கீழெழுத்தும் மேலெழுத்தும்

கீழெழுத்து அல்லது மேலெழுத்து (subscript அல்லது superscript) என்பது இயல்பான கோட்டிற்குச் சற்று கீழாக அல்லது மேலாக அச்சிடலில் அமையும் உருவாகும் (எண்ணுரு அல்லது எழுத்துரு போன்ற). ஒரு உரையிலுள்ள பிற எழுத்துக்களைவிட மேலெழுத்துக்களும் கீழெழுத்துகளும் அளவில் சற்று சிறியவையாக இருக்கும். கீழெழுத்துகள் அடிக்கோட்டின்மீது அல்லது அடிக்கோட்டிற்கு கீழாகவும், மேலெழுத்துகள் மேற்கோட்டிற்கு மேலாகவும் அமையும். பெரும்பாலும் இவை வாய்பாடுகள், கணிதக் கோவைகள், வேதிச் சேர்மங்கள் மற்றும் ஓரிடத்தான்கள் குறியீடுகளில் பயன்படுகின்றன. இவற்றுக்கு வேறு பல பயன்களும் உண்டு.

மேலெழுத்து, கீழெழுத்து எடுத்துக்காட்டு

அச்சுக்கலைத் தொழிலில், உரையின் பிற உருக்களைவிடச் சிறிய அளவுடையவையாக மட்டும் கீழெழுத்து மற்றும் மேலெழுத்து உருக்கள் அமைவதில்லை; பிற உரையுடன் ஒத்து தெளிவாகத் தெரிவதற்காகச் சிறியளவாக்கப்படுவதுடன், சற்று தடித்தவையாகயும் அச்சுமுகத்தில் வடிவமைக்கப்படுகின்றன. அச்சுமுகத்தையும் பயன்படும் சூழலையும் பொறுத்து இவை மூல அடிக்கோட்டிலிருந்து கீழ் அல்லது மேலாக அமையும் தூரம் மாறுபடும்.

இவ்வெழுத்துகள் அச்சுக்கோப்பில் தாழ்வு எழுத்து மற்றும் உயர் எழுத்து எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் உயர் எழுத்துக்களின் தொழில்நுட்பமற்ற பயன்பாடு வழக்கத்திலில்லை.[1] உயர் எழுத்துக்கள் மற்றும் அடிக்கோடின்மீதமைந்த தாழ்வு எழுத்துக்கள் பின்னங்கள் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன; அடிக்கோட்டிற்குக் கீழமையும் தாழ்வெழுத்துக்கள் வேதியியல் மற்றும் கணிதக் கீழெழுத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.[2]

அடிக்கோட்டிற்குக் கீழமையும் கீழெழுத்துக்கள் தொகு

மூலக்கூற்று வாய்பாடுகளில் அடிக்கோட்டிற்குக் கீழமையும் கீழெழுத்துகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக:

அணுவடித்துகளின் வேறுபட்ட வகைகளைக் குறிக்க இவ்வகை கீழெழுத்துக்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, எதிர்மின்னி, மியூயான், டாவ் நியூட்ரினோக்களின் குறியீடுகள் முறையே:

νe, νμ, ντ.

இதேபோல கணிதவியலிலும் ஒரே மாறியின் வெவ்வேறு இடப்பயன்பாடுகளுக்கேற்ப அம்மாறியை வேறுபடுத்திக் காட்ட இவ்வகை கீழெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சமன்பாட்டில் மாறி x இன் தொடக்க மதிப்பு x0 எனவும் இறுதி மதிப்பு xf எனவும் குறிக்கப்படுகிறது. vஏவூர்தி என ஒரு ஏவூர்தியின் திசைவேகத்தையும் vபார்வையாளர் என அதன் பார்வையாளரின் திசைவேகத்தையும் குறிக்கலாம். பூச்சியத்தை கீழெழுத்தாகக் கொண்ட மாறிகளை வாசிக்கும்போது அம்மாறியின் பெயரைத் தொடர்ந்து "நாட்" ("nought") என வாசிக்கப்படுகிறது. (எகா: v0 இன் வாசிப்பு "வி நாட்").[3]

கணிதத்தில் தொடர்வரிசை, கணம் திசையன் ஆகியவற்றின் உறுப்புகளின் குறியீடுகளில் கீழெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக O = (45, −2, 800) என்ற தொடர்வரிசையில், O3 என்பது O இன் மூன்றாது உறுப்பான 800 ஐக் குறிக்கிறது.

மேலும் ஒரு எண்ணின் வேரெண் அல்லது அடிமானத்தைக் குறிக்கவும் கீழெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பதினறும எண் முறைமை, பதின்மம், எண்ணெண் ஆகிய அடிமானங்களின் ஒப்பீடு:

Chex = 12dec = 14oct.

