கோசலை இராச்சியம்

கோசல நாடு (Kosala Kingdom) அல்லது வெறுமனே கோசலை என்பது திரேதா யுகத்தின் புகழ்பெற்ற அரசனான, இராமரின் இராச்சியம் ஆகும். தற்போது உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் இருக்கும் அயோத்தி அதன் தலைநகராக இருந்தது. இராமரின் மகன்களான இலவன் மற்றும் குசன் இந்த இராச்சியத்தின் சில பகுதிகளைப் பெற்றிருந்தனர். அயோத்தியா என்ற நகரத்திலிருந்து இலவனும், குசாவதி என்ற நகரத்திலிருந்து குசனும் ஆட்சி செய்தனர். கோசலை மன்னர்களின் காலனி மத்திய பிரதேசத்தில் இருந்தது . இது தட்சிண கோசலை என்று அழைக்கப்பட்டது. இராமரின் தாய் கோசலை இந்த இராச்சியத்தைச் சேர்ந்தவர். இராமர் தனது செல்வாக்கை தெற்கு கடலில் அமைந்துள்ள இலங்கைத் தீவு இராச்சியம் வரை நீட்டித்திருந்தார். கிட்கிந்தை என்று அழைக்கப்படும் தென் இராச்சிய வனவாசிகளுடன் ( வானரம் ) நட்பு கொண்டிருந்தார்.

இராமரின் சகோதரர் பரதன், காந்தார இராச்சியத்தை கையகப்படுத்தி அங்கு தக்சசீலம் என்ற நகரத்தை நிறுவினார். பரதனின் தாயார் கைகேயியின் பூர்வீக இராச்சியமான கேகய இராச்சியத்திற்கு அருகில் காந்தாரம் அமைந்துள்ளது. இராமரின் இரண்டாவது சகோதரர் இலட்சுமணன் கங்கை நதிக்கு அருகில் இலட்சுமணபுரம் என்ற நகரத்தை நிறுவினார். இது இப்போது இலக்னோ என்று அழைக்கப்படுகிறது. அவர் வங்க இராச்சியத்தை காலனித்துவப்படுத்தி அங்கு சந்திரகாந்தம் என்ற நகரத்தை நிறுவினார். இராமரின் இளைய சகோதரர் சத்துருக்கன் மது எனின்ற காட்டை அழித்து மதுரா நகரத்தை ஸ்தாபித்தார். பின்னர் இது சூரசேன இராச்சியத்தின் தலைநகராக மாறியது.

நிசாதா நாட்டு மன்னர் நளனின் நண்பர் ரிதுபர்ணா கோசலையின் ஆட்சியாளராக இருந்தார். துவாபர யுகத்தின் போது கோசலையின் மற்றொரு ஆட்சியாளரான பிரிகத்பாலன் மகாபாரதப் போரில் பங்கேற்று அர்ச்சுனணி மகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டார்.

1880 ஆம் ஆண்டு விவரிக்கப்பட்ட ஒரு குறிப்பு, வரலாற்றுக்கு முந்தைய அவதத்தில் இராம இராச்சியத்தின் ஐந்து முக்கிய பிரிவுகளில் ஒன்று உத்தர கோசலை; இப்பகுதி பஹ்ரைச், கோண்டா, பஸ்தி மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட நவீன காக்ரா மாவட்டங்களுடன் தொடர்புடையதாக விவரிக்கப்பட்டது. [1]


மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசலை_இராச்சியம்&oldid=2976265" இலிருந்து மீள்விக்கப்பட்டது