சமங்கன் மாகாணம்
சமங்கன் (Samangan (பாரசீக மொழி: سمنگان) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் நடுப்பகுதியில்,இந்து குஷ் மலைகளின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது 11,218 சதுர கிலோமீட்டர்கள் (4,331 sq mi) பரப்பளவு கொண்டதாக உள்ளது. இதன் மேற்கில் சர-போல் பொன் மாகாணமும், வடக்கில் பால்க் மாகாணமும், கிழக்கில் பாக்லான் மாகாணமும், தெற்கில் பாமியான் மாகாணமும் எல்லைகளாக உள்ளன. இங்கு பெரும்பான்மையான மக்களாக தாஜிக்குகள் உள்ளனர். என்றாலும் மாகாணத்தில் பாஷ்டோ மற்றும் பாரசீக மொழி பேசுபவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
சமங்கன்
Samangan سمنگان | |
---|---|
ஆப்கானித்தான் வரைபடத்தில் சமங்கன் உயர்நிலத்தின் இருப்பிடம் | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | சமங்கன் |
அரசு | |
• ஆளுநர் | முகம்மது ஹாஷிம் ஸேர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,262 km2 (4,348 sq mi) |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 3,68,800 |
• அடர்த்தி | 33/km2 (85/sq mi) |
நேர வலயம் | ஒசநே+04:30 (AST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-SAM |
முதன்மை மொழிகள் | பாரசீகம், உசுபேகியம், துருக்குமேனியம் |
சமங்கன் மாகாணமானது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 674 கிராமங்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை 368,800 ஆகும். மாகாணமானது பல இனத்தவர் வாழுவதாகவும், பெரும்பாலும் கிராமப்புற சமூகமாக உள்ளது. மாகாணத்தின் தலைநகராக சமங்கன் நகரம் உள்ளது.
வரலாறு
தொகுவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமங்கன் நகரமானது நன்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் குஷான பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற பௌத்த மையமாக விளங்கியது. இந்தக் காலகட்டத்தின் சாட்சியாக டக்ட்-இ-ரோஸ்டம் எனும் இடத்தில் ஒரு இடிபாடு இப்போது காணப்படுகிறது. இது நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ளது. இது பௌத்த சமய மையமாக பிரபலமாக இருந்த முற்காலத்தில் இங்கு அரேபியர்கள் மற்றும் மங்கோலியர்கள் வந்துள்ளனர். இடைக்காலகட்டத்தில் இங்கு வந்து வணிகர்கள் தங்கியதால் இந்த இடம் ஐபக் என்ற பெயரை அப்போது பெற்றது.
ஆப்கானிஸ்தான் பல்வேறு தொல்லியல் தளங்களாக பௌத்தர்கள் வாழ்ந்த குகைகளும், பாறைகளும் உள்ளன. இந்து குஷ்சின் வடக்கின் சமாங்கன் (ஹேபக்) அருகிலுள்ள தக் ஈ ரஸ்தம் என்பது மிக அற்புதமான தளங்களில் ஒன்றாகும். இது பாறைகளில் வெட்டி உருவாக்கப்பட்ட மடாலயத்துடன் கூடிய ஸ்தூபி வளாகமாகும். மேலும் பிற பௌத்த குகைகளானது ஜலாலாபாத் மற்றும் கஜினியின் தென்மேற்கில் உள்ள ஹமுய் குலா என்ற இடத்தில் காணப்படுகின்றன.[2]
மேலே குறிப்பிட்ட தக் ஈ ரஸ்தம் என அழைக்கப்படும் பௌத்த தளமானது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான பௌத்த கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியின் துவக்கக்கால கண்ணியாக உள்ளது.
இப்பகுதி ஹெப்தலைட்டுகளால் கைப்பற்றப்பட்டது, அதன்பின் சபாரித்துகளால் கைப்பற்றப்பட்டது இவர்கள் இஸ்லாத்தைக் கொண்டு வந்தனர். அதன்பிறகு சாமனித்துகளால் ஆளப்பட்ட இபபகுதியானது, 10 ஆம் நூற்றாண்டில் கஜினியர்களால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் கோரிட்களால் வெல்லப்பட்டனர். மங்கோலிய படையெடுப்புக்குப் பின்னர் இப்பகுதியை திமுறித்துகள் கைப்பற்றினார்.
