கள்ளபார்ட் நடராஜன்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(கள்ளப்பார்ட் நடராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கள்ளப்பார்ட் நடராஜன், முன்னாள் தமிழ்த்திரைப்பட நடிகர் ஆவார். இளமையில் மேடை நாடகங்களில் கள்ளன் வேடங்களில் நடித்ததால், கள்ளப்பார்ட் இவரின் பெயருக்கு முன் அடைமொழியானது. பின்னர் வெள்ளித்திரையில் எதிர்மறைநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், சிரிப்பு நடிகராகவும், நடன ஆடுபவராகவும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்திரைப்படங்களில் நடித்தவர். [1] இவர் 1952-இல் பராசக்தி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர்.

தனியார் தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டிற்கு வருமுன்னர், இவர் சென்னைத் தொலைகாட்சியில் இருபதிற்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தவர். சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலின் போது, 27 மார்ச் 1996 அன்று தமது எழுபதாவது அகவையில் மறைந்தவர்.

இளமை தொகு

மேடை நாடகக் கலைஞர்களான இராமலிங்கம் - பரிபூரணத்தம்மாள் இணையருக்கு தஞ்சாவூரில் பிறந்ததவர் நடராஜன். நடராஜனும் தமது 10-வது வயதிலேயே நாடக நடிகரானார். நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் 12 ஆண்டு காலம் பணிபுரிந்தார். ‘வள்ளித் திருமணம்’, ‘ராமாயணம்’ முதலான நாடகங்களில் நடித்தார்.. மேடை நாடகங்களில் கள்ளன் வேடத்தில் நன்கு நடித்ததால், கள்ளப்பார்ட் நடராஜன் என்று பெயர் பெற்றார்.

நடித்த புகழ்பெற்ற திரைப்படங்கள் தொகு

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kallapart Natarajan

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளபார்ட்_நடராஜன்&oldid=3199216" இலிருந்து மீள்விக்கப்பட்டது