சித்தேசுவர் வர்மா

இந்திய மொழியியலாளர்

சித்தேஷ்வர் வர்மா (Siddheshwar Varma) (1887-1985) ஓர் இந்திய மொழியியலாளரும், ஒலியியலிலும், இலக்கணத்திலும் அறிஞராக இருந்தார். 30க்கும் மேற்பட்ட மொழிகளைப் பற்றிய அறிவுக்கு பெயர் பெற்றவர்.[1] இவர் இந்தியாவிற்கான சர்வதேச ஒழுக்கக் கல்வி காங்கிரசின் செயலாளராகவும், (1923) த பலேசி டையலாக்ட்,[2] கோஸின் சொற்களஞ்சியம்: ஜம்மு-காஷ்மீரின் வடமேற்கு இமயமலை பேச்சுவழக்கு,[3] சித்த-பாரதம்; இந்தியவியலின் ஜெபமாலை[4] ,27-வடமேற்கு இமயமலை கிளைமொழிகளின் பஹாரி அகராதி[5] போன்ற புத்தகங்களை எழுதியவராகவும் இருந்தார். இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[6]

சித்தேசுவர் வர்மா
பிறப்பு(1887-11-03)3 நவம்பர் 1887
இராவல்பிண்டி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 ஆகத்து 1985(1985-08-17) (அகவை 97)
தில்லி,இந்தியா
மற்ற பெயர்கள்பிண்டிதாசு
பணிமொழியியல்
ஒலியியல் (மொழியியல்)
எழுத்தாளர்
அறிஞர்
அறியப்படுவதுமொழியியல்
பெற்றோர்இராம்தாஸ் நந்தா
ஜமுனா தேவி
விருதுகள்பத்ம பூசண்
குடியரசுத் தலைவர் கௌரவம்
ஜம்மு காஷ்மீர் அரசு அங்கி கௌரவம்

டோக்ரியை ஒரு தொனி நிலையிலிருந்து பிரதான மொழியாக உயர்த்த உதவிய வர்மா, 1985 ஆகஸ்ட் 17 அன்று தனது 97 வயதில் இறந்தார்.[7]

விருதுகளும் கௌரவங்களும் தொகு

இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதுக்கு 1957 குடியரசு தின கௌரவப் பட்டியலில் இவரைச் சேர்த்து பத்ம பூசன் விருது வழங்கி இவரை இந்திய அரசு கௌரவித்தது.[6] இந்தியவியலுக்கு இவர் செய்த பங்களிப்புகள் இவருக்கு 1967ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது. பஞ்சாபி பல்கலைக்கழகம் அதே ஆண்டில் இவருக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கியது. இவர் 1982 ஆம் ஆண்டில் ஜம்மு பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.[1] ஜம்மு-காஷ்மீர் அரசால் இவருக்கு ஒரு அங்கி மரியாதை வழங்கப்பட்டது.[7] விசுவேசுவரானந்த் விசுவ பந்து சமசுகிருத தொழில்நுட்ப நிறுவனமும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் ஆய்வு மையமும், 1978 ஆம் ஆண்டில் "சித்த பாரதி" என்ற இரண்டு தொகுதி படைப்புகளை இவரது நினைவாக வெளியிட்டது.[8]

இதையும் காண்க தொகு

சத்ய விரத சாத்திரி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "A forgotten scholar of world repute". Daily Excelsior. 30 June 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  2. The Bhalesī dialect. Royal Asiatic Society of Bengal. 1948. https://archive.org/details/dli.ernet.449353. 
  3. A Glossary of the Khāsī : a north-western Himalayan dialect of Jammu and Kashmir. Vishveshvaranand Vishva Bandhu Institute of Sanskrit and Indological Studies. 
  4. Siddha-Bhāratī; The rosary of Indology. V.V.R. Institute. 
  5. Pahari dictionary of 27-north-western Himalayan dialects. Vishveshvaranand Vishva Bandhu Institute of Sanskrit and Indological Studies. http://www.dkagencies.com/doc/from/1063/to/1123/bkId/DK645523321920864944986521371/details.html. 
  6. 6.0 6.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  7. 7.0 7.1 Vishva Bandhu (1950). Dr. Siddheshwar Varma A Sketch of his Life & Work. Vishwesharanand Vedic Research Institute. பக். 22. http://www.panjabdigilib.org/webuser/searches/displayPageContent.jsp?ID=41414&page=7&CategoryID=12&Searched=W3GX. 
  8. Doctor Siddheshwar Varma felicitation volume. Vishveshvaranand Vishva Bandhu Institute of Sanskrit and Indological Studies, Panjab University. 1978. https://books.google.com/books?id=1cRjAAAAMAAJ. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேசுவர்_வர்மா&oldid=3580861" இலிருந்து மீள்விக்கப்பட்டது