சபரிமலை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். [1]
சபரிமலை
Sabarimala ശബരിമല | |
---|---|
யாத்திரைத் தலம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி வட்டம் |
ஏற்றம் | 468 m (1,535 ft) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசிக் குறி | 0473 |
வாகனப் பதிவு | KL-03, KL-62 |
இணையதளம் | www |
சங்ககால வரலாறு
தொகுஇது சங்ககாலச் சேரர்களின் வழிபாட்டுத் தலம்.
வழிபாட்டு மரபு
தொகுஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.[2] உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் திசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- "மகர சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
புனிதப் பயணம்
தொகுபுனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர்.
பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன: முற்காலத்தில் "பெரிய பாதை" மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும் எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச் சென்றனர். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகியன போன்றும், இப்புனித யாத்திரையை மேற்கொள்ளும்போது ஏற்படகூடிய நிகழ்வுகளுக்காக பயணிகளைத் தயார்படுத்தும் முறையாக இவ்வழி முறைகள் உதவும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே விரும்புகின்றனர். இந்தப் பயணத்தின் முதல் பகுதி, எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா நதியைச் சேரும். 'திருவாபரண கோஷப் பயணம்' மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் தங்கிச் செல்ல வேண்டும். ஆனால் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய (நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும். ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக காணப்படுகின்றன.
நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது.[3]
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம்
தொகுதிருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்க இயலும். சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து வருகிறது.
கோவில் பிரசாதங்கள்
தொகுசபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.
ஹரிவராசனம்
தொகுஇரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு (உறக்கப்பாட்டு), ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும் (8 செய்யுள் பத்திகள்).
அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கீதம் இசைக்கப்படும்போது தரப்படும் மரியாதை, இப்பாடல் ஒலிபரப்பப்படும்போதும் தரப்படுகிறது.
நெய்யபிசேகம்
தொகுசபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் மூல விக்கிரகத்தின் மீது புரியப்படும் நெய்யபிசேகம் ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.
அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி
தொகுஇந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத மொழியில், தத் த்வம் அசி, அதன் பொருளானது "நீயும் ஒரு கடவுள்" என்பதற்கான ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று அழைக்கிறார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை இச்சொல் குறிக்கிறது. கண்டரரு மகேஸ்வரரு என்ற தழமொன் குடும்பத்தினரே தற்போது சபரிமலை கோவிலின் தலைமை பூசாரியாக (தந்திரி) இருப்பவர்.
சபரிமலைக்கு அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்
தொகு- நீலக்கல் கோவில், பத்தனம்திட்டா
- மலையாளப்புழா கோவில், பத்தனம்திட்டா
- ஆரன்முலா பார்த்தசாரதி கோவில்
- மகாதேவர் கோவில், செங்கன்னூர்
- ஸ்ரீவல்லபா கோவில், திருவல்லா
- கவியூர்ஆஞ்சநேயா கோவில், திருவல்லா
- செட்டிக்குளங்கரை தேவி கோவில், மாவேலிக்கரா
- மன்னார்சாலை கோவில், ஹரிப்பாடு
- சுப்பிரமணியர் கோவில், ஹரிப்பாடு
- சாக்குளத்துக்காவு கோவில், திருவல்லா
- கண்டியூர் மகாசிவர் கோவில், மாவேலிக்கரா
- சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கரா
- பதநிலம் பரப்பிரம்மா கோவில், நூரநாடு
மேற்கோள்கள்
தொகுஇவற்றையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- 360 டிகிரி கோணத்தில்சபரிமலை ஐயப்பன் கோயில் தினமலர்
- சபரிமலையின் அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-10-26 at the வந்தவழி இயந்திரம்
- அய்யப்ப சுவாமி - வரலாறு, வண்ணப்படங்கள், பாடல்கள், வழித்தடங்கள், காலண்டர், பூஜை பற்றிய தகவல்கள்