குளுட்டரால்டிகைடு

வேதிச் சேர்மம்

குளுட்டரால்டிகைடு (Glutaraldehyde) என்பது C5H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (CH2)3(CHO)2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். குளுடரால்டிகைடு மூலக்கூற்றில் பார்மைல் (CHO) குழுக்களுடன் இரட்டிப்பாக நிறுத்தப்பட்ட ஐந்து கார்பன் சங்கிலி உள்ளது. வழக்கமாக நீரில் ஒரு கரைசலாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இத்தகைய கரைசல்கள் நீரேற்றுகள், வளைய வழிப்பெறுதிகள் மற்றும் ஒடுக்கப் பொருட்கள் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ளன. இவற்றில் பல ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகின்றன. இம்மூலக்கூறு இரண்டு ஆல்டிகைடு செயல்பாட்டுக் குழுக்களைக் கொண்டிருப்பதால், குளுட்டரால்டிகைடு (மற்றும் இதன் நீரேற்று) முதன்மை அமீன் குழுக்களுடன், ஒடுக்கம் மூலம் பொருட்களைக் குறுக்குப் பிணைப்பாக்கிட முடியும். டிஎன்ஏ போன்ற இயல்பான உயிரியல் செயல்பாட்டிற்கு முக்கியமான புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளை குறுக்குப் பிணைப்பால் கடினப்படுத்தலாம் மற்றும் செயலிழக்கச் செய்யலாம், எனவே குளுட்டரால்டிகைடு கரைசல்கள் பயனுள்ள உயிர்க்கொல்லிகள் மற்றும் நிலைநிறுத்திகளாகும். சிடெக்சு மற்றும் குளுட்டரால் என்ற வர்த்தகப் பெயர்களில் குளுட்டரால்டிகைடு விற்கப்படுகிறது.[3][4][5][6] ஒரு கிருமிநாசினியாக அறுவை சிகிச்சை கருவிகளை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.[3]

குளுட்டரால்டிகைடு
Skeletal formula of glutaraldehyde
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன்டையல்[1]
வேறு பெயர்கள்
குளுட்டரால்டிகைடு
குளுட்டார் ஈரால்டிகைடு
குளுட்டாரிக் அமில ஈரால்டிகைடு
குளுட்டாரிக் ஆல்டிகைடு
குளுட்டாரிக் ஈரால்டிகைடு
1,5-பெண்டாடையல்
இனங்காட்டிகள்
111-30-8 Y
ChemSpider 3365 Y
DrugBank DB03266 Y
InChI
  • InChI=1S/C5H8O2/c6-4-2-1-3-5-7/h4-5H,1-3H2 Y
    Key: SXRSQZLOMIGNAQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8O2/c6-4-2-1-3-5-7/h4-5H,1-3H2
    Key: SXRSQZLOMIGNAQ-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D01120 Y
பப்கெம் 3485
  • O=CCCCC=O
UNII T3C89M417N Y
பண்புகள்
C5H8O2
வாய்ப்பாட்டு எடை 100.117
தோற்றம் தெளிவான நீர்மம்
மணம் காரச் சுவை[2]
அடர்த்தி 1.06 கி/மி.லி
உருகுநிலை −14 °C (7 °F; 259 K)
கொதிநிலை 187 °C (369 °F; 460 K)
கலக்கும், வினைபுரியும்
ஆவியமுக்கம் 17 மி.மீ பாதரசம் (20°செல்சியசு)[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் CAS 111-30-8
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H302, H314, H317, H331, H334, H400
P260, P264, P270, P271, P272, P273, P280, P284, P301+312, P330, P302+352, P332+313, P304+340, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது.[2]
Threshold Limit Value
மில்லியனுக்கு 0.2 பகுதிகள் (0.82 மி.கி/மீ3) (TWA), மில்லியனுக்கு 0.05 பகுதிகள் (STEL)
Lethal dose or concentration (LD, LC):
134 மி.கி/கி.கி (எலி, வாய்வழி); 2,560 மி.கி/கி.கி (முயல், தோலி

