சாமாகுரி ஏரி

சாமாகுரி ஏரி (Samaguri Beel)(போக்கி தீர்த்தம் அல்லது பறவை யாத்திரை தலம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அசாமின் நகாமோ மாவட்டத்தில் நகோன் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு எருது-வில் வடிவ (யு- வடிவ) ஈரநிலம் மற்றும் ஏரியாகும். இந்த பீல் பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. கொலோங் ஆற்றின் கைவிடப்பட்ட பாதையால் இந்த ஏரி உருவாகிறது.

சாமாகுரி ஏரி
Pokhi Tirtha (Bird Pilgrimage)
ஏரி மீது கம்பிவடப் பயணம்
ஏரி மீது கம்பிவடப் பயணம்
அசாமில் ஏரி அமைவிடம்
அசாமில் ஏரி அமைவிடம்
சாமாகுரி ஏரி
அசாமில் ஏரி அமைவிடம்
அசாமில் ஏரி அமைவிடம்
சாமாகுரி ஏரி
அமைவிடம்சாமகுரி, நகோன், நகாமோ மாவட்டம், அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°25′25.4″N 92°51′39.7″E / 26.423722°N 92.861028°E / 26.423722; 92.861028
பூர்வீக பெயர்চামগুৰি বিল (அசாமிய மொழி)

சொற்பிறப்பியல்

தொகு

சமகுரி ஏரி என்பது போக்கி தீர்த்தம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. போக்கி தீர்த்தம் என்பது பறவைகள் யாத்திரைக்கான அசாமியச் சொல். புலம்பெயர்ந்த பறவைகள் குளிர்காலத்தில் தங்கும் போது இந்த ஏரியைப் பயன்படுத்துகின்றன.[1]

பறவைகள்

தொகு

வலசைப்போகும் பறவை சிற்றினங்கள் குளிர்காலத்தில் சமகுரிக்கு வருகை தருகின்றன. சிறிய சீழ்க்கைக்சிரவி, சீழ்க்கைச்சிரவி, பெர்ருஜினஸ் போச்சார்ட், மீசை ஆலா, குள்ளத்டாரா, செங்குருகு, சாம்பல் தலை ஆள்காட்டி போன்றவை இந்த ஏரிக்கு வருகை தரும் பறவைகள் ஆகும். இந்த ஏரியில் வசிக்கும் பறவைகளாகத் தாமிர இறக்கை இலைக்கோழி, குளத்துக் கொக்கு, பாம்புத்தாரா, புபுல்கசு, வெந்தொண்டை மீன்கொத்தி, சிரல், சாம்பல் தலை தாழைக்கோழி, தாழைக் கோழி, கம்புள் கோழி, சின்ன நீர்க்காகம், விரால் அடிப்பான்,நத்தை குத்தி நாரை உள்ளன.[2]

மேலும் பார்க்கவும்

தொகு

அசாம் ஏரிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Places of Tourist interest in Nagaon" (in ஆங்கிலம்). Archived from the original on 13 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"Places of Tourist interest in Nagaon" பரணிடப்பட்டது 2019-08-13 at the வந்தவழி இயந்திரம். Nagaon District website. Retrieved 28 November 2020.
  2. "Water theme park in bird paradise - Samaguri Beel set to become tourism centrepiece of Nagaon" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமாகுரி_ஏரி&oldid=4108516" இலிருந்து மீள்விக்கப்பட்டது