குமார்சைன்

குமார்சேன் (Kumarsain ) கும்கர்சைன் என்றும் அழைக்கப்பட்ட, இது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர சபை ஆகும். முன்னர் இது பிரித்தானிய இராச்சியத்தில் ஒரு சுதேச மாநிலமாக இருந்தது. மேலும் பஞ்சாப் மாநில அமைப்பின் பல மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். [1] இது சிம்லாவிலிருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்நகரம் ஆப்பிள் மற்றும் செர்ரி பழத்தோட்டங்களுக்கு பிரபலமானது.

குமார்சைன்
நகரம்
Kumarsain.jpg
Tanni Jubbar Lake.jpg Christ Church in Kotgarh village.jpg
A meadow near Derthu Peak.jpg Himalayas as seen from Kumarsain.jpg
Koteshwar Mahadev Temple Mandholi.jpg
மேலே இருந்து கடிகார திசையில்:
அருகிலுள்ள கிராமத்திலிருந்து குமார்சைன் நகரம், கோட்கர் கிராமத்தில் உள்ள புனித மேரி தேவாலயம், குமார்சைனில் இருந்து தெரியும் இமயமலை மலைத்தொடர், மண்டோலி கிராமத்தில் உள்ள கோதேசுவர் மகாதேவர் கோயில், தெர்த்து சிகரத்திற்கு செல்லும் வழியில் ஒரு புல்வெளி, தானி ஜப்பார் ஏரி
குமார்சைன் is located in Himachal Pradesh
குமார்சைன்
குமார்சைன்
குமார்சைன் is located in இந்தியா
குமார்சைன்
குமார்சைன்
Location in Himachal Pradesh, India
ஆள்கூறுகள்: 31°19′05″N 77°26′46″E / 31.318145°N 77.446189°E / 31.318145; 77.446189ஆள்கூறுகள்: 31°19′05″N 77°26′46″E / 31.318145°N 77.446189°E / 31.318145; 77.446189
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
ஏற்றம்1,762
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,461
 • தரவரிசை29 in HP
 • அடர்த்தி2,711
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்172029
வாகனப் பதிவுHP-95

குமார்சைன் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் கும்கர்சேன் மாநிலமாக நிறுவப்பட்டது. இதை 1803 முதல் 1816 வரை நேபாளமும், 1839 முதல் 1840 வரை பிரித்தானிய இந்தியாவும் ஆக்கிரமித்தன.

குமார்சைன் பாரரா கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 5க்கு அருகில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இது நர்கந்தாவிலிருந்து இராம்பூர் நோக்கி 20 கி.மீ தொலைவில் உள்ளது. குமார்சைனில் அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு பட்டப்படிப்புக் கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இன்னும் பல துறைகள் மற்றும் பள்ளிகள் விரைவாக மக்கள் தொகையை அதிகரித்து குமார்சைனின் வளர்ச்சியை வளர்த்து வருகின்றன.

குமார்சைன் மேளா சார் சாலாவிற்கும் ( கண்காட்சி ) பிரபலமானது. இது ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. குமார்சைன் சுமார் 1000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் இன்னும் வசித்து வரும் பழமையான குடியேற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இமாச்சல பிரதேசத்தின் மிகவும் கல்வியறிவுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

நிலவியல்தொகு

குமார்சைன் 31.318145 ° வட்க்கிலும் 77.446189 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. சராசரியாக 1,762 மீட்டர் (5,781 அடி) உயரத்தில் உள்ளது. இது சிம்லாவிலிருந்து உட்புற எல்லைகளை நோக்கி 80 கி.மீ தூரத்தில் வடமேற்கு இமயமலையில் உள்ள சத்லஜ் ஆற்றின் மேலே அமைந்துள்ளது. குமார்சைன் ஆண்டு முழுவதும் ஒரு சிறந்த காலநிலை மற்றும் வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குமார்சைன் நகரம் அதன் எல்லைக்குள் பலயோக், தமாலி, இலாதி, பாராரா, பாய் மற்றும் தெத்தால் என பல கிராமங்களைக் கொண்டுள்ளது.

