சதானம் கே. அரிகுமரன்

சதானம் கே. அரிகுமரன் (Sadanam K. Harikumaran-அரிகுமார் என்றும் எழுதப்பட்டவர்) தென்னிந்தியாவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த பல்துறை கலைஞர் ஆவார். இவர் ஓவியம், சிற்பம் மற்றும் இலக்கியம் தவிர, இந்தியப் பாரம்பரிய நடனம் மற்றும் இசை ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக அறியப்பட்டவர்.[1]

இளமை

தொகு

அரிகுமாரன் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பாலக்காடு மாவட்டம் பேரூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை, கே. குமரன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காந்தி சேவா சதன் நிறுவனர் ஆவார். இவரது தாயார் சரோஜினி அம்மா, கேரள கலாமண்டலத்தின் நிறுவனர்களில் ஒருவரான கக்காட் கரணவப்பட்டின் மகள் ஆவார்.[2] இவர் சிறுவயதிலேயே கதகளியை கற்றுக்கொண்டார். ஆனால் இதற்கு இணையாகத் தனது முறையான கல்வியைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் கற்றார்.

தொழில்

தொகு

அரிகுமாரன் 1989 முதல் ஐந்து ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதனில் உள்ள விசுவபாரதி பல்கலைக்கழகத்தில் கதகளி பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில்தான் இவர் ஓவியம் மற்றும் சிற்பம் போன்றவற்றை நல்ல முறையில் செய்யத் தொடங்கினார்.[3] மீண்டும் கேரளாவில், இவர் சதானத்தில் இணைந்தபோதும் நெகிழி கலைகளில் தனது சோதனைகளைத் தொடர்ந்தார். பின்னர் இக்கலையின் முதன்மையானார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அரிகுமாரன் கதகளி ஆடைகளையும் (கொப்பு) சில சமயங்களில் புதுமையான முறையில் உருவாக்கினார். மேலும் இதன் ஒப்பனையையும் (சுட்டி) பரிசோதித்து வருகிறார். கதகளி பற்றிய கருத்தரங்குகளிலும் இவர் உரை நிகழ்த்துகிறார்.

2008ஆம் ஆண்டு வரை, இவர் காந்தி சேவா சதனின் (சதானம் கதகளி அகாதமி) முதன்மையானவர். இவர் அடிப்படையில் கதகளி நடிகர்-நடனக் கலைஞர், ஆனால் பாரம்பரிய நடனம்-நாடகத்திற்கான கதை நாடகங்களை எழுதுவதுடன் அதற்காகப் பாடல்களையும் பாடியுள்ளார். பத்மசிறீ கீழ்பாடம் குமரன் நாயர் இவரது முக்கிய கதகளி குரு.[4]

அரிகுமாரன் அனைத்திந்திய வானொலியில் சான்றளிக்கப்பட்ட கருநாடக இசைக்கலைஞர் ஆவார். மறைந்த பேராசிரியர் சி. எஸ். கிருஷ்ண ஐயரால் இந்தக் கலையில் முக்கியமாக வழிநடத்தப்பட்டவர். இவர் கேரளா முழுவதும் கருநாடக இசை நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடத்துகிறார். குருவாயூரில் செம்பை சங்கீதோல்சவம் ஒரு முக்கியமான இடம். இவர் சுமார் 50 பாடல்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் இப்பாடல்கள் மலையாளத்தில் அமைந்துள்ளது. இவர் கல்லூரி நாட்களில் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் (குரு: கலாமண்டலம் லீலாம்மா) ஆகியவற்றையும் நிகழ்த்தி வந்தார்.

அரிகுமாரன் 19 கதகளி கதை நாடகங்களை (அட்டகதைகள்) எழுதியுள்ளார். இவை சபமோசனம், கர்ணபர்வம், அபிமன்யு, மணிகண்டசரிதம், சாருதத்தம் (யூலியசு சீசரின் கதையை அடிப்படையாகக் கொண்டது), சித்ராங்கதா, புருவம்சோதயம், கத்ராவேயம், கர்ணபரித்யாகம், நமாமி சங்கரம், கார்த்தவீரர்ஜுன நிக்ரஹம், மாகாதேயம், சூர்பாணி, காளிகாளி மற்றும் இந்துக் காளி ஆகியவையும் இவர் எழுதிய நாடகங்களில் அடங்கும்.

2014-இல், கதகளி பிரிவில் கேரளச் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sadanam K. Harikumaran". Sadanamharikumaran.com. Archived from the original on 2009-04-30. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  2. CyberNet Communications Kerala. "Kathakali Artists - Sadanam. K. Harikumaran". Cyberkerala.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  3. "The Hindu : Metro Plus Kochi / Arts & Crafts : Heavily drawn from mythology and life". Hinduonnet.com. 2006-02-06. Archived from the original on 7 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  4. "Entertainment Thiruvananthapuram / Interview : Versatility his forte". தி இந்து. 2006-02-10. Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  5. "Kerala Sangeetha Nataka Akademi Award: Kathakali". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதானம்_கே._அரிகுமரன்&oldid=3920310" இலிருந்து மீள்விக்கப்பட்டது