சாசபை மான்

பாலூட்டி துணை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Damaliscus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

சாசபை மான் (common tsessebe அல்லது sassaby ) என்பது டமலிஸ்கஸ் லுனாடஸின் தெற்கு, துணையினம் என்று பரிந்துரைக்கப்பட்ட மறிமான் ஆகும். இருப்பினும் சில ஆய்வாளர்கள் இதை ஒரு தனி இனமாக அங்கீகரித்துள்ளனர். இது பங்வேலு செசபி உடன் மிக நெருங்கிய தொடர்புடையது, சில சமயங்களில் ஒரு தனி இனமாகவும் கருதுகின்றனர்.[2][3] அங்கோலா, சாம்பியா, நமீபியா, போட்சுவானா, சிம்பாப்வே, எசுவாத்தினி (முன்னர் ஸ்வாசிலாந்து), தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சாசபை மான்கள் காணப்படுகின்றன.[2][4]

சாசபை மான்
Tsessebe in Botswana
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Damaliscus
துணைப்பேரினம்:
இனம்:
துணையினம்:
முச்சொற் பெயரீடு
Damaliscus lunatus lunatus
(Burchell, 1824)
Subspecies of Damaliscus lunatus

சாசபை மான் ஆப்பிரிக்காவில் உள்ள அதிவேக மறிமான்களில் ஒன்றாகும் [5] இது மணிக்கு 90 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

விளக்கம் தொகு

 
தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் நெருக்கமான காட்சி

வளர்ந்த சாசபை மான்கள் 150 முதல் 230 செ.மீ. வரை இருக்கும். இவை மிகப் பெரிய விலங்குகளாகும், சராசரியாக ஆண் மான்களின் எடை 137 கிலோ மற்றும் பெண் மான்களின் எடை 120 கிலோ இருக்கும்.[6] இவற்றின் கொம்புகள் பெண் மான்களுக்கு 37 செமீட்டரும், ஆண் மான்களுக்கு 40 செமீ வரையும் இருக்கும். ஆண் மான்களின் கொம்பின் அளவு தன் பிராந்தியத்தை பாதுகாத்தில், பெண் மானை ஈர்த்தல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.[6] இவற்றின் உடல் கசுகொட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை குதிரை முகத்தைப் போன்ற நீண்ட முகம் கொண்டவை. இவற்றின் முகத்தின் முன்பக்கமும், வால் முடிகளும் கருப்பாக இருக்கும். முன்கால் மற்றும் தொடை போன்றவை சாம்பல் அல்லது நீலம் கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் பின்னங்கால்கள் பழுப்பு-மஞ்சள் முதல் மஞ்சள் நிறமாகவும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். பொதுவாக காடுகளில், சாசபைகள் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆனால் மிகுதியான வேட்டை மற்றும் வாழிட அழிப்பு காரணமாக சில பகுதிகளில், இவற்றின் சராசரி ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துள்ளது.

நடத்தை தொகு

சாசபை மான்கள் சமூக விலங்குகளாகும். பெண் மான்கள் தங்கள் குட்டிகளுடன் ஆறு முதல் 10 வரையிலான உருப்படிகளுடன் ஒரு மந்தையாக இருக்கின்றன. ஆண் மான்களுக்கு ஒரு வயது ஆன பிறகு, அவை மந்தையிலிருந்து வெளியேறுகின்றன. பின்னர் அவை 30 இளம் காளைகள் வரையிலான மான்கள் கொண்ட ஒரு மந்தையாக உருவாக்குகின்றன. வயது வந்த கிடாக்கள் இளம் கிடாக்களின் அதே அளவான மந்தைகளாக இருக்கின்றன.[7] இனப்பெருக்க காலத்தில் சாசபை ஆண் மான் தனக்கென ஒரு எல்லையை வகுத்து பல பெண் மான்களுடன் சேர்ந்து வாழும். ஆண் மான்கள் சில குறிப்பிட்ட நடத்தைகள் வழியாக தன் பிரதேசத்தை அறிவிக்கிறது. தன் முகத்தை செடி கொடிகளில் தேய்த்தும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் சாணம் போட்டும் எலையை நிர்ணயித்துக் கொள்ளும்.

உணவு மற்றும் வாழ்விடம் தொகு

சாசபை மான்கள் முதன்மையாக புல்வெளிகள், திறந்த சமவெளிகள் , சிறிய மரங்கள் கொண்ட சவன்னாக்கள் ஆகியவற்றில் மேய்ந்து வரும் தாவர உண்ணியாகும்.[8] இவை சரிவான மேட்டு நிலங்களிலும், கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டடரைவிட குறைந்த சமதள நிலப்பகுமிகளிலும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. செரெங்கேட்டியில் காணப்படும் சாசபை மான்கள் வழக்கமாக காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 4:00 மணிக்குப் பின்னரும் மேயும். உணவளிக்கும் முன்னும் பின்னும் உள்ள நேரதில் ஓய்வு எடுத்து செரிமானம் செய்தல் அல்லது நீர் அருந்துதல் ஆகியவற்றை மேற்கொள்கி்றன. சாசபை மான்கள் ஒரு சாத்தியமான நீர் ஆதாரத்தை அடைய 5 கிமீ வரை பயணிக்கக் கூடியன.

