சத்தியகலா
சத்தியகலா (Sathyakala) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகையாவார். இவர் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் முன்னணி நடிகையாக மலையாள படங்களில் நடித்த ஒரு நடிகையாவார்.[சான்று தேவை] இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கை
தொகுசத்தியகலா தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 1980ல் ஷாலினி எண்டே கூட்டுக்காரி படத்தின் வழியாக மலையாளத்தில் அறிமுகமானார். அப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு பல மலையாளத் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் மம்மூட்டியுடன் சரவர்ஷம் (1982) மற்றும் அமிர்தகீதம் (1982), போன்ற படங்களிலும், மோகன்லாலுடன் கலியமர்தனம் (1982), உய்யரங்களில் (1984) போன்ற படங்களிலும், பிரேம் நசீருடன் அக்ரோஷம் (1982) மற்றும் கரை புறண்ட ஜீவிதங்கள் (1980) போன்ற படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு திரையுலகை விட்டு விலகி சென்னையில் வாசிக்கத் தொடங்கினார்.
பகுதி திரைப்படவியல்
தொகுதமிழ்
தொகு- ஐம்பதிலும் ஆசை வரும் (1991)
- வரவு நல்ல உறவு (1990)
- எங்க வீட்டுத் தெய்வம் (1989)
- விதி (1984)
- வீட்டுக்கு ஒரு கண்ணகி (1984)
- பிள்ளையார் (1984)
- நிரபராதி (1984)
- சட்டம் (1983)
- தனிக்காட்டு ராஜா (1982)
- தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)
- விடியும் வரை காத்திரு (1981)
- லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
- வாடகை வீடு (1981)
- நெஞ்சில் ஒரு முல்லை (1981)
- பொற்காலம் (1980)
- துணிவே தோழன் (1980)
- தனிமரம் (1980)
- கருந்தேள் கண்ணாயிரம் (1972)