கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கில் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 44 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

கரைச்சி என்ற பெயரில் தற்போது எந்த ஒரு ஊரும் இல்லை. ஒரு நிர்வாகப் பிரிவு மட்டுமே. இது முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் 1980களில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதில் அதனுடன் இணைக்கப்பட்டது.

கரைச்சி என்பது கரை (கடல், ஏரி போன்றவற்றின் கரையோரப் பகுதி) என்ற சொல்லில் இருந்து பிறந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு