கிராசூ( Krasue) தாய்லாந்து, கெமர், கம்போடியா, லாவோஸ், ஆகிய தென்கிழக்காசிய நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு இரவுநேர பெண் ஆவியாகும். இது பொதுவாகத் தன்னை ஒரு பெண்ணாக, இளமையாகவும் அழகாகவும்வெளிப்படுத்திக் கொள்கிறது, அவளது உள் உறுப்புகள் தலைக்கு கீழே கழுத்திலிருந்து முன்னால் கீழே தொங்கிக் கொண்டு உள்ளன.[1]

கிராசூ
குழுபுனைவு உயிரினம்
உப குழுஇரவாடி, இறப்பில்லாதது, ஒளிப் பாயம்
ஒத்த உயிரினம்இந்தோனேசியா: "குயங்", "லெயக்" மற்றும்"பலாசக்"
மலேசியா: "பாலன்-பாலன்"
வியட்நாம்: "மலாய்"
தொன்மவியல்தென்கிழக்காசிய நாட்டுப்புறவியல்
நாடுதாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் (டிட்ராயிட்)
பிரதேசம்தென்கிழக்காசியா

தாய்லாந்தின் இனவரைவியலாளர் பிராயா அனுமான் ராஜாதன் என்பவரின் கூற்றுப்படி,கிராசூவானது பளபளப்பாக ஒளி வீசுகின்ற மிதக்கும் தலையைக் கொண்டுள்ளது. [2] பளபளப்பின் தோற்றம் பற்றிய சில விளக்கங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் மீத்தேன் இருப்பது போன்ற ஒளி என்பது அடங்கும். [3] கிராசூ பெரும்பாலும் தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளின் ஆண் ஆவியான கிரஹாங்கைப் போலவே வாழ்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆவி தரையில் மேலே காற்றில் சுற்றுவதன் மூலம் நகர்கிறது, ஏனென்றால் அதற்கு உடலின் கீழ்ப்பகுதி இல்லை. இதனுடைய தொண்டை வெவ்வேறு வழிகளில் உருவகப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில்,மூச்சுக்குழாய் அல்லது முழு கழுத்தும் இருப்பதாக கூறப்படுகிறது.[4] தலைக்குக் கீழே உள்ள உறுப்புகள் பொதுவாக இதயம் மற்றும் நீண்ட குடலுடனான வயிற்றை உள்ளடக்குகின்றன, [5] குடலின் பாதை பேயின் கொந்தளிப்பான தன்மையை வலியுறுத்துகிறது. சமீபத்திய திரைப்படமான க்ராசு வாலண்டைன், இந்தப் பேய் நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உள் உறுப்புகளுடன் குறிப்பிடுகிறது, ஆனால் ஆனால் அளவு உடற்கூறியல் ரீதியாக மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.தலையும் சரியான பரிமாண விகிதத்தில் இல்லை, [6] உள்ளுறுப்புகள் சில நேரங்களில் புதிதாக இரத்தத்தால் பூசப்ப்படுகிறது, [7] அதே போல் ஒளிரவும்.செய்கிறது [8] சமகால பிரதிநிதித்துவங்கள் அவரது பற்களை இயக்கர்கள் அல்லது காட்டேரிகளுக்கு இருக்கும் கூரான கோரைப்பற்களைக் குறிப்பிடுகின்றன.[9] கோஸ்ட்ஸ் ஆஃப் குட்ஸ் ஈட்டர் திரைப்படத்தில் அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உள்ளது. [10]

கிராசூவைக் குறித்த ”மை மதர் இஸ் எ அர்ப்” அல்லது ’கிராசுமாம்’ என்ற திரைப்படம் , போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் , கெமர் ரூஜ் காலத்தில் தாய்லாந்து, கெமர் கம்போடியா ஆகியவற்றின் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை அடக்கியதும் கம்பூச்சியா மக்கள் குடியரசில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. [11]

கிராசூ மேலும் மலேஷியாவின் பிரபலமான தொன்மவியல் கதைகளிலும் காணப்படுகிறது அங்கு அது பாலன்-பாலன் என அழைக்கப்படுகிறது, அங்கு அது பெனன்காலன் அல்லது ஹண்டு பெனன்கால் என அழைக்கபப்டுகிறது., இந்தோனேஷியாவிலும் இதற்கு லேயக், பலாசிக், செலாக் மேட்டெர்ன்,குயாங்க், போப்போ, பரகாங் இந்த ஆவி மேலும் வியட்நாமின் நாட்டுப்புறவியலிலும் வியட்நாமின் மத்திய மேட்டுச்சமவெளிகளிகளில் வாழும் சிறுபான்மை இனக்குழுக்களுள் ஒன்றான மா லாய் மக்களின் நாட்டுப்புறவியலில் இந்த கிராசூ ஒரு பகுதியாகும் பிலிப்பைன்ஸில் இதேபோன்ற பேய், மேனனங்கல்,எனப்படும் கர்ப்பிணிப் பெண்களை வேட்டையாடும் உள்ளூர் ஆவி உள்ளது. பல சமூக ஊடகக் காணொளிகளிலும் சமூக ஊடகங்களிலும் இந்த ஆவி "பயமுறுத்தும் பூதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புனைவுகள்

தொகு

கிராசு என்பது தென்கிழக்கு ஆசியா முழுவதும் பகிரப்பட்ட ஒரு நம்பிக்கையாகும், ஏனெனில் அதன் தோற்றம் சரிபார்க்க கடினமாக உள்ளது. இருப்பினும், இந்த ஆவியின் தொடக்கம் ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். தாய்லாந்தில், கிராசு தனது முந்தைய வாழ்க்கையில் பல்வேறு பாவங்கள் மற்றும் மோசடி நடத்தைகளில் ஈடுபட்ட ஒரு சபிக்கப்பட்ட நபர் (பொதுவாக ஒரு பெண்) என்று நம்பப்படுகிறது. அவள் இறந்து பின், அவரது பாவங்கள் காரணமாக மறுபிறவியில் வீணான, சமைக்கப்படாத அல்லது அழுகிய உணவை வாழ வேண்டும் என சபிக்கப்பட்டது.

சமீபத்திய காலங்களில், தாய் பொழுதுபோக்குத் தொழில் கிராசுவின் தோற்றத்தை டெமோனிக் பியூட்டி (2002) போல. ஒரு சபிக்கப்பட்ட பண்டைய கெமர் இளவரசி என்று கற்பனை செய்துள்ளது, எவ்வாறாயினும், இந்த சித்தரிப்பு ஒரு அரச தொடர்பைத் தருவதற்கான ஒரு முயற்சி அல்லது பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கத்திற்காக என அறியலாம். அடிப்படையில் நாட்டுப்புற வம்சாவளியைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட கதைக்கு ஒரு புராண தொடக்கத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சி. ஒரு விமர்சகர் குறிப்பிடுகையில், டெமோனிக் பியூட்டியின் இயக்குனர் அநேகமாக ” கிராசூவை" ஒரு வெளிநாட்டினரின் பில்லி, சூனியம் ஆகியவற்றிலிருந்து தோன்றிய அதாவது கம்போடியாவின் பேகன் சமய கலாச்சாரம், தாய்லாந்தின் புத்தக் கலாச்சாரம் ஆகியவ்ற்றில் அடங்கிய ஒரு தீய மற்றும் அன்னியப் பேயாக சித்தரிக்க விரும்பினார்.[12]

இந்த ஆவி முன்னர் ஒரு பணக்கார பெண்மணி என்று கூறும் பிற வாய்வழி மரபுகள் உள்ளன, அவை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக தலை மற்றும் கழுத்தில் கருப்பு மெண்மையான துணி அல்லது நாடாவைக் கட்டியிருந்தன. இந்த பெண் பின்னர் ஒரு தீய ஆவியால் பிடிக்கப்பட்டு ஒரு கிராசூவாக ஆக சபிக்கப்பட்டார். பிற பிரபலமான புராணக்கதைகள், ஆவியின் தோற்றத்தை, ஒரு பெண் சூனியம் கற்றுக் கொள்ள முயற்சித்திருக்கலாம், அதில் தவறு செய்து அல்லது தவறான எழுத்துப்பிழைகளைப் பயன்படுத்தியதால் அவரது தலை மற்றும் உடல் பிரிக்கப்பட்டன எனக் கூறுகின்றன. கடந்தகால பாவங்களும் கிராசு சாபத்தின் பரவலுடன் தொடர்புடையவை; முந்தைய வாழ்க்கையில் ஒருவரை கருக்கலைப்பு செய்த அல்லது கொன்ற பெண்கள் தண்டனையாக கிராசுவாக மாறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.. கிராசுவின் உமிழ்நீர் அல்லது மாமிசத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை உட்கொண்ட பிறகு ஒரு நபர் கிராசுவாக மாற சபிக்கப்படுவதைப் பற்றி பிற நாட்டுப்புறக் கதைகள் பேசுகின்றன. கிராசுவாக மாறுவது பெரும்பாலும் சூனியத்தைப் பயிற்சி செய்யும் "மே மோட்" (แม่มด) அல்லது "யாய் மோட்" (ยาย มด), குறிப்பாக அவர்களின் மகள்கள் அல்லது பேத்திகள் போன்ற பெண்களின் உறவினர்களுக்கு மட்டுமே கட்டுப்படும் என்றும் பிரபலமான கற்பனை கூறுகிறது. பெரும்பாலும் ஒரு சமூகத்தில் விசித்திரமாக நடந்து கொள்ளும் பெண்கள், கிராமத்தின் மற்ற உறுப்பினர்களால் இரவுநேரத்தில் கிராசுவாக மாறக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள். [13]

தாய் கலாச்சாரத்தில் கிராசு குறிப்புகள்

தொகு
 
கொங்கன் மாகாணத்தில் ஒளிரும் காளான் “க்ராசு காளான்” என்று அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக தாய் கலாச்சாரத்தில் கிராசு மீதான நம்பிக்கை எவ்வாறு பிரதிபலித்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை வழங்கும் தி ராயல் அகாடமியிலிருந்து தகவல் உள்ளது:

  1. அசாதாரணமான சிறிய வாழைப்பழம் (பிறழ்வு காரணமாக ஏற்படுகிறது) ஒரு கிராசுவால் சாப்பிடப்படுகிறது என்று கூறப்படுகிறது.
  2. மிக வேகமாக சாப்பிடும் ஒரு பெருந்தீனி நபர் பொதுவாக "ககிராசூவைப் போல சாப்பிடுபவர்" அல்லது "கிராசூவைப் போல பெருந்தீனி" என்று கூறப்படுகிறார்.
  3. கொங்கன் மாகாணத்தில் ஒளிரும் காளான் ”கிராசூ காளான்" என்று அழைக்கப்படுகிறது. [14]
  4. சோன்பூரி மாகாணத்தில், “நோங் கிராசு” (கிராசு சதுப்பு நிலம்) என்ற கிராமம் உள்ளது. இப்போது இப்பெயர் இதன் அச்சத்தைக் குறைப்பதற்காக "நாங் கிராசீம்"(மகிழ்ச்சியான சதுப்புநிலம் ) என்று மாற்றப்பட்டுள்ளது. [15]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Spirits. Thailand: Thaiworldview. 2008.
  2. Essays on Thai Folklore, Editions Duang Kamol, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 974-210-345-3
  3. "Mthai News Reporter". Archived from the original on 2020-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
  4. Krasue film posters
  5. "Movie poster". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
  6. Krasue representation
  7. Krasue Sao book cover
  8. "Glowing Krasue". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
  9. "Krasue Sawath ("กระสือสวาท"), Thai dubbed version of Hong Kong movie "Witch with the Flying Head" film poster". Archived from the original on 2021-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
  10. Ghosts of Guts Eater scene
  11. Konm Eak Madia Arb film poster
  12. Tamnan Krasue
  13. Yeay Duol
  14. 2. Siamsouth. เห็ดกระสือ หรือ เห็ดเรืองแสง ควบคุมไส้เดือนฝอยรากปมในมะเขือเทศ. siamsouth.com. [Online] 2008.
  15. 1. Janputt, Pitchayatun. Nong Krasue. [interv.] Sorayutt Sututsanajinda. 21 January 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசூ&oldid=3612196" இலிருந்து மீள்விக்கப்பட்டது