கிளௌடியா சீஸ்லா

 

கிளௌடியா சீஸ்லா
2008 இல் கிளௌடியா சீஸ்லா
பிறப்புபெப்ரவரி 12, 1987 (1987-02-12) (அகவை 37)[1]
வோட்சிஸ்லாவ் ஸ்லாஸ்கி, கட்டோவிசு வோய்வோடெசிப், போலந்து மக்கள் குடியரசு
தொழில்நடிகை, வடிவழகி
Website
www.cclaudia.net

கிளௌடியா சீஸ்லா (Claudia Ciesla, போலியம்: Klaudia Cieshla) என்பவர் போலந்தில் பிறந்த செருமானிய நடிகையும், வடிவழகியும் ஆவார், இவர் முக்கியமாக இந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[2][3][1] இந்திய உண்மைநிலை நிகழ்ச்சி பிக் பாசில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

வாழ்க்கை தொகு

சீஸ்லா போலந்து மக்கள் குடியரசில் கட்டோவிசு வோய்வோடெசிப், வோட்சிஸ்லாவ் ஸ்லாஸ்கியில் (இப்போதைய சிலேசியன் வோய்வோடெசிப், போலந்து குடியரசில்) பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவ உளவியலாளர், போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தாயார் ஒரு கட்டிடக் கலைஞர், செருமனி வம்சாவளியைச் சேர்ந்தவர்.

தொழில் தொகு

வடிவழகு மற்றும் நடிப்பு வாழ்க்கை தொகு

சீஸ்லா 15 வயதில் வடிவழகு செய்யத் தொடங்கினார், ஒய்யாரம், நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். [4]

மார்ச் 2006 இல், சீஸ்லா ஆட்டோ பில்டு, பில்டு, சட்.1, டி-ஆன்லைன், கேபல் ஈன்சு போன்ற இணைய இணையதளங்களில் சந்தாதாரர்கள் வாக்கெடுப்பில் இவர் வெற்றி பெற்று ஜெர்மனியின் சூப்பர் கேர்ள் 2006 இல் முதல் இடத்தைப் பெற்றார் [5] நவம்பர் 2007 இல் ஒரு நேர்காணலில், தனது வடிவழகு வாழ்க்கைக்குப் பிறகு ஒரு வரி ஆலோசகராக ஆகுவதற்கு திட்டமிட்டுயுள்ளதாக கூறினார். [4]

2007-2008 இல், பீச் அவுஸ் என்ற செருமானிய மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்மா (2008) பன்னாட்டு திரைப்படத்தில் கர்லூசி வெயன்ட், அல்மா சரசி ஆகியோருடன் இணைந்து சீஸ்லா நடிக்கிறார் என்று தி நியூ இந்தியன் எக்சுபிரசு தெரிவித்தது.[6] இந்தி திரைப்படத்துறையில் சீஸ்லாவுக்கு அதிக பணிகள் இருக்கும் என திரைப்பட இயக்குநர் எம். எஸ். சாஜகான் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். [7] [8]

சூலை 2008 இல், பலேர்மோவில் தயாரிக்கப்பட்ட யடிசிடேர்ஸ் இன் பலேர்மோ என்ற இத்தாலிய திரைப்படத்தில் நடித்தார். [9][10][11]

 
2010 இல் கிளௌடியா

இவர் சௌமித்திர சாட்டர்ஜியுடன் இணைந்து 10:10 என்ற அரின் பால் இயக்கிய வங்க திரைப்படத்தில் செருமானிய பத்திரிகையாளராக நடித்தார். [12][13][14][15]

சீஸ்லா லவ்லி புரொபசனல் பல்கலைக்கழக விளம்பர தூதராக இருந்தார். பல்கலைக்கழகம் இவரை "இந்தியாவில் புதிய நம்பிக்கைக்குரிய வெளிநாட்டு முகம்" என்று கௌரவித்தது. [16] ஆரண்யா தொழில்நுட்ப விழாவின் போது இவர் தனது பஞ்சாபி திரைப்பட விளம்பரத்திற்காக தாபர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

26 நவம்பர் 2009 அன்று, சீஸ்லாவுக்கு கர்மவீர் புரசுகார் விருது வழங்கப்பட்டது, கஜோல், அலிக் பதம்சி, ராகுல் போஸ், ரெமோ பெர்னாண்டஸ், மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் கர்மவீர் புரசுகார் விருது பெற்றவர்கள். [17]

