கிருஷ்ண மோகன் சேத்

கிருஷ்ண மோகன் சேத் (Krishna Mohan Seth) இந்தியத் தரைப்படையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்று சத்தீசுகர், மத்திய பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஆளுநராக பணிபுரிந்தவர் ஆவார்.

கிருஷ்ண மோகன் சேத்
2வது [[சத்தீசுகர் ஆளுநர்]]
பதவியில்
2 சூன் 2003 – 25 சனவரி 2007
முன்னையவர்தினேஷ் நந்தன் சாகே
பின்னவர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
மத்திய பிரதேச ஆளுநர் (பொறுப்பு)
பதவியில்
2 மே 2004 – 29 சூலை 2004
முன்னையவர்இராம் பிரகாசு குப்தா
பின்னவர்பல்ராம் சாக்கர்
9வது திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
23 சூன் 2000 – 31 மே 2003
முன்னையவர்சித்தேஷ்வர் பிரசாத்
பின்னவர்தினேஷ் நந்தன் சாகே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா ஆளுநர்
19 திசம்பர் 1939 (1939-12-19) (அகவை 85)
அலகாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்பொழுதுஉத்தரப்பிரதேசம், இந்தியா)
இறப்புதிரிபுரா ஆளுநர்
இளைப்பாறுமிடம்திரிபுரா ஆளுநர்
துணைவர்வீணா
பிள்ளைகள்2
பெற்றோர்
  • திரிபுரா ஆளுநர்

குடும்ப வாழ்க்கை

தொகு

கிருஷ்ண மோகன் சேத் டிசம்பர் 19, 1939 அன்று அலகாபாத்தில் பிறந்தார்.[1] இவருக்கு வீணா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இராணுவ பணி

தொகு

லெப்டினன்ட் ஜெனரல் சேத் இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 1979 மற்றும் அக்டோபர் 1980 க்குஇடையில்[2] (வான்குடை) படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கினார்.

இவர் போபாலில் 21வது தாக்குதல் படைப்பிரிவினை வழிநடத்தியவர்.[3] இதைத் தொடர்ந்து அக்டோபர் 1994 மற்றும் அக்டோபர் 1995க்கு இடையில் நாகாலாந்தில் 3வதுப் படைப்பிரிவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பின்னர் துணை தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டார். சேத் 31 திசம்பர் 1997 அன்று இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

சேத் 23 சூன் 2000 முதல் 31 மே 2003 வரை திரிபுராவின் ஆளுநராக இருந்தார்.[6] இதைத் தொடர்ந்து 2 சூன் 2003 முதல் 25 சனவரி 2007 வரை சத்தீசுகர் ஆளுநராகப் பதவி வகித்தார். சத்தீசுகரின் காங்கரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்வன போர் பள்ளியானது, இவரது ஆட்சிக் காலத்தில் இவரது சிந்தனையின் அடிப்படையில் உருவானது.[7]

 
சத்தீசுகரின் ஆளுநர் ஸ்ரீ கிருஷ்ண மோகன் சேத், 3 சூன் 2004 அன்று சத்தீசுகரின் ராய்ப்பூரில் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தார்.

இவர் 2 மே 2004 மற்றும் 29 சூன் 2004 இடையே மத்திய பிரதேசத்தின் ஆளுநராகப் பொறுப்பிலிருந்தார்.[8][9]

 
ஏப்ரல் 30, 2005 அன்று ராய்பூரில் உள்ள ராஜ் பவனில் சத்தீசுகர் ஆளுநர் சேத்துடன் பிரதமர் இந்தியப் மன்மோகன் சிங்.

முக்கிய இராணுவ விருதுகள்

தொகு

இவர் பன்னாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குழுவின் ஆசிய திரைப்பட தொலைக்காட்சி அகதமியின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Lt Gen Seth takes oath as Chhattisgarh Governor". 2003-01-02. Retrieved 2021-07-28.
  2. "17 PARA Field Regiment". 2019-01-26. Archived from the original on 2022-03-25. Retrieved 2021-07-28.
  3. "Sudarshan Chakra corps celebrate 3rd reunion". 2008-12-03. Retrieved 2021-07-28.
  4. "New #DGMO Lt Gen Anil Chauhan (R) handing over charge of all imp 3 Corps in Dimapur to Lt Gen Gopal R." 2018-01-09. Retrieved 2021-07-28.
  5. "The 22-year ordeal of Luingam Luithui for justice". 2017-08-23. Retrieved 2021-07-28.
  6. "LIST OF PAST GOVERNORS". Retrieved 2021-07-28.
  7. "A school to counter Naxals". 2010-04-11. Retrieved 2021-07-28.
  8. "The Chronological List of the Governors of Madhya Pradesh". Retrieved 2021-07-28.
  9. "Seth takes over as acting Governor of MP". 2004-05-02. Retrieved 2021-07-28.
  10. "Hon'ble Governor Lt.Gen. K.M.SETH (PVSM, AVSM) (Retired)". Retrieved 2021-07-28.
  11. "Governing Council". Retrieved 2021-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_மோகன்_சேத்&oldid=3926344" இலிருந்து மீள்விக்கப்பட்டது