கூத்தனூர்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கூத்தனூர் (Koothanur) என்பது இந்தியா தீபகற்பத்தில், தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். திருவாரூரில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

கூத்தனூர்
புறநகர்
கூத்தனூர் is located in தமிழ் நாடு
கூத்தனூர்
கூத்தனூர்
ஆள்கூறுகள்: 10°55′53″N 79°38′51″E / 10.9315°N 79.6474°E / 10.9315; 79.6474
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
ஏற்றம்24.35 m (79.89 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்609503
தொலைபேசி குறியீடு+914366xxxxxx
அருகிலுள்ள ஊர்கள்பூந்தோட்டம், இஞ்சிகுடி, முடிகொண்டான்
மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி. தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிநன்னிலம்
மக்களவை உறுப்பினர்ம. செல்வராசு
சட்டமன்ற உறுப்பினர்ஆர். காமராஜ்

கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் (கூத்தனூர் சரசுவதி கோயில்) இங்குதான் உள்ளது. தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு அமைந்துள்ள ஒரே  கோயில் கூத்தனூரில் மட்டுமே  உள்ளது.[1] சரஸ்வதி கடவுள் கல்வித் தெய்வமாகக் கருதப்படுகிறார்; எனவே, இந்த தெய்வத்தை வணங்கினால் நல்லறிவைப்  பெறலாம் என்று நம்பப்படுகிறது.

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 24.35 மீட்டர் உயரத்தில், 10°55′53″N 79°38′51″E / 10.9315°N 79.6474°E / 10.9315; 79.6474 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கூத்தனூர் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.[1]

கூத்தனூர் வரலாறு தொகு

தமிழ் கவிஞரான ஒட்டக்கூத்தர் பிறப்பிடமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மலரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய திருவெறும்பூர் இருந்தாலும்,[2] கல்விக் கடவுளான சரசுவதிக்கு, தற்போதைய திருவாரூரில் உள்ள கூத்தனூர் பகுதியில் கோயில் எழுப்பினார்.[3] சோழ மன்னன் ராஜராஜ சோழன் இந்தக் கிராமத்தை  ஒட்டக்கூத்தரின் கவிதைகளுக்குப் பாிசாக வழங்கினாா் என நம்பப்படுகிறது. எனவே இந்த கிராமம் (கூத்தன் + ஊர் =) கூத்தனூர்   என்று அழைக்கப்படுகிறது. விஜயதசமி திருவிழா, இக்கோவிலில் நடை பெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

குறிப்புகள் தொகு

  1. "இந்தியாவில் உள்ள ஒரே கோயில்; சரஸ்வதிக்கு இப்படி ஒரு பூஜையா?". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  2. தினத்தந்தி (2017-04-14). "அந்தப்புரத்து ராணியும்.. ஒட்டக்கூத்தரின் பாட்டும்." www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  3. "Saraswathi Temple : Saraswathi Saraswathi Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. பக். 76. ISBN 81-7478-177-3, ISBN 978-81-7478-177-2. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தனூர்&oldid=3866542" இலிருந்து மீள்விக்கப்பட்டது