குர்ரம் ஜாசுவா

தெலுங்கு எழுத்தாளர்

குர்ரம் ஜாசுவா (Gurram Jashuva) (அல்லது ஜி ஜோசுவா ) (பிறப்பு: 1895 செப்டம்பர் 28 - இறப்பு: 1971 ஜூலை 24) இவர் ஒரு தெலுங்கு கவிஞராவார். இவரது உண்மையான பெயர் அனில் குமார் என்பதாகும்.  

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூரில், வினுகொண்டா என்ற ஊரில் தோல் தொழிலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த வீரையா மற்றும் லிங்கம்மா ஆகியோருக்கு ஜாசுவா பிறந்தார்.[1] இவரது தந்தை யாதவ சாதியைச் சேர்ந்தவர். இவரது தாய் மாதிக சாதியைச் சேர்ந்தவர்.[2][3][4] வறுமை மற்றும் இவரது பெற்றோரின் இடைப்பட்ட திருமணம் காரணமாக, சில சாதிகள் "தீண்டத்தகாதவர்கள்" என்று கருதப்பட்ட ஒரு சமூகத்தில் இவரது குழந்தைப்பருவம் கடினமாக இருந்தது. ஜாசுவாவும் இவரது சகோதரரும் இவரது பெற்றோரால் கிறித்தவர்களாக வளர்க்கப்பட்டனர். உயர்கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஜாசுவா தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளின் அறிஞராக உபயா பாஷா பிரவீனாவை கற்றார்.[5]

தொழில் தொகு

"தீண்டாமை," தலித் உரிமைகள் மற்றும் பிரித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஜாசுவாவின் அனைத்து படைப்புகளிலும் பொதுவான கருப்பொருளாக இருந்தன. கப்பிலம் , பிரதௌசி (ஒரு கிளர்ச்சி) மற்றும் காண்டீசெகுடு (ஒரு அகதி) ஆகியவை இவரது இலக்கிய நியதியில் குறிப்பிடத்தக்க சில உள்ளீடுகளாகும். ஜாசுவாவின் படைப்புகளில் இருந்து பல வசனங்கள் பிரபலமான புராண நாடகமான அரிச்சந்திரனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு தகன மைதானத்தின் நடுவே அமைக்கப்பட்ட ஒரு காட்சியை சொல்லலாம்.[6]

ஆந்திராவில் உள்ள தலித் சமூகங்கள் ஜாசுவாவை முதல் நவீன தெலுங்கு தலித் கவிஞராக கருதுகின்றனர். மேலும் தெலுங்கு மற்றும் இந்திய இலக்கிய வரலாற்றிலிருந்து இவர் மறைக்கப்படுவதை தீவிரமாக எதிர்க்கின்றனர். 1995 ஆம் ஆண்டில், ஆந்திராவில் உள்ள தலித் சமூகங்கள் ஜாசுவாவின் பிறப்புக்காக பல்வேறு நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யத் தொடங்கின. சமீபத்தில் இவரது இலக்கிய பங்களிப்புகளின் நினைவைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளையும் தொடங்கின.[7]

இலக்கியப் படைப்புகள் தொகு

கபிலம் (1941) என்பது ஜஷுவாவின் மிகச்சிறந்த படைப்பாகும், இது காளிதாசரின் மேகதூதத்திற்குப் பிறகு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாடுகடத்தப்பட்ட காதலன் தனது அன்பை தனது அன்பான மனைவியுடன் தெரிவிக்க முயற்சிப்பதாக அமைத்துள்ளார்.[8]

விருதுகள் தொகு

1964 ஆம் ஆண்டில் கிரெஸ்து சரித்ரா என்ற நூலுக்காக ஜாசுவாவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.[9] ஜாசுவா 1964 ஆம் ஆண்டில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜாசுவாவுக்கு 1970 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தால் கலா பிரபூர்ணாவின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஜாசுவாவுக்கு 1970 ல் இந்திய அரசு பத்ம பூஷண் வழங்கியது .[10]

விமர்சன ஆய்வுகள் தொகு

எண்ட்லூரி சுதாகர் என்பவர் குர்ரம் ஜாசுவாவின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து இவரது பார்வை மற்றும் தாக்கம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.[11]

இவரது நினைவாக நிறுவப்பட்ட விருதுகள் தொகு

ஜாசுவா சாகித்ய புரஸ்காரம் ஜாசுவா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இந்திய இலக்கியங்களை அவர்களின் பங்களிப்புகளால் வளப்படுத்தியதற்காக பல்வேறு இந்திய பின்னணியிலிருந்து கவிஞர்களுக்கு ஆண்டு பரிசு வழங்கப்படுகிறது. இதன் நிறுவனர் மற்றும் செயலாளராக ஜாசுவாவின் மகள் ஹேமலதா லாவனம் இருக்கிறார்.[12] அசாமிய கவிஞரான நில்மணி புக்கான் இந்த விருதை 2002 இல் பெற்றார்.[13]

குறிப்புகள் தொகு

  1. Rao, Velcheru Narayana (2003). "Hibiscus on the Lake". University of Wisconsin Press. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
  2. Vepachedu Education foundation article on Jashua, Accessed 27 Oct 2013
  3. Suprasiddula jeevita viseshalu, Hanumcchastri Janamaddi
  4. Satajayanti saahitimoortulu, Sastri D (DN Sastri)
  5. A blog post
  6. யூடியூபில் DV Subbarao renders Jashua's poems in the play
  7. "Gurram Jashuva remembered".
  8. Pattem, Sundeep (2010). "Gabbilam I". Yemanna. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
  9. Sahitya Akademi awards பரணிடப்பட்டது 23 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்
  10. Padma Bhushan Awards பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  11. ""Jashuva Jeevitham -Drukphadham-Parinamamu "- Endluri Sudhakar (Accessed: 27 Oct 2013". Archived from the original on 25 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  12. Hemalata Lavanam passed away Accessed:12 Nov 2013
  13. "Assamese poet presented Joshua award -The Hindu 2002-07-27, Accessed 27 October 2013". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ரம்_ஜாசுவா&oldid=3929079" இலிருந்து மீள்விக்கப்பட்டது