குன்னுவாரன் கோட்டை
குன்னுவாரன்கோட்டை (Kunnuvarankottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். நிலக்கோட்டை வருவாய் வட்டத்தின் 14 ஆவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:14) ஆகும்.[4][5]
குன்னுவாரன்கோட்டை | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | 10°06′20″N 77°46′34″E / 10.1056°N 77.7760°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||||||
மக்கள் தொகை | 3,978 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 232.39 மீட்டர்கள் (762.4 அடி) | ||||||
குறியீடுகள்
|
முக்கிய பயிர்
தொகுஇங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வைகை ஆறு பாயும் பகுதி என்பதால் வேளாண்தொழில் நல்லமுறையில் நடக்கிறது.
அமைவிடம்
தொகுவத்தலக்குண்டுலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வத்தலக்குண்டுலிருந்து சுமார் 13 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 685 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் வைகை ஆறு ஓடுகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குன்னுவாரன் கோட்டை கிராமத்தில் 3978பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 2111,பெண்கள்1867 பாலின விகிதம் 884. எழுத்தறிவு பெற்றவர்கள் 2101பேர். இதில் 1299 பேர் ஆண்கள்; 802 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.57. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 451 ஆண் குழந்தைகள் 217,பெண் குழந்தைகள்234 ஆவர்.[6]
கோயில்கள்
தொகுஇவ்வூரில், சிறப்பு வாய்ந்த குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ மண்டு பிடாரிஅம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளன.
நிர்வாக அலகு
தொகு- மாவட்டம்: திண்டுக்கல்
- வருவாய் கோட்டம்: திண்டுக்கல்
- வட்டம்: நிலக்கோட்டை
- வருவாய் கிராமம்: குன்னுவாரன் கோட்டை
- ஊராட்சி ஒன்றியம்: நிலக்கோட்டை
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):கூவனூத்து - KOOVANUTHU
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)