 
குமார்சைனில் சூரியன் மறையும் ஒரு இயற்கை காட்சி
 
பனிப்பொழிவின் போது குமார்சைன்

குமார்சைனைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களில் நர்கந்தா, கோட்கர், ஹட்டு சிகரம், தானி சுபார் ஏரி, தெர்து சிகரம், காளி மாதா கோயில் மற்றும் சிலாரூ வளைதடிப் பந்தாட்ட அரங்கம் ஆகியவை அடங்கும் .

 
குமார்சைனைச் சுற்றி இமயமலை காடு
 
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வளைதடி பந்தாட்ட அரங்கம், சிலாரூ

அரசுதொகு

குமார்சைன் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாக இருந்தது. மேலும் தியோக் தொகுதியுடன் இணைக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு வரையிலான வரை தனித் தேர்தல் இருக்கை இருந்தது. மூத்த காங்கிரசு அமைச்சர் வித்யா ஸ்டோக்ஸ் 2003 ல் 2 முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2007 இல் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குமார்சைன் ஒரு வட்டமாக உள்ளது. [2] அத்துடன் ஒரு துணைப்பிரிவாகவும் மற்றும் நர்கந்தா தொகுதியின் கீழ் வருகிறது. [3] இமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய தலைமைச் செயலாளர் (அனில் குமார் காச்சி இ.ஆ.ப ) குமார்சைனைச் சேர்ந்தவர் ஆவார். [4]

புள்ளிவிவரங்கள்தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [5] குமார்சைனின் மக்கள் தொகை 5,461 பேர் என்ற அளவில் இருந்தது. ஆண்களில் மக்கள் தொகையில் 52%, பெண்கள் 48% ஆகும். குமார்சைனின் சராசரி கல்வியறிவு விகிதம் 97.8% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஆண் கல்வியறிவு 97%, மற்றும் பெண் கல்வியறிவு 89% ஆகும். குமார்சைனில் 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

வரலாறுதொகு

இந்தியாவின் கயாவைச் சேர்ந்த கீர்த்தி சிங் (பின்னர் ராணா கிராத் சந்த்) என்றும் அழைக்கப்படும் கிராத் சிங், கி.பி 11 ஆம் நூற்றாண்டில் கும்கர்சைன் மாநிலத்தை நிறுவினார். முன்பு புசாகரின் நிலப்பிரபுத்துவமாக இருந்தவர் ஆவார். 1815 இல் கூர்க்காக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த மாநிலம் சுதந்திரமாக அறிவிக்கப்பட்டது. ராணா 45 காலாட்படை மற்றும் 1 துப்பாக்கியைக் கொண்ட இராணுவப் படையை பராமரித்தார் (1892 நிலவரப்படி). [6] [7] [8]

 
குமார்சைன் மாநிலச் சின்னம்

இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மறைந்த ஜெய் பிஹாரி லால் காச்சி ( இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்) இந்த ஊரைச் சேர்ந்தவர். அவரது நினைவாக குமார்சைனில் அவரது பெயரிடப்பட்ட அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. 1972, 1982, 1985, 1993 மற்றும் 1998 சட்டமன்றத் தேர்தல்களில் குமார்சைன் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக காச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். [9]

இந்தியாவில் வளர்க்கப்பட்ட முதல் ஆப்பிள் மரம் கோட்கர் கிராமத்தில் (குமார்சைன் வட்டத்திலுள்ள உள்ள ஒரு கிராமம்) இருந்தது. இது 1916 இல் சத்யானந்த் ஸ்டோக்ஸ் (இந்தியாவில் குடியேறிய ஒரு அமெரிக்கர் ) என்பவரால் நடப்பட்டது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்சைன்&oldid=2977215" இருந்து மீள்விக்கப்பட்டது