கிழக்கு மேற்கு வழித்தடம்
கிழக்கு மேற்கு வழித்தடம் சிங்கப்பூர் துரிதக் கடவு சேவையின் இரண்டாவது வழித்தடமாகும். தற்பொழுது இத்தடத்தின் நீளம் 49.2 கிலோமீட்டர், மற்றும் இதில் 35 ரயில் நிலையங்கள் உள்ளன. (இன்னும் நான்கு கட்டப்பட்டு வருகின்றன, 2016ல் முடியும்). இதனால் இதுவே சிங்கப்பூரின் மிக நீளமான வழித்தடமாகும். இதன் தொடக்க நிலையத்தில் இருந்து கடைசி நிலையம் செல்ல 63 நிமிடங்கள் ஆகின்றது. இந்த வழித்தடத்தின் நிறம் பச்சை ஆகும். இந்த தடத்தின் சேவையை எஸ் எம் ஆர் டி வழங்குகிறது.
இதன் பெயர் காட்டுவது போல், இந்த வழித்தடம் சிங்கப்பூரின் கிழக்கையும் மேற்கையும் ஒன்றிணைக்கிறது. இடையில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையத்தில், வடக்கு தெற்கு வழித்தடம் உடனான சந்திப்பு உள்ளது. இதே வழித்தடத்துடன் நகர மண்டபம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ஆகியவற்றிலும் சந்திப்புகள் உள்ளன.
வட்டப்பாதை வழித்தடத்திற்கு மாற விரும்புவோர், பாய லேபார் மற்றும் புவன விஸ்தா ஆகியவற்றில் உள்ள சந்திப்புகளை பயன்படுத்தலாம்.
முதல் கட்டம்
தொகு- 12 டிசம்பர் 1987 - நகர மண்டபம் தொடருந்து நிலையம் முதல் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் வரை தொடங்கப்பட்டது.
- 12 மார்ச் 1988 - ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் முதல் கிளிமெண்டி தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
- 5 நவம்பர் 1988 - கிளிமெண்டி தொடருந்து நிலையம் முதல் ஏரிக்கரை தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
- 4 டிசம்பர் 1989 - தானா மேரா தொடருந்து நிலையம் முதல் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
- 10 மார்ச் 1990 - ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் முதல் சுவா சூ காங் தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
- 6 ஜூலை 1990 - ஏரிக்கரை தொடருந்து நிலையம் முதல் பூன் லே தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
சாங்கி விமானநிலைய விரிவாக்கம்
தொகு- 10 ஜனவரி 2001 -தானா மேரா தொடருந்து நிலையம் முதல் எக்ஸ்போ தொடருந்து நிலையம்]] வரை விரிவாக்கப்பட்டது.
- 18 அக்டோபர் 2001 -டோவெர் தொடருந்து நிலையம் உருவாக்கப்பட்டது
- 8 பெப்ரவரி 2002 -எக்ஸ்போ தொடருந்து நிலையம் முதல் சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம் வரை விரிவாக்கப்பட்டது.
- 28 பெப்ரவரி 2009 -பூன் லே தொடருந்து நிலையம் முதல் சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம் வரை தொடர் சேவை தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
வெளினைப்புகள்
தொகு- [3] பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
- [4]