சித்வான் சமவெளி
சித்வான் சமவெளி (Chitwan Valley) (நேபாளி: चितवन उपत्यका தெற்கு நேபாளத்தின் உள் தெராய் பகுதியில், இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது. இச்சமவெளியின் சித்வான் தேசியப் பூங்கா நேபாளத்தின் பத்து உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.[1] சித்வான் சமவெளி, நாராயணி மண்டலத்தின் மக்வான்பூர் மாவட்டம், நவல்பராசி மாவட்டம் மற்றும் சித்வன் மாவட்டம், பரத்பூர் மாவட்டம் என நான்கு மாவட்டங்களைக் கொண்டது. நேபாளத்தின் பல்லுயிர் மண்டலமாக விளங்கும் சித்வான் சமவெளி, 150 கிலோ மீட்டர் நீளமும், 30 - 48 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.
இச்சமவெளியின் கிழக்குப் பகுதியில் ஹெதௌதா மற்றும் ரத்தினாகர் நகரங்களும், சமவெளியின் மையப் பகுதியில் பரத்பூர், ராயணன்கர் நகரங்களும் உள்ளது.
இமயமலையின் மகாபாரத மலைத்தொடரில் உற்பத்தியாகும் கிழக்கு ரப்தி ஆறு, சித்வான் சமவெளியில் கிழக்கு ரப்தி ஆறு கிழக்கு மேற்காக பாய்கிறது. பின்னர் நாராயணி ஆறு எனப்படும் கண்டகி ஆற்றுடன் கலக்கிறது.[2]
கிழக்கு ரப்தி ஆறு சித்வான் சமவெளியின் ஹெதௌதா நகரத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் மேற்கில் திரும்பி சமவெளியின் மையப் பகுதியை முழுமையாக நனைக்கிறது. பின்னர் கிழக்கு ரப்தி ஆறு, ஹெதௌதா நகரத்திற்கு மேற்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்வான் தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லையை சந்திக்கிறது. பின்னர் எழுபது கிலோ மீட்டர் தொலைவிற்கு பாயும் கிழக்கு ரப்தி ஆறு, நாராயணி ஆறு எனப்படும் இந்தியாவின் கண்டகி ஆற்றுடன் கலக்கிறது.
நிர்வாகம்
தொகுசித்வான் சமவெளி நேபாளத்தின் நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அவைகள்: மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள லும்பினி மண்டலத்தின் நவல்பராசி மாவட்டம், சித்வன் மாவட்டம் மற்றும் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள நாராயணி மண்டலத்தின் மக்வான்பூர் மாவட்டம் ஆகும்.
வரலாறு
தொகுபதினெட்டாம் நூற்றாண்டில் ஒன்றிணைந்த நேபாள இராச்சியம் அமைவதற்கு முன் வரை, சித்வான் சமவெளி காடுறை மக்களான கிராதர்களின் இராச்சியமாக இருந்தது.
இச்சமவெளியின் வரலாற்று புகழ்பெற்ற தலைநகரமாக உபர்தங்கதி நகரம் விளங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை சித்வான் சமவெளி முழுவதும் அடர்ந்த காட்டு நிலங்களாக இருந்தது. தற்போது சித்வான் சமவெளியில் பழங்குடி மக்களான தாரு மக்கள், தனுவார் மக்கள், தராய் மக்கள், மஜ்கி மக்கள் வாழ்கின்றனர்.[3] மேலும் செபாங் மக்கள், குரூங் மக்கள், மகர் மக்கள், சேத்திரி மக்கள், பகுன் மக்கள் போன்ற பழங்குடி மக்களும் வாழ்கின்றனர்.
சித்வான் சமவெளியில் 1980 முதல் மக்கள் தொகை வளர்ச்சி பெருகி, தற்போது இங்கு மக்கள் தொகை 2,60,000 ஆக உள்ளது. இம்மக்கள் முன்னூற்றி இருபது குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
தொகுவேளாண்மை
தொகுசித்வான் சமவெளியில் நீர் வளமும், நில வளமும் நன்கு அமைந்துள்ளதால், வேளாண்மைப் பயிர்கள் பயிரிடுவது முக்கியத் தொழிலாக உள்ளது. இச்சமவெளியில் நெல், கரும்பு, வாழை, கடுகு, கோதுமை, பருப்பு மற்றும் எள் முதலியன அதிகம் பயிரிடப்படுகிறது.
[3]
இச்சமவெளி மக்கள் வேளான்மைத் தொழிலுடன் தேன் உற்பத்திக்கு தேனீ வளர்ப்புத் தொழிலும்,[4], பட்டு நூல் உற்பத்திக்கு, பட்டுப் புழு வளர்ப்புத் தொழில் மற்றும் பால், தயிர், வெண்ணெய், நெய் உற்பத்திக்கு பசு, எருமை, ஆடு போன்ற கால்நடைகளையும் வளர்க்கின்றனர்.
தொழில்கள்
தொகு1998ல் இச்சமவெளியின் ஹெதௌதா நகரத்தில் இருபத்தி இரண்டு தொழில் அலகுகள் இருந்தன.
[5]2007ல் நெசவு, வேதியல், சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் மூலம் சமவெளியின் தொழில் துறை முன்னேறி வருகிறது.
தேன் உற்பத்தி மற்றும் பட்டு நூல் உற்பத்தியை அதிகரிக்க சமவெளியில் தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுப் புழு வளர்ப்பு அதிகரித்துள்ளது.
[6][7]
சுற்றுலா
தொகுநேபாளத்தின் மூன்றாவது சுற்றுலாத் தலமாக விளங்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, சித்வான் சமவெளியில் அமைந்த சித்வான் தேசியப் பூங்கா பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது. சுற்றுலாத் துறையின் வாயிலாக இச்சமவெளி வெளிநாட்டு பணத்தை அதிகம் ஈட்டுகிறது. சித்வான் தேசியப் பூங்காவின் நுழைவுப் பகுதியான சௌரகாவில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் அதிகம் உள்ளது.
சித்வான் தேசியப் பூங்காவின் மொத்த நிலப்பரப்பில் 70% காடுகள் கொண்டது. மேலும் உயரமான ஆசியா யானைப் புற்கள் இப்பூங்காவில் அதிகம் வளர்கிறது. இங்கு 700 வகையான காட்டுயிர்கள் உள்ளது. மேலும் பதினேழு வகையான பாம்பினங்கள், நட்சத்திர ஆமைகள், உடும்புகள், இத்தேசியப் பூங்கா வழியாக பாயும் நாராயணி-இரப்தி ஆறுகளில் 235 கரியால் வகை முதலைகள் உள்ளது.
43 வகையான பாலூட்டிகள் கொண்ட இப்பூங்கா, அதிக வங்காளப் புலிகளைக் கொண்டது. [8] வங்கப் புலிகளுடன், இந்தியச் சிறுத்தைகளும் இப்பூங்காவில் உள்ளது.[9] மேலும் சோம்பேறிக் கரடிகள், நீர்நாய்கள், வங்காள நரிகள், புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், கழுதைப்புலிகள் உள்ளன.[10] செந்நாய்கள், தங்க நிற குள்ள நரிகள், மீன்பிடிப் பூனைகள், சிறுத்தைப் பூனைகள், பெரிய மற்றும் சிறிய ஆசிய மரநாய்கள், நண்டை உண்ணும் கீரிகள், மஞ்சள் நிற தொண்டை கீரிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. [11]
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், காட்டு யானைகள், காட்டெருதுகள் அதிகமாக உள்ளது. [12] காட்டுப்பன்றிகள், கலைமான்கள், குரைக்கும் மான்கள், புள்ளிமான் கூட்டங்கள், புல்வாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மறிமான்கள், செம்முகக் குரங்குகள், அனுமார் குரங்குகள், இந்திய எறும்பு தின்னிகள், இந்திய முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில்கள் மற்றும் தேவாங்குகள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chitwan National Park
- ↑ Bhuju, U. R., Shakya, P. R., Basnet, T. B., Shrestha, S. (2007). Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். International Centre for Integrated Mountain Development, Ministry of Environment, Science and Technology, in cooperation with United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific. Kathmandu, Nepal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-9115-033-5
- ↑ 3.0 3.1 Agergaard, J. (1999) Settlement and changing land use in the Chitwan district of Nepal Geografisk Tidsskrift, Bind si01: 11-18
- ↑ Pokhrel, S. (2009) Comparative Benefits of Beekeeping Enterprise in Chitwan, Nepal The Journal of Agriculture and Environment Vol. 10: 39-50 pdf download
- ↑ Rural-Urban Partnership Programme (1998) Hetauda Market Zone Delineation Study pdf download பரணிடப்பட்டது 2009-08-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bhattarai, T.C., Sugiyama, M., Oguri, K. (1999) Poultry Production and Marketing – with comparison to other South Asian Countries. Bulletin of the Faculty of Regional Studies, Gifu University, Vol. 5.
- ↑ The Poultry Site (2009) Poultry Farming Moves away from Chitwan Centre. online news
- ↑ Barlow, A.; McDougal, C.; Smith, J. L. D.; Gurung, B.; Bhatta, S. R.; Kumal, S.; Mahato, B.; Tamang, D. B. (2009). "Temporal Variation in Tiger (Panthera tigris) Populations and its Implications for Monitoring". Journal of Mammalogy 90 (2): 472–478. doi:10.1644/07-mamm-a-415.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2009-04_90_2/page/472.
- ↑ McDougal, C (1988). "Leopard and Tiger Interactions at Royal Chitwan National Park, Nepal". Journal of the Bombay Natural History Society 85: 609–610.
- ↑ Jnawali, S. R., Baral, H. S., Lee, S., Acharya, K. P., Upadhyay, G. P., Pandey, M., Shrestha, R., Joshi, D., Lamichhane, B. R., Griffiths, J., Khatiwada, A. P., Subedi, N. and Amin, R. (compilers) (2011). The Status of Nepal’s Mammals: The National Red List Series. Department of National Parks and Wildlife Conservation, Kathmandu, Nepal.
- ↑ Thapa, K.; Kelly, M. J.; Karki, J. B.; Subedi, N. (2013). "First camera trap record of pack hunting dholes in Chitwan National Park, Nepal". Canid Biology & Conservation 16 (2): 4–7.
- ↑ WWF News (2008). Gaur Census in Parsa Wildlife Reserve பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம். wildcattleconservation.org
வெளி இணைப்புகள்
தொகு- Chitwan Valley [Nepal Family Study]
- Tharu Village - காணொளி