கரை எல்லப்பாளையம்
கரை எல்லப்பாளையம் (ஆங்கில மொழி: Karai Ellapalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கரை எல்லப்பாளையம் Karai Ellapalayam | |
---|---|
ஆள்கூறுகள்: 11°26′29″N 77°39′10″E / 11.4415°N 77.6528°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 227 m (745 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638316 |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, எலவமலை, கருந்தேவன்பாளையம், சித்தோடு, ஊராட்சிக்கோட்டை மற்றும் பவானி |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | சு. முத்துசாமி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 227 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரை எல்லப்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′29″N 77°39′10″E / 11.4415°N 77.6528°E ஆகும். ஈரோடு, எலவமலை, கருந்தேவன்பாளையம், சித்தோடு, ஊராட்சிக்கோட்டை மற்றும் பவானி ஆகியவை கரை எல்லப்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
பாரதப் பிரதமரின் முன்னோடி கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிராமங்களில் கரை எல்லப்பாளையம் பகுதியும் ஒன்றாகும்.[1]
ஓங்காளியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று கரை எல்லப்பாளையம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
கரை எல்லப்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[4] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரதமரின் முன்னோடி கிராம வளர்ச்சி திட்டம்: ஈரோட்டில் 3 கிராமங்கள் தேர்வு - Dinamalar Tamil News". Dinamalar. 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
- ↑ "Arulmigu Omkaliamman Temple, Karai Ellapalayam - 638316, Erode District [TM012077].,Arulmigu Omkaliamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
- ↑ "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.