அடிக்கோட்டிற்கு கீழமையும் கீழெழுத்துக்கள் பின்னங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டு:

 .

அடிக்கோட்டுடன் அமைக்கப்படும் கீழெழுத்துகள் தொகு

இத்தகைய கீழெழுத்துகள் மூலைவிட்ட வடிவில் எழுதப்படும் பின்னங்களின் பகுதிகள் (எகா: ½,), விழுக்காடு குறியீடு (%), ஆயிரத்துக்கு, ஒவ்வொரு ஆயிரத்துக்கு (permille) என்பதன் குறியீடு (‰), பத்தாயிரத்திற்கு, ஒவ்வொரு பத்தாயியரத்துக்கு என்பதன் குறியீடு (‱) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சில குறிப்பிட்ட சொற்சுருக்கங்களிலும் (எகா: (care of), (account of), (addressed to the subject)) பயன்படுத்தப்படுகின்றன.

உரையின் மேற்கோட்டைத் தாண்டாத மேலெழுத்துகள் தொகு

வரிசையைச் சுட்டும்விதமாக 1st, 2nd, 3rd, 4th என மேலெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவ்விதமாக எழுதுவதைப் பல வழிமுறைகள் ஒத்துக்கொள்வதில்லை.[4] பிற மொழிகளிலும் இந்தமுறை பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டு: பிரெஞ்சு மொழியில்: 1er 2e; போர்த்துகீசியம்: 4ª , 4º எசுப்பானியம்: 4.ª , 4.º .

தற்கால அச்சுமுகங்களில் இவ்வகை மேலெழுத்துகள் அளவில் சிறியவையாகவும் உரையின் அடிக்கோட்டிற்கு சற்று மேலாக அடிக்கோடு கொண்டவையாகவும் (உரையின் மேற்கோட்டைத் தாண்டாதவையாக) அமைக்கப்படுகின்றன. சில இடங்களில் அச்சுமுகங்களைப் பொறுத்து வழக்கமான சில சொற்சுருக்கங்களுக்கு இவ்வகை மேலெழுத்துகள் பயன்படுகின்றன். எடுத்துக்காட்டு:

கையால் எழுத்தப்படும் ஆவணங்களில் பணத்தைக் குறிக்கும்போது சதங்கள் மேலெழுத்துகளாக எழுதப்படுகின்றன: $8⁰⁰ , 8€⁵⁰

பெரும்பாலும் மேலெழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன: $8⁰⁰, 8|€⁵⁰.

நாணயக் குறியீடுகளையும் மேலெழுத்துகளாக எழுதலாம்: $80 6¢.

மூலைவிட்ட வடிவில் எழுதப்படும் பின்னங்களின் தொகுதிகள் (எகா: ½,), விழுக்காடு குறியீடு (%), ஆயிரத்துக்கு, ஒவ்வொரு ஆயிரத்துக்கு (permille) என்பதன் குறியீடு (‰), பத்தாயிரத்திற்கு, ஒவ்வொரு பத்தாயியரத்துக்கு என்பதன் குறியீடு (‱) ஆகியவற்றிலும் சொற்சுருக்கங்கள் (care of), (account of), (addressed to the subject) போன்றவற்றிலும் மேற்பகுதிகள் இந்தவகையான மேலெழுத்துகளாக உள்ளதைக் காணலாம்

உரையின் மேற்கோட்டைத் தாண்டி அமையும் மேலெழுத்துகள் தொகு

கணிதத்தில் அடுக்கேற்றத்தில் இந்த மேலெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன:

y4 (y இன் அடுக்கு 4)
2x (x இன் அடுக்கு 2)

அணு ஓரிடத்தான்கள்:

3
He
, 12
C
, 13
C
, 131
I
, 238
U
.

கீழெழுத்துகள், மேலெழுத்துகள் இரண்டையும் பயன்படுத்தும் குறியீடுகளும் உள்ளன:235
92
U
என்னும் குறியீடு ஒரு யுரேனிய அணுவைக் குறிக்கிறது. மேலும் அதில் 235 அணுக்கருனிகளைக் கொண்டது என்றும் அவற்றுள் 92 நேர்மின்னிகள் என்ற தகவலையும் தருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Bringhurst 2005, pp 311–12.
  2. Bringhurst 2005, p 309.
  3. "Your Head Will Spin: "Naught," "Aught," and "Ought"". பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  4. "UCC EPU: Editing Word files for publication: Making the best of what Word provides". Publish.ucc.ie. 2011-07-03. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.

நூலடைவு தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மேலெழுத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கீழெழுத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.