சிங் அரசமரபு
சிங் அரசமரபு (Qing Dynasty), சீன மொழி: 清朝 சிங் சாவ்) அல்லது சிங் பேரரசு (大清 டா சிங்) என்பது, மங்கோலியர்களின் யுவான் அரசமரபுக்கு பின்னர் சீனாவை ஆண்ட இறுதி சீன அரச மரபு ஆகும். 1644 தொடக்கம் 1912 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ்அரசமரபுபை மஞ்சு அரசமரபு எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய வடகிழக்குச் சீனாவைச் (மஞ்சூரியா) சேர்ந்த மாஞ்சு என்ற துங்குசிய இனக்குழுவான நுர்ஹாசியால் நிறுவப்பட்டது. 1644 இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் 1616 இல் உருவாகி 1636 இல் சிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1644 இல் இந்த அரசமரபு பெய்ஜிங்கைக் கைப்பற்றியது. 1646 ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது. 19-ஆம் நூற்றாண்டில் சீனப் பேரரசுக்கு எதிராக அபினிப் போர்கள் பிரித்தானியப் பேரரசு நடைபெற்றது. நாஞ்சிங் உடன்படிக்கையின் படி, போர் ஈட்டுத்தொகையாக சீனப் பேரரசு ஆங்காங் தீவை பிரித்தானியர்களுக்கு வழங்கியது.[1][2][3]
சீனாவின் சிங் பேரரசு 大清 சிங் வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1644–1912 | |||||||||||
நாட்டுப்பண்: கொங் ஜினூ (1911) | |||||||||||
நிலை | பேரரசு | ||||||||||
தலைநகரம் | ஷெங்ஜிங் (1636–1644) பெய்ஜிங் (1644–1912) | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சீனம் மாஞ்சு மங்கோலியம் திபெத்திய மொழி துருக்கிய மொழி | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பேரரசர் | |||||||||||
• 1626-1643 | ஹுவாங் தாய்ஜி | ||||||||||
• 1908-1912 | சுவாந்தோங் பேரரசர் | ||||||||||
முதல் அமைச்சர் | |||||||||||
• 1911 | யிக்குவாங் | ||||||||||
• 1911-1912 | யுவான் ஷிக்காய் | ||||||||||
வரலாறு | |||||||||||
• பிந்திய ஜின் நிறுவப்பட்டது | 1616 | ||||||||||
• "பிந்திய ஜின்" இலிருந்து "கிங்" ஆகப் பெயர் மாற்றம் | 1644 1644 | ||||||||||
• பெய்ஜிங் கைப்பற்றப்பட்டது | ஜூன் 6, 1644 | ||||||||||
பெப்ரவரி 12, 1912 1912 | |||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1740 | 140,000,000 | ||||||||||
• 1776 | 311,500,000 | ||||||||||
• 1790 | 300,000,000 | ||||||||||
• 1812 | 360,000,000 | ||||||||||
• 1820 | 383,100,000 | ||||||||||
நாணயம் | சீன யுவான் | ||||||||||
|
சீன வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பண்டைய | |||||||
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும் | |||||||
சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
மேற்கு சவு | |||||||
கிழக்கு சவு | |||||||
இலையுதிர் காலமும் வசந்த காலமும் | |||||||
போரிடும் நாடுகள் காலம் | |||||||
பேரரசு | |||||||
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
மேற்கு ஆன் | |||||||
ஜின் அரசமரபு | |||||||
கிழக்கு ஆன் | |||||||
மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
வேய்i, சூ & வூ | |||||||
யின் அரசமரபு 265–420 | |||||||
மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
கிழக்கு யின் | |||||||
வடக்கு & தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
சுயி அரசமரபு 581–618 | |||||||
தாங் அரசமரபு 618–907 | |||||||
( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
சொங் அரசமரபு 960–1279 |
|||||||
வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
மிங் அரசமரபு 1368–1644 | |||||||
சிங் அரசமரபு 1644–1911 | |||||||
தற்காலம் | |||||||
முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
தொடர்புடைய கட்டுரைகள்
| |||||||
இதன் ஆட்சிக்காலத்தில் சிங் அரசமரபு சீனக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து விட்டது. இதன் படைபலம் 1800 களில் பெரிதும் குறைந்துவிட்டதுடன், வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், போர்த் தோல்விகள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின் சிங் வம்சம் சரியத் தொடங்கியது. சின்ஹாய்ப் புரட்சியைத் தொடர்ந்து, பேரரசர் புயியின் சார்பில் பேரரசி டொவேஜர் லோங்யு ஆட்சி உரிமையைக் கைவிட்டபோது சிங் அரசமரபு முடிவுக்கு வந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ritual Music in the Court and Rulership of the Qing Dynasty (1644–1911)" (p. 136): "[1636] was the start of the Qing dynasty, although historians usually date the Qing dynasty started in 1644 when the Manchus conquered Beijing and north China."
- ↑ Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 500. doi:10.1111/0020-8833.00053. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-8833. https://escholarship.org/content/qt3cn68807/qt3cn68807.pdf. பார்த்த நாள்: 2020-07-24.
- ↑ 王堅強, 陳家華, 王永中 (2018). 歷史與時事學法指導. 寧波出版社. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787552632859.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)