)

அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
மில்லியனுக்கு 0.2 பகுதிகள் (0.8 மி.கி/மீ3)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

உயிர் வேதியியல்

தொகு

குளுட்டரால்டிகைடு உயிர்வேதியியல் பயன்பாடுகளில் அமீன் இருமுனை ஒரே வினை குறுக்குப் பிணைப்பாகவும் நிலைநிறுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7][8] இது செல்களை அவற்றின் புரதங்களை இணைப்பதன் மூலம் விரைவாகக் கொல்லும். பாக்டீரியா, தாவரப் பொருட்கள் மற்றும் மனித உயிரணுக்கள் போன்ற மாதிரிகளை நிலைநிறுத்த இரண்டு நிலைப்படுத்தும் செயல்முறைகள் பயன்படுகின்றன.[9] பொதுவாக இச்சேர்மம் தனியாக அல்லது பார்மால்டிகைடுகளுடன் கலக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது நிலைநிறுத்தும் செயல்முறையானது செல் மற்றும் உறுப்பு சவ்வு லிப்பிடுகளை குறுக்கு இணைப்புக்கும் நிலைப்படுத்தவும் ஓசுமியம் டெட்ராக்சைடைப் பயன்படுத்துகிறது.

குளுட்டரால்டிகைடுடன் சேர்த்துப் புரதங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மற்றொரு பயன்பாடு, வீரியமிழந்த நச்சு தடுப்பூசிகளை உருவாக்க பாக்டீரியா நச்சுகளை செயலிழக்கச் செய்வதாகும். கக்குவான் இருமலுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இதற்கு எடுத்துக்காட்டாகும். [10]

பொருளறிவியல்

தொகு

பொருள் அறிவியலில் குளுட்டரால்டிகைடு பயன்பாட்டுப் பகுதிகள் பலபடிகள் முதல் உலோகங்கள் மற்றும் உயிர் பொருட்கள் வரை இருக்கின்றன. குளுட்டரால்டிகைடு பொதுவாக நுண்ணோக்கிக்கான உயிரி மூலப்பொருட்களின் குணாதிசயத்திற்கு முன் நிலைநிறுத்தும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. குளுட்டரால்டிகைடு முதன்மை அமீன் குழுக்களைக் கொண்ட பல பலபடிகளுக்கு ஒரு சக்திவாய்ந்த குறுக்கு இணைப்பு முகவராகும்.[11][12] இரண்டு பலபடிப் பூச்சுகளுக்கு இடையே உள்ள ஒட்டுதல் சக்தியை மேம்படுத்த குளுட்டரால்டிகைடை ஓர் உள்ளிணைப்பு முகவராகவும் பயன்படுத்தலாம்.[13] கடலுக்கு அடியில் உள்ள குழாய்களை அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் குளுட்டரால்டிகைடு பயன்படுகிறது.[14]

மருத்துவம்

தொகு

மருத்துவப் பயன்பாடுகள்

தொகு

குளுட்டரால்டிகைடு ஒரு கிருமிநாசினியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3][4][15] பொதுவாக ஒரு கரைசலாக இது பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் பிற பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகிறது.[3]

தோல் மருத்துவப் பயன்பாடுகள்

தொகு

ஒரு மருந்தாக இது தோலில் காணப்படும் மருக்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.[4] இந்த நோக்கத்திற்காக, 10% கரைசல் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தை உலர்த்துகிறது, மருக்களை உடல் ரீதியாக அகற்ற உதவுகிறது.[16]

அடிக்கடி வியர்க்கும் நபர்களுக்கு ஆனால் அலுமினிய குளோரைடு சிகிச்சை பலனளிக்காதவர்களுக்கு தோல் மருத்துவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அதிவியர்வை சிகிச்சையிலும் குளுட்டரால்டிகைடு பயன்படுத்தப்படுகிறது.[17]

