கண்கள் கலங்கிட - பாடல்".
  8. "விமர்சனம்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கல்லூரியின்_கதை&oldid=4146443" இலிருந்து மீள்விக்கப்பட்டது