கலவை (இராணிப்பேட்டை மாவட்டம்)

இராணிப்பேட்டை மாவட்டம்

கலவை (ஆங்கிலம்:Kalavai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கலவை
KALAVAI
கலவை is located in தமிழ் நாடு
கலவை
கலவை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
கலவை is located in இந்தியா
கலவை
கலவை
கலவை (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°45′59″N 79°25′01″E / 12.7663838°N 79.4170654°E / 12.7663838; 79.4170654
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மண்டலம்தொண்டை மண்டலம்
சட்டமன்றத் தொகுதிஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்கலவை பேரூராட்சி
 • மக்களவை உறுப்பினர்திரு. ஜெகத்ரட்சகன்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. திரு. ஜே. எல். ஈஸ்வரப்பன்
 • மாவட்ட ஆட்சியர்திரு.
 • பேரூராட்சித் தலைவர்திரு.
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,773
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 73
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு48 கிமீ
சென்னையிலிருந்து தொலைவு121 கி.மீ
இராணிப்பேட்டையிலிருந்து தொலைவு26 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு46 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு24 கிமீ
அரக்கோணத்திலிருந்து தொலைவு61 கிமீ
ஆற்காடிலிருந்து தொலைவு22 கிமீ
இணையதளம்கலவை பேரூராட்சி

அமைவிடம்

தொகு

கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 53 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[1]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,343 வீடுகளும், 9,773 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.64% என்பதாகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1040 பெண்கள் என்றுள்ளது.[2]

கலவை சங்கர மடம்

தொகு

கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார்.[3]

கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E / 12.77; 79.42 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. கலவை பேரூராட்சியின் இணையதளம்
  2. Kalavai Population Census 2011
  3. ஸ்ரீ சங்கர மடம், கலவை
  4. "Kalavai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2007.