சிப்டா
சிப்டா (Siptah or Merenptah Siptah) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1197 முதல் கிமு 1191 முடிய 6 ஆண்டுகள் ஆண்டார். இவரது தந்தை இரண்டாம் சேத்தி அல்லது அமென்மெஸ்சியாக இருக்கலாம் எனத்தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர் இரண்டாம் சேத்தியின் மறைவிற்குப் பின் இளம் வயதில் அரியனை ஏறினார்.[3]
சிப்டா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1197 – 1191, 19-ஆம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் சேத்தி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | அரசி தௌசரத்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | இரண்டாம் சேத்தி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | சுதயில்ஜா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1191 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கேவி 47 |
இளம் வயதில் ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த சிப்டா, தனது 16வது வயதில் இறந்தார். இவர் போலியோ நோயால் இறந்தார் என இவரது மம்மியை மருத்துவ ஆய்வு செய்த போது அறியப்பட்டது. மேலும் இவரது இடது கால் போலியோ நோயால் பாதிக்கப்பட்டது அறிய முடிந்தது.[4][5]
இளம் வயதில் மறைந்த பார்வோன் சிப்டாவிற்குப் பின் அவரது மனைவியும் அரசியுமான {அரசி தௌசரத்து|தௌசரத்]] எகிப்தை ஆண்டார். மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 47-இல் மம்மியாக அடக்கம் செய்யப்பட்டார்.[6]1898இல் அவரது மம்மியை, பிற 18 மம்மிகளுடன், பார்வோன் இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல், 2021-இல் எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது சிப்டாவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7]
பார்வோன்களின் அணிவகுப்பு
தொகு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் சிப்டா மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Dodson, A.; Poisoned Legacy: The Decline and Fall of the Nineteenth Egyptian Dynasty, American University Press, Cairo, (2010) A3
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994. p.158
- ↑ Jürgen von Beckerath, Chronologie des Pharaonischen Ägypten, MAS:Philipp von Zabern, (1997), p.201
- ↑ Callendar, p.52
- ↑ G.E. Smith, The Royal Mummies (Cairo 1912), pp.70-73
- ↑ "KV 47 (Siptah) - Theban Mapping Project". www.thebanmappingproject.com. Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
- ↑ 7.0 7.1 7.2 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.