காப்பார் மக்களவைத் தொகுதி

(காப்பார் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காப்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kapar; ஆங்கிலம்: Kapar Federal Constituency; சீனம்: 卡帕联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டம் (Klang District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P109) (Dewan Rakyat) ஆகும்.[1]

காப்பார் (P109)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Kapar (P109)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
காப்பார் மக்களவைத் தொகுதி
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்; சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகாப்பார் தொகுதி
முக்கிய நகரங்கள்கிள்ளான் மாவட்டம்; பெட்டாலிங் மாவட்டம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சிபெரிக்காத்தான்
மக்களவை உறுப்பினர்அலிமா அலி
(Halimah Ali)
வாக்காளர்கள் எண்ணிக்கை189,369
தொகுதி பரப்பளவு362 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கிள்ளான் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (70.5%)
  சீனர் (15.2%)
  இதர இனத்தவர் (0.4%)

காப்பார் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), காப்பார் தொகுதி 44 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]

வரலாறு

தொகு

இந்த காப்பார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர்;

ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடையே மறுபகிர்வு செய்யப்பட்டது. 1984-ஆம் ஆண்டில் கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் துறைமுகம் பகுதிகளில் இருந்து மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.[3]

காப்பார் நகரம்

தொகு

காப்பார் நகரம், (ஆங்கிலம்: Kapar Town) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். காப்பார் நகரம் மலாக்கா நீரிணையில் காப்பார் ஆறு (Kapar River) சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.

இந்த நகரத்தின் மேற்கில், பெரிய அளவிலான சதுப்பு நிலம் உள்ளது. ஆனால் கடலை ஒட்டிய சில பகுதிகளில் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.[4]

காப்பார் தமிழர்கள்

தொகு

காப்பார் நகரம் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களைக் கொண்ட ஒரு பகுதி. மலாய் மக்களில் பலர் ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நகரப் பகுதி சீனர்களால் நடத்தப்படும் கடைகளினால் நிரம்பியுள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் புறநகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். காப்பார் பகுதியில் நிறைய செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்த போது தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள்.

கிள்ளான் மாவட்டத்தில் இரு முக்கிம்கள் உள்ளன. அவை:

  1. கிள்ளான் முக்கிம்
  2. காப்பார் முக்கிம்

காப்பார் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சிலாங்கூர் பாராட் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 அம்சா அலாங்
(Hamzah Alang)
தேசிய முன்னணி (அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 அம்சா அலாங்
(Hamzah Alang)
தேசிய முன்னணி
(அம்னோ)
2-ஆவது 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
3-ஆவது 1971 அம்சா அலாங்
(Hamzah Alang)
தேசிய முன்னணி
(அம்னோ)
1971–1973 முகமட் தாகிர் அப்துல் மனான்
(Mohd Tahir Abdul Manan)
1973–1974 தேசிய முன்னணி
(அம்னோ)
தொகுதி நீக்கப்பட்டது; கோலா சிலாங்கூர் தொகுதி;
கிள்ளான் துறைமுகத் தொகுதிகளுக்குள் இணைக்கப்பட்டது.
தொகுதி மீண்டும் கோலா சிலாங்கூர் தொகுதி;
கிள்ளான் துறைமுகத் தொகுதிகளுக்குள் இணைக்கப்பட்டது.
7-ஆவது 1986–1990 டி.பி. விசேந்திரன்
(D. P. Vijandran)
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
8-ஆவது 1990–1995 எம். மகாலிங்கம்
(M. Mahalingam)
9-ஆவது 1995–1999 லீலாவதி கோவிந்தசாமி
(Leelavathi Govindasamy)
10-ஆவது 1999–2004 கோமலா தேவி பெருமாள்
(Komala Devi Perumal)
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013 மாணிக்கவாசகம் சுந்தரம்
(Manikavasagam Sundaram)
மக்கள் நீதிக் கட்சி
(பி.கே.ஆர்)
13-ஆவது 2013–2018 மணிவண்ணன் கோவிந்தசாமி
(Manivannan Gowindasamy)
14-ஆவது 2018–2022 அப்துல்லா சானி அப்துல் அமீத்
(Abdullah Sani Abdul Hamid)
மக்கள் நீதிக் கட்சி
(பி.கே.ஆர்)
15-ஆவது 2022 – தற்போது அலிமா அலி
(Halimah Ali)
பெரிக்காத்தான்
(PAS)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(காப்பார் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 189,369 -
வாக்களித்தவர்கள் 159,700 83.45%
செல்லுபடி வாக்குகள் 158,030 100.00%
செல்லாத வாக்குகள் 1670 -
பெரும்பான்மை 11,782 -
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
  அலிமா அலி
(Halimah Ali)
பெரிக்காத்தான் 65,751 41.61%
  அப்துல்லா சானி அப்துல் அமீட்
(Abdullah Sani Abdul Hamid)
பாக்காத்தான் 53,969 34.15%
  முகமட் நூர் அசுமான்
(Muhammad Noor Azman)
பாரிசான் 35,079 22.20%
தாரோயா அல்வி
(Daroyah Alwi)
மலேசிய தேசிய கட்சி 3,016 1.84%
  முகமது பதான் உசின்
(Mohd Pathan Hussin)
உள்நாட்டு போராளிகள் கட்சி 1,015 0.64%
  வி.பி. சேவலிங்கம்
(VP Sevelinggam)
சுயேச்சை 477 0.30%
ரகீம் அவாங்
(Rahim Awang)
வாரிசான் 265 0.17%

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 24. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "Kapar is located in the region of Selangor. The distance from Kapar to Malaysia's capital Kuala Lumpur (Kuala Lumpur) is approximately 34 km". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு