கஞ்சக் கருவி

கஞ்சக் கருவிகள் என்பது வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் வார்க்கப்படும் தாளம், கைமணி, சேகண்டி முதலியவைகள் ஆகும்.[1]

கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக்கருவிகளை, தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும்.

வகைகள்

தொகு
  • சேகண்டி: - கோயில்களில் குறிப்பாக சிவன் கோயில்களில் பூஜை நேரங்களிலும்; சுவாமி புறப்பாட்டின் போதும் சேகண்டி, சங்கொலியுடன் ஒலிக்கப்படுகிறது. மேலும் இறப்பு நிகழ்வுகளிலும் சேகண்டி ஒலி எழுப்பப்படுகிறது.
  • கைமணி : - அனைத்துக் கோயில்களிலும்; வீடுகளிலும் இறைவனை பூசிக்கும் போது ஒலி எழுப்பப் பயன்படுகிறது. கோயில்களில் பூசை நேரத்தை உணர்த்த எழுப்பப்படும் பெரிய வெண்கல மணியை, கைப்பிடிக்குள் அடங்கும்படி தயாரிப்பது கைமணியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "கஞ்சக் கருவிகள்". Archived from the original on 2016-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சக்_கருவி&oldid=3547352" இலிருந்து மீள்விக்கப்பட்டது