இனப்பெருக்கம் தொகு

 
போட்ஸ்வானாவில் சாசபை மான்கள்
 
தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் ஒரு இளம் மான்

சாசபை பெண் மான்கள் ஆண்டுக்கு ஒரு குட்டி என்ற விகிதத்தில் இனப்பெருக்கம் செய்கிறது.[9] குட்டிகள் இரண்டு முதல் மூன்றரை ஆண்டுகளில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு, சாசபை மானின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள் இருக்கும். ஆண் மான்கள் பெண் மான்களுக்காக சேர்க்கைத் தொடங்கும் காலம், பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கி மார்ச் வரை ஆகும்.[7]

பயன்கள் தொகு

2003 இன் 57 ஆம் ஆண்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சட்டம் 55( [10] ) (b) இன் பிரிவு 55(2) (b) இன் கீழ் வேட்டை விளையாட்டுக்காக அதிகப்படியாக உள்ள சாசபை மான்களை தென்னாப்பிரிக்க தேசிய பூங்காக்களில் இருந்து வாங்கலாம்.

சட்டப்பூர்வமாக, ஜாம்பியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சில விளையாட்டு மேலாண்மை நிறுவனங்களிலும், வேட்டை விளையாட்டு பண்ணைகள் போன்ற இடங்களில், சாசபை மானின் தலையை அலங்காரப் பொருளாக பயன்படுத்த வேட்டையாட அனுமதி உள்ளது.[11][12]

தென்னாப்பிரிக்காவில் முந்தைய காலத்தில் (1840) கோபோ என்றழைக்கப்படும் ஒரு ஆடையை உருவாக்குவதற்கு சாசபை மான்களுக்கு அதிக தேவை இருந்தது. அந்த ஆடையில் மானின் வால் கழுத்தின் பின்பகுதியில், குதிரைவால் கொண்டை போல் அமைந்திருக்கும்.[13]

குறிப்புகள் தொகு

  1. IUCN SSC Antelope Specialist Group (7 January 2016). "Topi (Damaliscus lunatus)". செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
  2. 2.0 2.1 Damaliscus lunatus, MSW3
  3. Cotterill, Fenton Peter David (January 2003). "Insights into the taxonomy of tsessebe antelopes, Damaliscus lunatus (Bovidae: Alcelaphini) in south-central Africa: with the description of a new evolutionary species". Durban Museum Novitates 28: 11–30. https://www.researchgate.net/publication/236108885. பார்த்த நாள்: 18 April 2021. 
  4. Dorgeloh, Werner G. (2006). "Habitat Suitability for tsessebe Damaliscus lunatus lunatus". African Journal of Ecology 44 (3): 329–336. doi:10.1111/j.1365-2028.2006.00654.x. 
  5. "Tsessebe | Botswana Wildlife Guide". www.botswana.co.za. பார்க்கப்பட்ட நாள் 2017-10-28.
  6. 6.0 6.1 Bro-Jorgensen, J (2007). "The Intensity of Sexual Selection Predicts Weapon Size in Male Bovids". Evolution 61 (6): 1316–1326. doi:10.1111/j.1558-5646.2007.00111.x. பப்மெட்:17542842. 
  7. 7.0 7.1 Anonymous. "Tsessebe". Kruger National Park. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  8. Bro-Jorgensen, J (2003). "The Significance of Hotspots to Lekking Topi Antelopes (Damaliscus lunatus).". Behavioral Ecology and Sociobiology 53 (5): 324–331. doi:10.1007/s00265-002-0573-0. https://www.liverpool.ac.uk/mbe/pdf/03_Bro-Jorgensen_BES.pdf. பார்த்த நாள்: 2017-12-11. 
  9. . 
  10. South African National Parks(2016). "17/3/1/1/1 Kimberley Wildlife Sales 2016 –KWS-007-2016 Offer to Purchase". செய்திக் குறிப்பு.
  11. Watson, Bruce; Schultz, Dawn (2021). "Tsessebe Hunting". Bruce Watson Safaris. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
  12. "Tsessebe hunting". Book Your Hunt. 2021. பார்க்கப்பட்ட நாள் 27 April 2021.
  13. Sclater, Philip Lutley; Thomas, Oldfield; Wolf, Joseph (January 1895). The Book of Antelopes. 1. London: R.H. Porter. பக். 86. doi:10.5962/bhl.title.65969. இணையக் கணினி நூலக மையம்:1236807. https://www.biodiversitylibrary.org/page/42162419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசபை_மான்&oldid=3929673" இலிருந்து மீள்விக்கப்பட்டது