சினேகா

(சிநேகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சினேகா

இயற் பெயர் சுகாசினி ராஜாராம்
பிறப்பு அக்டோபர் 12, 1981 (1981-10-12) (அகவை 41)
மும்பை, இந்தியா[1]
நடிப்புக் காலம் 2000 - இன்றளவும்
குறிப்பிடத்தக்க படங்கள் சத்யா/ஜனனி - பார்த்திபன் கனவு
திவ்யா - ஆட்டோகிராப்
இணையத்தளம் http://www.sneha-online.com/

பிறப்பும் கல்வியும் தொகு

சினேகா தமிழ்நாட்டில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார்[1]. இவரின் குடும்பம் இவரின் பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.[சான்று தேவை]

திரைப்பட வாழ்கை தொகு

சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை தொகு

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்[2][2]. தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள். சினேகா தமது பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்

விளம்பர மாடலிங் தொழில் தொகு

சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ், ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.

பொது வாழ்வும் உதவியும் தொகு

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாளாக போராடினர். டெல்லியில் போராடிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.[சான்று தேவை]

நடித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா&oldid=3756786" இருந்து மீள்விக்கப்பட்டது