கமிந்து மெண்டிஸ்

இலங்கை துடுப்பாட்டக்காரர்

கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis, பிறப்பு: செப்டம்பர் 30, 1998) என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் .இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். மேலும் கொழும்பு துடுப்பாட்ட அணிக்காக இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[2] இடதுகை மட்டையாளரன இவர் சகலத் துறையரான இவர் இலங்கை தேசிய அணி தவிர கொழும்பு துடுப்பாட்ட அணி, 19 வயதிற்கு உடபட்ட இலங்கை அணி, தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள சங்கம் ஆகிய அணிகளுக்காகவும் இவர் விளையாடி வருகிறார்.

கமிந்து மென்டிஸ்
Kamindu Mendis
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாசுக்கல் ஹான்டி கமிந்து திலங்க மென்டிஸ்
பிறப்பு30 செப்டம்பர் 1998 (1998-09-30) (அகவை 25)
காலி, இலங்கை
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை வலத்திருப்பு
பங்குதுடுப்பாட்டம், பல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 190)10 மார்ச் 2019 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப13 மார்ச் 2019 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 77)27 அக்டோபர் 2018 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப24 மார்ச் 2019 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015காலி அணி
2018-கொழும்பு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப இ20ப ப.அ இ20
ஆட்டங்கள் 2 4 6 6
ஓட்டங்கள் 17 66 182 45
மட்டையாட்ட சராசரி 17.00 16.50 36.40 45.00
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 9 41 61 23*
வீசிய பந்துகள் 84 30 240 54
வீழ்த்தல்கள் 1 0 3 2
பந்துவீச்சு சராசரி 79.00 - 66.33 29.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 - 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/45 - 1/32 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 4/– 1/–
மூலம்: Cricinfo, 24 மார்ச் 2019

ஆரம்ப கால மற்றும் உள்ளூர் துடுப்பாட்ட போட்டிகள் தொகு

மென்டிஸ் தனது 13 வயதில் காலியில் உள்ள ரிச்மண்ட் கல்லூரிக்கு துடுப்பாட்டவிளையாடும்போது இரு கைகளாலும் பந்து வீசத் தொடங்கினார். 30 நவம்பர் 2015 அன்று ஏ.ஐ.ஏ பிரீமியர் லிமிடெட் ஓவர் போட்டியில் சரித் அசலங்காவுடன் இணைந்து பட்டியல் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[3]

அடுத்த மாதம், இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்டஉலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றார்.[4] இவர் டிசம்பர் 2016 இல் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் அறிவிக்கப்பட்டார் [5] மற்றும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் 19 வயதிற்குட்பட்ட இலங்கை துடுப்பாட்ட அணியின் அணியின் தலைவராக இருந்தார்.[6]

2018 எஸ்.எல்.சி டி 20 லீக் அணியில் இடம் பெறுவதற்கு முன்னர் இவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டி மற்றும் 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றார். இவர் 21 ஆகஸ்ட் 2018 அன்று கொழும்புக்காக தனது இருபதுக்கு போட்டியில் அறிமுகமானார்.[7]

30 நவம்பர் 2018 அன்று நடைபெற்ற 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள சங்கத்திற்காக முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[8] மார்ச் 2019 இல், இவர் 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9]

சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகள் தொகு

ஆகஸ்ட் 2018 இல், இலங்கை துடுப்பாட்ட2018 ஆசிய கோப்பைக்கான 31 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[10]

2018ம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வானார் .[11] இவர் 27 அக்டோபர் 2018 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இலங்கைக்காக தனது தினார். இந்த போட்டியில் இவர் 24 ரன்கள் எடுத்தார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார்.2019ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். மார்ச் 10இல் டர்பன் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலிவர் அறிமுகமானார்.[12]

குறிப்புகள் தொகு

  1. "England get first taste of ambidextrous Mendis in Sri Lanka warm-up win". https://www.theguardian.com/sport/2018/oct/05/england-face-ambidextrous-kamindu-mendis-in-warm-up-win-over-sri-lanka-cricket. பார்த்த நாள்: 5 October 2018. 
  2. "Under-19 World Cup: Watch Sri Lanka's ambidextrous bowler Kamindu Mendis". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
  3. "AIA Premier Limited Over Tournament, Group B: Badureliya Sports Club v Galle Cricket Club at Kaluthara, Nov 30, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  4. "SL include Charana Nanayakkara in U-19 World Cup squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  5. "Kamindu Mendis to lead Sri Lanka U19s in Youth Asia Cup". ThePapare.com. http://www.thepapare.com/kamindu-mendis-to-lead-sri-lanka-u19s-in-youth-asia-cup/. பார்த்த நாள்: 14 April 2017. 
  6. "U-19 Cricket: Kamindu to lead Sri Lanka U19s at ICC Youth WC". Sunday Times (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  7. "SLC T20 League at Colombo, Aug 21 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  8. "Group A, Premier League Tournament Tier A at Katunayake, Nov 30 - Dec 2 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  9. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  10. "No Malinga in SL preliminary squad for Asia Cup". Daily Sports. Archived from the original on 23 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Ambidextrous Kamindu Mendis breaks into SL T20I squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  12. "3rd ODI, Sri Lanka tour of South Africa at Durban, Mar 10 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமிந்து_மெண்டிஸ்&oldid=3547915" இலிருந்து மீள்விக்கப்பட்டது