கிஷ்மு

தமிழ்த் திரைப்பட நடிகர்

கிஷ்மு (Kishmu, 1947 - 10 நவம்பர் 1993) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகர் ஆவார். கிஷ்மு 1982 இல் விசு இயக்கிய மணல் கயிறு என்ற படத்தில் அறிமுகமானார். மணல் கயிறு, டௌரி கல்யாணம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் , திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், வரவு நல்ல உறவு ஆகிய திரைப்பங்களில் நடத்ததிற்காக குறிப்பிடப்படுகிறார்.

கிஷ்மு
பிறப்புகிருஷ்ணமூர்த்தி
1947
தமிழ்நாடு
இறப்பு10 நவம்பர் 1993 (அகவை 46)
தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், நாடக நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1982–1992
குறிப்பிடத்தக்க படைப்புகள்மணல் கயிறு
சிதம்பர ரகசியம்
சம்சாரம் அது மின்சாரம்
வரவு நல்ல உறவு
உறவினர்கள்விசு

திரைப்பட வாழ்க்கை தொகு

நாடகத்துறையில் இருந்த கிஷ்மு தனது சகோதரர் விசுவுடன் நடிக்கத் தொடங்கினார். விசு இயக்கிய இரண்டாவது படமான மணல் கயிறு (1982) படத்தில் கிஷ்மு திரைப்பட நடிகராக அறிமுகமானார். இது விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியானவும் பாராட்டைப் பெற்றது. 1985 ஆம் ஆண்டில், கிஷ்மு அவள் சுமங்கலிதான் படத்தில் நடித்தார், 1986 ஆம் ஆண்டில் சம்சாரம் அது மின்சாரம் மற்றும் ஊமை விழிகள் ஆகியவற்றில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். இவை இரண்டும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இவரது ஆரம்ப கால நடிப்புப் தொழிலில், கிஷ்மு தனது சகோதரரின் படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இறுதியில் மற்றவர்களின் படங்களிலும் நடித்தார். 1982 முதல் 1990 வரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.[1][2]

திரைப்படவியல் தொகு

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1982 மணல் கயிறு கமலகண்ணன்
1983 டௌரி கல்யாணம் ராஜா கலவை
1983 நாலு பேருக்கு நன்றி
1984 ராஜதந்திரம் குழந்தைசாமி
1984 வாய் சொல்லில் வீரனடி
1985 சிதம்பர ரகசியம் காட்டமுத்து செட்டியார்
1985 அவள் சுமங்கலிதான் மருத்துவர்
1986 சம்சாரம் அது மின்சாரம் ஆல்பர்ட் பெர்னாண்டஸ்
1986 ஊமை விழிகள் கோத்தண்டராமன்
1987 திருமதி ஒரு வெகுமதி சத்தியமூர்த்தி
1987 ஒரே ரத்தம் மதவெறியர்
1988 பெண்மணி அவள் கண்மணி வடிவின் கணவர்
1988 மாப்பிள்ளை சார்
1988 தாய் மேல் ஆணை சர்க்கரை
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் ஐஸ் மாமா
1990 வரவு நல்ல உறவு சந்திரசேகர்
1990 வேடிக்கை என் வாடிக்கை மத்ருபூதம்
1992 உரிமை ஊஞ்சலாடுகிறது கமலநாதன்
உதவி இயக்குநராக

குறிப்புகள் தொகு

  1. "Actor, director Visu dies at 75, funeral to be held on Monday". The Hindu. 22 March 2020.
  2. "படங்களில் பிசியாக இருந்தபோது சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது". Maalaimalar (in Tamil). 2016-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்மு&oldid=3146469" இலிருந்து மீள்விக்கப்பட்டது