ஓபகா
ஓபகா (Oophaga) என்பது ஒன்பது சிற்றினங்களை உள்ளடக்கிய நச்சு அம்புத் தவளைகளின் பேரினமாகும். இவற்றில் பல முன்பு டென்ட்ரோபேட்ஸ் பேரினத்தில் வைக்கப்பட்டன.[1] இந்த தவளைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் நிக்கராகுவாவிலிருந்து கொலம்பியா எல் சோகோ வழியாக வடக்கு ஈக்வடார் வரை (1,200 மீ (3,900 அடி) க்கும் குறைவான உயரத்தில்) பரவிக்காணப்படுகின்றன.[2] இவற்றில் சில மரங்களிலும், சில இனங்கள் நிலப்பரப்பிலும் வாழ்கின்றன.[3] இந்த தவளைகளில் காணப்படும் பொதுவான பண்பு என்னவெனில் இதனுடைய இளம் உயிரிகள், தலைப்பிரட்டைகள் முட்டைகளை உணவாக உண்ணக் கூடியவையாக உள்ளன.
ஓபகா | |
---|---|
ஓபகா புமிலியோ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
குடும்பம்: | நச்சு அம்புத் தவளை
|
துணைக்குடும்பம்: | டெண்ட்ரோபேட்டினே
|
பேரினம்: | ஓபேகா பாஎர், 1994
|
மாதிரி இனம் | |
டெண்டிரோபேட்டிசு புமிலியோ சுமிட், 1857 | |
உயிரியற் பல்வகைமை | |
9 சிற்றினங்கள் (பார்க்க உரை) |
பெயர்க்காரணம்
தொகுஇத்தவளைப் பேரினத்தின் பெயரில் உள்ள ஓபாகா என்பது, கிரேக்க மொழியில் "முட்டை உண்பவர்" (Oon, phagos),[4][5] என்பது தலைப்பிரட்டையின் செயலைக் குறிப்பதாக உள்ளது.[6][7]
இனப்பெருக்கம்
தொகுடென்ட்ரோபாடி தவளைகள் அனைத்தும் பெற்றோர் பேணல் வழக்கத்தினைக் கொண்டுள்ளன. இப்பழக்கமானது ஓபகாவில் வழக்கத்திற்கு மாறாக முன்னேறிக் காணப்படுகிறது. தலைப்பிரட்டைகளுக்குப் பெண் தவளைகள் உணவாகக் கருவுறா முட்டைகளை பிரத்தியேகமாக வழங்குகின்றன.[1] முட்டைகள் வழியாக, தாய் தற்காப்பு நச்சுகளையும் தலைப்பிரட்டைகளுக்கு வழங்குகின்றன. ஓபகா புமிலியோ தலைப்பிரட்டைகள் ஆல்கலாய்டுகள் இல்லாத முட்டைகளைச் சோதனை அடிப்படையில் உண்ணப் பழகிவிடுகின்றன.[8]
சிற்றினங்கள்
தொகுஓபாக பேரினத்தின் கீழ் ஒன்பது சிற்றினங்கள் உள்ளன[2]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
---|---|---|---|
ஓபகா ஆர்போரியா (மியர்ஸ், டேலி மற்றும் மார்டினெஸ், 1984) | போல்கடோட் விஷ தவளை | பனாமா | |
ஓபகா கிரானுலிஃபெரா (டெய்லர், 1958) | சிறுமணி விஷ தவளை | கோஸ்டாரிகா மற்றும் பனாமா | |
ஓபகா ஹிஸ்ட்ரியோனிகா (பெர்த்தோல்ட், 1845) | ஹார்லெக்வின் விஷ தவளை | மேற்கு கொலம்பியாவின் எல் சோகே பகுதி | |
ஓபகா லெஹ்மானி (மியர்ஸ் அண்ட் டேலி, 1976) | லெஹ்மானின் விஷ தவளை | மேற்கு கொலம்பியா | |
ஓபகா மறைநூல் (மியர்ஸ் மற்றும் டேலி, 1976) | லா ப்ரியா விஷ தவளை | கொலம்பியாவின் காகா துறையில் கார்டில்லெரா ஆக்சிடெண்டல் | |
ஓபகா புமிலியோ (ஷ்மிட், 1857) | ஸ்ட்ராபெரி விஷம்-டார்ட் தவளை | கிழக்கு மத்திய நிகரகுவா கோஸ்டாரிகா மற்றும் வடமேற்கு பனாமா வழியாக | |
ஓபகா ஸ்பெசியோசா (ஷ்மிட், 1857) | அற்புதமான விஷத் தவளை | கோர்டில்லெரா டி தலமங்கா, மேற்கு பனாமா | |
ஓபகா சில்வாடிகா (ஃபன்க ous சர், 1956) | டையப்ளிட்டோ விஷ தவளை | தென்மேற்கு கொலம்பியா மற்றும் வடமேற்கு ஈக்வடார். | |
ஓபகா விசென்டி (ஜங்ஃபர், வெய்கோல்ட், மற்றும் ஜுராஸ்கே, 1996) | விசென்டேயின் விஷ தவளை | மத்திய பனாமாவின் வெராகுவாஸ் மற்றும் கோக்லே மாகாணங்கள் |
செயற்வாழ்விட வளர்ப்பு
தொகுஓபகா செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும், அவற்றினை செயற்கை வாழ்விடத்தில் இனப்பெருக்கம் செய்யவைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. ஆனால் ஓபகா புமிலியோ சிற்றினம் எளிதாக இனப்பெருக்கம் செய்வது மிகவும் பிரபலமாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Grant, T., Frost, D. R., Caldwell, J. P., Gagliardo, R., Haddad, C. F. B., Kok, P. J. R., Means, D. B., Noonan, B. P., Schargel, W. E., and Wheeler, W. C. (2006). "Phylogenetic systematics of dart-poison frogs and their relatives (Amphibia: Athesphatanura: Dendrobatidae)". Bulletin of the American Museum of Natural History (American Museum of Natural History) 299: 1–262. doi:10.1206/0003-0090(2006)299[1:PSODFA]2.0.CO;2. http://digitallibrary.amnh.org/dspace/bitstream/2246/5803/1/B299.pdf. பார்த்த நாள்: 2020-09-19.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Oophaga Bauer, 1994". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
- ↑ 3.0 3.1 "Oophaga — the obligate egg feeders". dendroWorks. 2011. Archived from the original on 11 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
- ↑ http://www.etymonline.com/index.php?term=-phagous
- ↑ http://www.etymonline.com/index.php?term=egg
- ↑ Heselhaus, R. 1992. Poison-arrow frogs: their natural history and care in captivity. Blandford, London.
- ↑ Zimmermann, E. and Zimmermann, H. 1994. Reproductive strategies, breeding, and conservation of tropical frogs: dart-poison frogs and Malagasy poison frogs. In: J.B. Murphy, K. Adler and J.T. Collins (eds), Captive management and conservation of amphibians and reptiles, pp. 255-266. Society for the Study of Amphibians and Reptiles, Ithaca (New York). Contributions to Herpetology, Volume 11.
- ↑ Stynoski, J. L.; Torres-Mendoza, Y.; Sasa-Marin, M.; Saporito, R. A. (2014). "Evidence of maternal provisioning of alkaloid-based chemical defenses in the strawberry poison frog Oophaga pumilio". Ecology 95 (3): 587–593. doi:10.1890/13-0927.1. பப்மெட்:24804437.