16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாகாணத்தை புகாரின் கான்னேட்டுகள் ஆண்டனர். 1750ஆம் ஆண்டில் ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டு அதனால் இப்பகுதியானது புகாரின் முராத் பெக் என்பவரால் அகமது ஷா துரானிக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்பகுதி துராணியப் பேரரிசின் ஒரு பகுதியாக ஆனது. துராணியர்களைத் தொடர்ந்து இப்பகுதியானது பராக்ச்சாய் வம்சத்தால் ஆளப்பட்டது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலோ-ஆப்கானிய போர்களின்போது இப்பகுதி பிரித்தானியரால் தாக்கப்படவில்லை. 1980களில் நடந்த சோவியத்-ஆப்கானியப் போர் வரை சுமார் நூறு ஆண்டுகளுக்கு இப்பகுதி அமைதியாக இருந்தது.[சான்று தேவை]
அரசியலும், நிர்வாகமும்
தொகுமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் கௌருல்லா அனூஷ் ஆவார். இவருக்கு முன் பதவியில் இருந்த அமாயத்துல்லா என்னட்டுக்குப் பிறகு பதவிக்கு வந்தார். மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார்.
ஆப்கானிய பொருளாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் 2006 சனவரியில் மாகாண மேம்பாட்டுக் குழுவானது மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இக்குழுவானது அரசு துறைகள் வழியாக, மாகாண அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.
அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதியான அசரஃப் கனி அகமத்சய் மாகாண ஆளுநரான அப்துல் கரிக் காத்மத்தை 2018இல் பதவியில் இருந்து அகற்ற முயன்றார், ஆனால் அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இதன் அண்மை பால்க் மாகாண ஆளுநரான அத்தா முகம்மது நூரும் இவருடன் இணைந்து, அஷ்ரப் கானியின் விருப்பத்தை பகிரங்கமாக மறுத்துள்ளார்.[3]
மக்கள்வகைப்பாடு
தொகுசமங்கன் மாகாணத்தின் மக்கள் தொகை 468,800 ஆகும்.[1] இவர்களில் பெரும்பான்மையோர் கிராம்ப்புறங்களில் வாழ்பவர்களாவர். மாகாண மக்களில் 7% மட்டுமே நகரங்களில் வாழ்கின்றனர். ஆப்கானித்தானின் பெரும்பகுதியைப் போன்றே சமாங்கன் மாகாணத்தில் தாஜிக், உஸ்பெக்ஸ், பஷ்டூன், கசாரா, துருக்கியர் போன்ற இன்னக்குழுவினர் வாழ்கின்றனர. இவர்களுடன் சிறுபான்மையினராக அரேபியர்களும் மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[4] மாகாணத்தில் சுமார் 72.5% பேர் பாரசீக மொழி பேசுகின்றனர். மாகாண மக்கள்தொகையில் 70% தாஜிக் மக்களாவர்.[5] மற்றும் 22.1% மக்கள் உஸ்பெகியை தாய்மொழியாக கொண்டுள்ளனர் பேசுகின்றனர். பாஷ்டுன்கள் தங்கள் தாய் மொழியாக பஷ்டூன் மொழியைக் கொண்டுள்ளனர். அனைத்து மக்களும் இஸ்லாமை பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் சுன்னி இசுலாமியர்களும், சிறுபான்மையினராக ஷியாக்களும் உள்ளனர்.
கல்வி
தொகுமாகாணத்தின் மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 19% என்று இருந்தது. 2011 இல் இது 27% என குறைந்துள்ளது..
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Settled Population of Samangan province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
- ↑ The Afghans By Willem Vogelsang Edition: illustrated Published by Wiley-Blackwell, 2002 Page 157
- ↑ "Second Afghan governor defies President Ghani". Reuters. 18 February 2018. https://www.reuters.com/article/us-afghanistan-governor/second-afghan-governor-defies-president-ghani-idUSKCN1G20GK. பார்த்த நாள்: 2018-02-18.
- ↑ "Balkh Province". Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.
- ↑ http://www.nps.edu/Programs/CCS/Samangan/Samangan_Executive_Summary1.pdf