பிக் பாஸ் மற்றும் இந்தியத் திரைப்படத் துறை நுழைவு தொகு

பிக் பாஸ் 3 உண்மைநிலை நிகழ்ச்சியில் சீஸ்லா பங்கேற்றார். இது இவரது இந்திய உண்மைநிலை நிகழ்ச்சியில் முதல் அறிமுகம்.[18] நிகழ்ச்சியில் 10 வாரங்கள் செலவிட்ட பிறகு, 68வது நாளில் இவர் வெளியேற்றப்பட்டார்.

திசம்பர் 2010 இல், புவெனஸ் ஐரிசில் நிகழ்த்தப்பட்ட ஜோர கா ஜட்கா: டோட்டல் வைபவுட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீஸ்லா கலந்து கொண்டார். [19] இது நடிகர் சாருக் கான் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் பதிவு செய்யப்பட்டது. 25 பிப்ரவரி 2011 அன்று குசால் பஞ்சாபி வெற்றியாளரானார், அதே நேரத்தில் சீஸ்லா 51 வினாடிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [20][21]

2012 ஆம் ஆண்டில், அக்‌சய் குமார் நடித்த கிலாடி 786 என்ற நகைச்சுவை திரைப்படத்தில் வரும் "பல்மா" என்ற குத்தாட்டப் பாடலில் அக்‌சய் குமார், அசின் ஆகியோருடன் குத்தாட்டம் ஆடினார், இது சீஸ்லாவின் முதல் முக்கியத் தோற்றமாகும். இப்பாடலுக்கு ஹிமேஷ் ரேஷாமியா இசையமைத்துள்ளார், நடனத்தை கணேஷ் ஆச்சார்யா அமைத்துள்ளார். [22]

2018 இல், இவர் கடைசியாக தெரி பாபி ஹை பக்லே திரைப்படத்தில் வரும் "கன்பியூஸ்டு லவ்வர்" என்ற குத்தாட்டப் பாடலில் க்ருஷ்னா அபிசேக் உடன் நடனமாடினார். [23][24]

திரைப்படவியல் தொகு

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி நாடு
2007 பீச் அவுஸ் டெய்சி வாண்டன்பர்க் செருமான் செருமனி
2008 கர்மா லிண்டா ஆங்கிலம் ஐக்கிய இராச்சியம்
2008 யடிசிடேர்ஸ் இன் பலேர்மோ கிளௌடியா இத்தாலியம் இத்தாலி
2008 10:10 செரின் வங்காளம் இந்தியா
அறிவிக்கப்படவேண்டும் பிரைவேட் நம்பர் - கன்னடம் இந்தியா
2012 யார் பர்தேசி அண்ணா பஞ்சாபி இந்தியா
2012 கிலாடி 786 "பல்மா" என்ற குத்தாட்டப் பாடலில் சிறப்புத் தோற்றம் இந்தி இந்தியா
2013 @ அந்தேரி மலையாளம் இந்தியா
2014 தேசி கட்டே "பட்னே வாலி ஹூன்" என்ற குத்தாட்டப் பாடலில் சிறப்புத் தோற்றம் இந்தி இந்தியா
2016 கியா கூல் ஹை ஹம் 3 சகுந்தலா (சக்கு) இந்தி இந்தியா
2018 தேரி பாபி ஹை பக்லே "கன்பியூஸ்டு லவ்வர்" என்ற குத்தாட்டப் பாடலில் சிறப்புத் தோற்றம் இந்தி இந்தியா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு

ஆண்டு நிகழ்ச்சி நிகழ்ச்சி தொலைக்காட்சி மேற்.
2009 பிக் பாஸ் 3 போட்டியாளர் (70வது நாளில் வெளியேற்றப்பட்டார்) கலர்சு தொலைக்காட்சி [25]
2011 ஜோர கா ஜட்கா: டோட்டல் வைபவுட் போட்டியாளர் இமாஜின் தொலைக்காட்சி [26]
2016 பாக்ஸ் கிரிக்கெட் லீக் 2 ஆட்டக்காரர் கலர்சு தொலைக்காட்சி [27]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சீஸ்லா அஸ்கனாசு யூதர் குடும்பத்தில் பிறந்தவர், இருப்பினும் 2009 இல் இந்து சமயத்திற்கு மாறினார், இந்து சமய கலாச்சாரம், புராணங்களில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பின், தன்னை ஒரு பிள்ளையார் பக்தை என்றும் கர்மவினையில் நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறினார்.[28][29]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Claudia Ciesla Featured Model Interview பரணிடப்பட்டது 9 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் 4 January 2005
  2. "I am not a reincarnation of Lord Ganesha, says Claudia Ciesla". Archived from the original on 26 February 2014. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
  3. "German actor Suzanne Bernert said Claudia Ciesla has no right to play with Indian religious sentiments". Archived from the original on 30 October 2015. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
  4. 4.0 4.1 casting-agentur.de Interview mit dem Model Claudia Ciesla, 09. November 2007 (in இடாய்ச்சு மொழி)
  5. "Autobild Article, Supergirl 2006". Archived from the original on 17 October 2007. பார்க்கப்பட்ட நாள் 15 October 2007.
  6. "Actor wants Ooty to be Hollywood crew's destination"[தொடர்பிழந்த இணைப்பு], The New Indian Express, 30 January 2008
  7. "Bollywood-smitten Claudia" பரணிடப்பட்டது 1 மே 2008 at the வந்தவழி இயந்திரம், India-EU Film Initiative, 24 March 2008
  8. "Süße Claudia-In Indien wird sie jetzt Kinostar", Bild, 23 February 2008
  9. "Cronache di Sicilia" பரணிடப்பட்டது 6 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
  10. ""BILD-online, 1. Aug. 2008"". 31 July 2008. Archived from the original on 6 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 August 2008.
  11. "Interview in ital. TV Kanal 7Gold"[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "The Telegraph of India, August 8, 2008". Archived from the original on 27 August 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2008.
  13. "The Telegraph of India, August 23 , 2008". Archived from the original on 13 September 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2008.
  14. "DERWESTERN, "Claudia Ciesla: Von Bamberg nach Bollywood", 11.01.2009". Archived from the original on 4 February 2009. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
  15. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  16. The Deccan Chronicle, July 2, 2009 பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  17. FPR பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம், 27 November 2009
  18. "The Times of India, September 26, 2009". The Times of India. Archived from the original on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
  19. official website of zorka-jhatka-total-wipeout, December 29, 2011 பரணிடப்பட்டது 6 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம்
  20. "Kushal Punjabi Wins Zor Ka Jhatka". NDTV Movies. 26 February 2011 இம் மூலத்தில் இருந்து 14 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714162435/http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN20110170304&keyword=television&subcatg=MOVIESINDIA&nid=88011. 
  21. "Kushal Punjabi wins 'Zor Ka Jhatka'". The Times of India. 26 February 2011 இம் மூலத்தில் இருந்து 2 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110302103615/http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/Kushal-Punjabi-wins-Zor-Ka-Jhatka/articleshow/7579277.cms. 
  22. "KHILADI 786: RD Burman features with Akshay in new song". Hindustan Times. 18 October 2012 இம் மூலத்தில் இருந்து 20 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130320194757/http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/KHILADI-786-RD-Burman-features-with-Akshay-in-new-song/Article1-946617.aspx. பார்த்த நாள்: 12 August 2013. 
  23. "Krushna Abhishek and Claudia Ciesla on sets of Teri Bhabhi Hain Pagle". mid-day. 11 June 2018. Archived from the original on 18 February 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  24. "Teri Bhabhi Hai Pagle: 'Confused Lover' Krushna gets groovy with Claudia". Bollywood Bubble. 28 June 2018. Archived from the original on 18 February 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  25. "Bigg Boss' Claudia Ciesla gets candid with fans". 17 December 2009. Archived from the original on 24 March 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
  26. "Claudia Ciesla features in Zor Ka Jhatka". 3 February 2011. Archived from the original on 20 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
  27. "200 Actors, 10 Teams, and 1 Winner... Let The Game Begin". India.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  28. "Claudia wants to be a Hindu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
  29. "Global celebrities who have turned Hindu or have been touched by sanatana dharma". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளௌடியா_சீஸ்லா&oldid=3934899" இலிருந்து மீள்விக்கப்பட்டது