பிற பயன்பாடுகள்

தொகு

குளுடரால்டிகைடுடன் சேர்த்து நீரிய கரைசலாக்கி பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயு ஊசிக்கு மாற்றாக விற்பனை செய்யப்படுகிறது. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்கள் பொதுவாக குறைந்த செறிவுகளில் பாசிக்கொல்லியாக இதைப் பயன்படுத்துகின்றனர்.[18]

பாதுகாப்பு

தொகு

தோலில் எரிச்சலூட்டுவது குளுட்டரால்டிகைடின் பக்க விளைவுகளில் ஒன்றாகும்.[4] அதிக அளவில் உடலின்மீது வெளிப்பட்டால், குமட்டல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும்.[3] குறிப்பாக அதிக செறிவுகளில் பயன்படுத்தும் போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[3] குளுட்டரால்டிகைடு வித்திகள் உட்பட பல நுண்ணுயிரிகளின் வரம்பிற்கு எதிராக செயல்படுகிறது.[3][19] இதுவோர் ஈரால்டிகைடாகும் .[20] வேதியியலில் பல வழிமுறைகளில் குளுட்டரால்டிகைடு செயல்படுகிறது.[19]

ஒரு வலுவான தொற்று நீக்கியாக குளுட்டரால்டிகைடு நச்சுத்தன்மையுடையது. ஒரு வலுவான எரிச்சலூட்டும் பொருளுமாகும்.[21] புற்றுநோயை உண்டாக்கும் செயல்பாட்டிற்கு வலுவான ஆதாரம் இல்லை.[22] இருப்பினும், இந்த இரசாயனத்துடன் வேலை செய்யும் சில தொழில்கள் சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.[22]

தயாரிப்பும் வினைகளும்

தொகு

தயாரிப்பு

தொகு

ஐதரசன் பெராக்சைடு மூலம் வளையபெண்டீனை வினையூக்க ஆக்சிசனேற்றம் செய்து தொழில்துறையில் குளுட்டரால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு தங்சுடிக் அமிலம் சார்ந்த பல்லினபல்லாக்சோ அமிலம் என்ற அமில வினையூக்கிகளின் முன்னிலையில் இவ்வினை நிறைவடைகிறது. [23][24] இந்த வினை அடிப்படையில் ஓசோனாற்பகுப்பு வினையைப் பிரதிபலிக்கிறது. மாற்றாக, அக்ரோலின் மற்றும் வினைல் ஈதர்களின் டையீல்சு -ஆல்டர் வினையின் மூலமாகவும் அதைத் தொடர்ந்து நீராற்பகுப்பு வினை மூலமாகவும் இதை உருவாக்கலாம்.[25]

 

வினைகள்

தொகு

மற்ற ஈரால்டிகைடுகளைப் போலவே (எ.கா. கிளையாக்சால்) மற்றும் எளிய ஆல்டிகைடுகள் (எ.கா. பார்மால்டிகைடு), குளுட்டரால்டிகைடும் நீர் கரைசலில் நீரேற்றுகள், ஓரிடத்த-டயோல்களை உருவாக்குகின்றன. இந்த டையோல்கள் வளைய அரையசிட்டால்களுடன் சமநிலைப்படுத்துகின்றன.[26][25][7] ஒற்றைப்படி குளுட்டரால்டிகைடு ஆல்டால் ஒடுக்கம் மற்றும் மைக்கேல் வினைகளால் ஆல்ஃபா, பீட்டா-நிறைவுறா பாலி-குளுட்டரால்டிகைடு மற்றும் தொடர்புடைய சில்படிமங்களை உருவாக்கும். இந்த வினை கார pH மதிப்புகளில் நிகழ்கிறது.[27]

 

குளுட்டரால்டிகைடின் உயிர்க்கொல்லி மற்றும் நிலைநிறுத்தி பண்புகளை விளக்குவதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[19] பல ஆல்டிகைடுகளைப் போலவே, இது முதன்மை அமீன்கள் மற்றும் தயோல் குழுக்களுடன் வினைபுரிகிறது. புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் பாலிமெரிக் பொருட்களில் இவை பொதுவான செயல்பாட்டுக் குழுக்களாகும். இரு-செயல்பாட்டு பண்பை பெற்றிருப்பதால் குளுட்டரால்டிகைடு ஒரு குறுக்கு இணைப்பியாகும். பெறுமூலக்கூற்று கட்டமைப்புகளை இது கடினமாக்குகிறது மற்றும் அவற்றின் வினைத்திறனையும் குறைக்கிறது.[28]

 
முதன்மை அமீன்கள் மற்றும் குளுட்டரால்டிகைடு கார்பனைல்களில் இருந்து இமைன் உருவாக்கம், நிர்ணயம் மற்றும் உயிர்க்கொல்லி பண்புகள் அடிப்படையாகும்.

குளுட்டரால்டிகைடில் உள்ள ஆல்டிகைடு குழுக்கள் லைசின் மற்றும் நியூக்ளிக் அமிலங்களின் அமீன்களுடன் வினைபுரிவதன் மூலம் இமைன்களை உருவாக்குவதற்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. குளுட்டரால்டிகைடின் ளின் ஆல்டால் ஒடுக்கத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களும் இமைன் உருவாக்கத்திற்கு உட்படுகின்றன.[27]


மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 907. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. 2.0 2.1 2.2 2.3 "CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards -Glutaraldehyde". www.cdc.gov. Archived from the original on 13 January 2017. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 World Health Organization (2009). Stuart MC, Kouimtzi M, Hill SR (eds.). WHO Model Formulary 2008. World Health Organization. pp. 323, 325. hdl:10665/44053. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789241547659.
  4. 4.0 4.1 4.2 4.3 British national formulary : BNF 69 (69 ed.). British Medical Association. 2015. p. 825. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857111562.
  5. Bonewit-West, Kathy (2015). Clinical Procedures for Medical Assistants (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781455776610. Archived from the original on 6 October 2022. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.
  6. Sullivan, John Burke; Krieger, Gary R. (2001). Clinical Environmental Health and Toxic Exposures (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. p. 601. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780683080278. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  7. 7.0 7.1 Srinivasan, Mythily; Sedmak, Daniel; Jewell, Scott (2002). "Effect of Fixatives and Tissue Processing on the Content and Integrity of Nucleic Acids". The American Journal of Pathology 161 (6): 1961–1971. doi:10.1016/S0002-9440(10)64472-0. பப்மெட்:12466110. 
  8. Vakili, Mohammadtaghi; Rafatullah, Mohd; Salamatinia, Babak; Abdullah, Ahmad Zuhairi; Ibrahim, Mahamad Hakimi; Tan, Kok Bing; Gholami, Zahra; Amouzgar, Parisa (2014). "Application of chitosan and its derivatives as adsorbents for dye removal from water and wastewater: A review". Carbohydrate Polymers 113: 115–130. doi:10.1016/j.carbpol.2014.07.007. பப்மெட்:25256466. 
  9. Karnovsky, M.J. (1965). A formaldehyde-glutaraldehyde fixative of high osmolality for use in electron microscopy. Journal of Cell Biology 27: 137A–138A
  10. Boostrix prescribing information பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2011 at the வந்தவழி இயந்திரம், ©2009, GlaxoSmithKline
  11. Al-Muhanna, Muhanna K.; Anwar, Naushad; Hasnain, Md Saquib; Nayak, Amit Kumar (2023-01-01), Nayak, Amit Kumar; Hasnain, Md Saquib (eds.), "Chapter 1 - Synthesis of tailor-made polysaccharides: An overview", Tailor-Made Polysaccharides in Drug Delivery, Academic Press, pp. 1–27, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-12-821286-8.00013-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-821286-8, பார்க்கப்பட்ட நாள் 2024-06-03
  12. Kozlovskaya, V.; Kharlampieva, E.; Sukhishvili, S.A. (2017), "1.25 Polymer Films Using LbL Self-Assembly", Comprehensive Biomaterials II, Elsevier, pp. 554–569, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-08-100691-7.00177-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-100692-4, பார்க்கப்பட்ட நாள் 2024-06-03
  13. Erisen, Deniz. E (23 September 2022), "A novel chitosan and polydopamine interlinked bioactive coating for metallic biomaterials", Journal of Materials Science: Materials in Medicine, Springer-Nature, 33 (10): 65, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s10856-022-06688-x, பன்னாட்டுத் தர தொடர் எண் 1573-4838, PMC 9499904, PMID 36138240
  14. Falck, Christian(1993-12-23). "Commissioning of long subsea pipelines - environmental aspects". {{{booktitle}}}.
  15. Bonewit-West, Kathy (2015). Clinical Procedures for Medical Assistants (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781455776610. Archived from the original on 23 September 2017.
  16. NHS Choices: Glutarol பரணிடப்பட்டது 5 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  17. Juhlin, L; Hansson, H (1968), "Topical glutaraldehyde for plantar hyperhidrosis", Archives of Dermatology, American Medical Association, 97 (3): 327–330, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1001/archderm.1968.01610090099017, பன்னாட்டுத் தர தொடர் எண் 0003-987X, PMID 5641337
  18. Antiquis, Avus (20 September 2017). "Glutaraldehyde Revisited". praquatics.com - Aquarium Forums By Hobbyists For Hobbyists. Archived from the original on 14 February 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
  19. 19.0 19.1 19.2 Fraise, Adam P.; Maillard, Jean-Yves; Sattar, Syed (2012). Russell, Hugo and Ayliffe's Principles and Practice of Disinfection, Preservation and Sterilization (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. Chapter 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118425862. Archived from the original on 23 September 2017.
  20. Pfafflin, James R.; Ziegler, Edward N. (2006). Encyclopedia of Environmental Science and Engineering: A-L (in ஆங்கிலம்). CRC Press. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849398438. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  21. Canadian Centre for Occupational Health and Safety (CCOHS) (a federal government site) > OSH Answers > Diseases, Disorders & Injuries > Asthma பரணிடப்பட்டது 27 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம் Document last updated on 8 February 2005
  22. 22.0 22.1 Toxicology and Carcinogenesis Studies of Glutaraldehyde பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  23. Chandler, Malcolm (15 April 2001). "Hydrogen Peroxide-Tungstic Acid". Encyclopedia of Reagents for Organic Synthesis: rh046. doi:10.1002/047084289X.rh046. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235. 
  24. Furukawa, Hiroshi; Nakamura, Teiji; Inagaki, Hiroyuki; Nishikawa, Eiichiro; Imai, Chihiro; Misono, Makoto (5 May 1988). "Oxidation of Cyclopentene with Hydrogen Peroxide Catalyzed by 12-Heteropoly Acids". Chemistry Letters 17 (5): 877–880. doi:10.1246/cl.1988.877. https://www.journal.csj.jp/doi/pdf/10.1246/cl.1988.877. 
  25. 25.0 25.1 Christian Kohlpaintner; Markus Schulte; Jürgen Falbe; Peter Lappe; Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_321.pub2
  26. Whipple Earl B.; Ruta Michael (1974). "Structure of Aqueous Glutaraldehyde". J. Org. Chem. 39 (12): 1666–1668. doi:10.1021/jo00925a015. 
  27. 27.0 27.1 Migneault, Isabelle; Dartiguenave, Catherine; Bertrand, Michel J.; Waldron, Karen C. (2004). "Glutaraldehyde: Behavior in aqueous solution, reaction with proteins, and application to enzyme crosslinking". BioTechniques 37 (5): 790–802. doi:10.2144/04375RV01. பப்மெட்:15560135. 
  28. H. Uhr; B. Mielke; O. Exner; K. R. Payne; E. Hill (2005), "Biocides", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_563.pub2

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுட்டரால்டிகைடு&oldid=4180029" இலிருந்து மீள்விக்கப்பட்டது